- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டெம்பர் , 01. முற்பகல் 11.00 ) 69 லட்சம் முட்டாள் மக்கள் பிரார்த்தனை செய்தது போலவே ஹட்லர் ஒருவருக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் 30ம் திகதிக்குப் பின் பெற்றுக் கொண்டுள்ளார். மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியங்களை விநியோகிக்கும் மற்றும் சேவைகளை முன்னெடுத்துச் செல்லல் அத்தியாவசிய உணவுகளை விநியோகிக்கும் தேவைகளுக்கு என்று கூறி உண்மைகளை மூடி மறைத்து கொலை செய்யும் அவசர கால சட்டங்கள் அனைத்தையும் வர்த்தமானி ஊடாக அறிவித்து செயற்படுத்தி உள்ளார். வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் தற்போது வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 தொற்றுப்பரவல் நிலைமையினுள், இலங்கையில் பொது மக்கள் அவசர கால நிலைமை நிலவுவதன் காரணமாக, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலைமையைப் பாதுகாத்தல் மற்றும் பொது மககள் வாழ்க்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் மற்றும் சேவைகளை நடத்திச் செல்லல் என்பவற்றுக்காக இவ்வாறு செயவது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றதென நான் கருதுவதாலும்,
" சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தினாலும் மற்றும் தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்ட ( 40 ஆம் அத்தியாயமான ) பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் எனக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் அக்கட்டளைச் சட்டத்தின் ஐஐ ஆம் பகுதியின் ஏற்பாடுகளை அமுல்படுத்தி அதன் 5 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் வண்ணம் ஆக்கப்பட்ட, அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான அவசர கால சட்ட ஒழுங்கு விதிகளை இலங்கை முழுவதும் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டு ஓகத்து மாதம் 30 ஆந் திகதி இவ்வேளையில் இருந்து அமுலுக்கு வர வேண்டுமென பிரகடனத்தின் மூலம் வெளிபபடுத்துகின்றேன். "
இதில் " பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் எனக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் அக்கட்டளைச் சட்டத்தின் ஐஐ ஆம் பகுதியின் ஏற்பாடுகளை அமுல்படுத்தி.." என்று மூடி மறைத்து அமுல்படுத்தி இருப்பது கொலை செய்யும் கட்டளைச் சட்டமான அவசர கால கட்டளைச் சட்டமாகும். பொதுவாக இந்த இரண்டாம் பிரிவை செயற்படுத்திக் கொள்ள தனியான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும் என்ற போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அதனை மறைத்து வௌியிட்டுள்ளார்.
அதன்படி ஆகஸ்ட் 30 ம் திகதிக்குப் பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் கிடைத்துள்ளதுடன் இராணுவ கட்டளையை மீறி செயற்படும் எந்த ஒரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொலை செய்யவும் அதற்கான காரணத்தை விளக்கமளிக்காது தண்டனையும் பெறாது சுதந்திரமாக இருக்க முடியும்.
நாட்டின் சிவிலியன்களான பொது மக்களை சோதனை செய்வதும் அவர்களை கைது செய்வதும் பொலிஸாருக்கு உள்ள அதிகாரம் என்ற நிலையில் ஓகஸ்ட் 30 ம் திகதிக்குப் பின் இலங்கை இராணுவத்திற்கும் அதனை செய்ய முடியும். அதன்படி நீதிமன்ற பிடியாணை இன்றி எந்த ஒரு இடத்திற்கும் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தவும் எந்த ஒரு நபரையும் கைது செய்யவும் இடத்தை கூறாமல் தடுத்து வைக்கவும் இராணுவத்தால் முடியும்.
இராணுவத்திற்கு தேவை என்றால் தண்டனையும் வழங்க முடியும். கட்டளைக்கு அடங்காது செயற்படும் நபர் ஒருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யாது குற்றவாளியாக மாற்ற முடியும் என்பதுடன் மூன்று மாதங்களுக்கு குறையாத 20 வருடங்களுக்கு கூடாத காலத்திற்கு சிறை வைக்க முடியும் என்பதுடன் தண்டப் பணமும் அறவிட முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீதி கோரி எந்த ஒரு நீதிமன்றுக்கு செல்லவோ மேன்முறையீடு செய்யவோ எந்த ஒரு நபருக்கும் உரிமை அதிகாரம் இல்லை.
தற்போது தனி நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரம், சான்றிதழ் என்பவற்றை தேவை ஏற்பட்டால் இரத்து செய்யவும் முடியும். இல்லையேல் அனுமதிப் பத்திரம் அல்லது சான்றிதழை கையகப்படுத்தி அதனை தாம் விரும்பும் வேறு நபர்களுக்கு வழங்கலாம். இல்லையேல் புதிதாக பணம் அறவிட முடியும்.
கைது செய்து தண்டனை வழங்குவதை இராணுவ நீதிமன்றின் ஊடாக அல்லது கட்டளைகள் பிரகாரம் செயற்படுத்த முடியும். அவ்வாறு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதோ அல்லது முறையீட்டை விசாரணை செய்வதோ முடியாத காரியம்.
சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை, அமைதியாக கூட்டம் கூடும் உரிமை, தொழிலுக்குச் சென்று வரும் உரிமை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் உரிமை போன்ற அனைத்து மனித உரிமைகளும் இரத்து செய்யப்படுவதுடன் இராணுவத்திற்கு தேவை என்றால் எந்த ஒரு இடத்திலும் சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்ள முடியும்.
அதன்படி எந்த ஒரு ஊடக நிறுவனம், தொழிற்சங்க நிறுவனம் என்பவற்றை கையகப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ முடியும்.
இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் உரிமை இரத்து செய்யப்படும்.
உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யும் உரிமையும் இரத்து செய்யப்படும்.
சட்ட மூலம் ஒன்றை சட்டமாக்கிக் கொள்ள பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவையோ உயர் நீதிமன்றில் வியாக்கியானம் கேட்க வேண்டிய தேவையோ அவசியமோ கிடையாது.
சுருக்கமாகச் சொன்னால் மேலே கூறிய இலக்கம் இரண்டு என்ற கட்டளையின் பிரகாரம் நாட்டின் ஏனைய அனைத்து சட்டங்களும் வலுவிழந்து இந்த சட்டமே உச்சத்தில் இருக்கும். அதனை ஜனாதிபதியால் ஒரே வார்த்தையில் செயற்படுத்த முடியும்.
நாடு இவ்வாறான ஒரு சட்டத்திற்கு முகங் கொடுப்பது அங்கு யுத்தம் இடம்பெறும் காலத்தில் ஆகும். இலங்கை சுதந்திரம் பெற்ற பின் 1971 ம் ஆண்டு இனக் கலவரம் ஏற்பட்ட போதே இந்த அவசர கால சட்டம் அமுலில் இருந்தது. அதன் பின் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் அவசர நிலை அல்லாது பொது சட்டங்களின் கீழ் 2011 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை ஆட்சியில் இருந்தன. 2009 யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் இருந்தன. 40 வருடங்கள் ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது தேவைக்கு ஏற்ப சட்ட திட்டங்களை மாற்றி ஆட்சி புரிந்தன. அவசரகால சட்டத்தை மாதத்திற்கு ஒரு முறை பாராளுமன்றில் அனுமதி பெற்று செயற்படுத்தி வந்தன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தின் ஜனாதிபதி இதனை பயன்படுத்துவது விளையாட்டாகும்.
எனினும் நாட்டில் தற்போது இருப்பது தொற்று நோயே தவிர யுத்தம் அல்ல. அதனால் இவ்வாறான முட்டாள் தன ஏகாதிபதி அதிகாரம் அவசியமில்லை. ஏகாதிபதி அதிகார போதையில் இருக்கும் முட்டாள் ஆட்சியாளருக்கே இவ்வாறான அதிகாரங்கள் தேவை. ஆனால் கையில் டொலர் இல்லாத அரசாங்கத்தின் ஏகாதிபதித்துவ ஆட்சியாளருக்கு ஒரு மயிரையும் பிடுங்க முடியாது. ஆனால் மக்களை கொலை செய்தேனும் இறுதி வரை அதிகாரத்தில் இருந்து விட வேண்டும் என்ற போதையில் ஒவ்வொரு ஏகாதிபதித்துவ ஆட்சியாளரும் இருந்துள்ளதை வரலாறு சான்று கூடும். ஆனால் அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏகாதிபதி ஆட்சியாளரை மாத்திரமன்றி அவரது கூட்டத்தையே மக்கள் விரட்டி அடித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்வோம்.
---------------------------
by (2021-09-03 05:53:22)
Leave a Reply