~

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கை நபர் குறித்து கோட்டா அரசாங்கம் மௌனம்..! கப்ராலின் மச்சான் தப்பி ஓட்டம்..!

( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர். 04 , முற்பகல் 11.05 ) நியூஸிலாந்தின் ஓக்டன்ட் நகர் பல் பெருள் அங்காடியில் 6 பேரை கத்தியால் குத்தி ஐ எஸ் ஐ எஸ் அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த இளைஞரின் செயல் காரணமாக அங்கு உள்ள ஏனைய இலங்கை பிரஜைகள் எதிர் நோக்கி வரும் அசௌகரியங்களில் இருந்து அவர்களை மீட்டு அவர்களின் கௌரவத்தை பாதுகாக்கவென கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதுடன் இதனால் நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

கடந்த வௌ்ளிக்கிழமை அன்று 3 ம் திகதி பகல் வேளையில் நியூஸிலாந்து ஒக்லன்ட் நகரில் உள்ள பல் பொருள் அங்காடிக்குள் நுழைந்த பயங்கரவாதியான இலங்கை இளைஞன் அங்காடியில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து அங்கு வந்திருந்தவர்களில் ஆறு பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். கத்திக் குத்தில் காயமடைந்த ஆறு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடம் என நியூஸிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு தனி ஓநாய் ... 

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட நியூஸிலாந்து பிரதமர் ஜயின்டா ஆர்பர்ன் குறித்த தாக்குதலை நடத்திய இளைஞன் 2011 ம் ஆண்டு இலங்கையில் இருந்து நியூஸிலாந்திற்கு வந்ததாகவும் அவர் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கை கொண்டவர் எனவும் அந்த சந்தேகத்தின் பேரில் 2016 ம் ஆண்டுக்குப் பின் இரகசிய பொலிஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் ஐ எஸ் ஐ எஸ் அடிப்படைவாத கொள்கைளால் கவரப்பட்டவர் என்ற போதும் அவர் ஒரு தனி ஓநாய் என்று நியூஸிலாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  

லங்கா ஈ நியூஸ் இணைய தளத்திற்கு கிடைத்துள்ள தகவல் படி குறித்த இளைஞன் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். நியூஸிலாந்து பிரதமர் ஜயின்டா ஆர்பர்ன் மற்றும் அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் அன்ட்ரு கொஸ்டர்  ஆகியோர் கருத்து படி குறித்த இளைஞனை இரகசிய பொலிஸார் பின் தொடர்ந்து கண்காணித்து வந்த போதும் கைது செய்து சிறையில் வைக்கும் அளவிற்கு அவர் குற்றங்கள் எதனையும் செய்திருக்கவில்லை. அதனால் இளைஞன் தொடர்பில் கூடிய கவனம் மாத்திரமே செலுத்தப்பட்டு வந்தது. சம்பவம் நடைபெற்ற வௌ்ளிக்கிழமை நாளன்று வழமை போல குறித்த இளைஞன் பல் பொருள் அங்காடிக்கு சென்ற வேளை இரகசிய பொலிஸார் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். கத்தியை எடுத்து அங்குள்ளவர்களை இளைஞன் குத்த தொடங்கிய உடனேயே அங்கு நுழைந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொலை செய்துள்ளனர். பொலிஸ் ஆணையாளர் கொஸ்டர் கூறும் தகவல் படி கத்தி குத்து தொடங்கி 60 செக்கன்களில் இளைஞன் கொல்லப்பட்டு அழிவுகள் குறைக்கப்பட்டுள்ளது.  

அண்மைக் காலத்தில் நியூஸிலாந்தில் இடம்பெற்ற இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 15 ம் திகதி கிரிஸ்ட்சேர்ச் இஸ்லாமிய பள்ளியில் வௌ்ளை இன அடிப்படைவாத பயங்கரவாதி ஒருவர் 51 முஸ்லிம் நபர்களை கொலை செய்தார். 

இந்த தாக்குதலானது நியூஸிலாந்தில் உள்ள இஸ்லாமிய நபர்களுக்கு எதிரான ஒன்றாக மாறி விடும் அச்சம் இருப்பதாக அந்நாட்டு பொலிஸ் ஆணையாளரிடம் வினவிய போது அதற்கு பதில் அளித்த அவர், அவ்வாறு நடந்தால் அது முற்றிலும் தவறான ஒன்று என்றார். 

கப்ராலின் மச்சான் தப்பி ஓட்டம் ... 

எனினும் நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இது மிகவும் அகௌரவமான சம்பவமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சத்தை தனிப்பதற்கு இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ முட்டாள் அரசாங்கம் இதுவரையில் எதனையும் செய்யவில்லை. உண்மையில் நியூஸிலாந்தில் மாத்திரமன்றி எங்கு நடந்தாலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர் தொடர்பு பட்டிருப்பது இலங்கைக்கு பெரும் அகௌரவமாகும். அதனால் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் கருத்து வௌியிட வேண்டியது அவசியம். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.  

இலங்கைக்குத் தேவையான பால் மா அதிகளவு நியூஸிலாந்தில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன் இலங்கை - நியூஸிலாந்துக்கு இடையில் வர்த்தக தொடர்பகள் அதிகம் உள்ளன. நியூஸிலாந்திற்கான இலங்கையின் கொன்சுல் ஜெனரலாக இலங்கை இராஜாங்க நிதி அமைச்சர் அஜிட் நிவாட் கப்ராலின் மச்சான் முறையான அருண அபேகுணசேகர என்பவர் செயற்பட்டார். அவர் யாருக்கும் கூறாமல் அந்த பதவியை விட்டு தப்பிச் சென்று மாதக் கணக்காகிறது. பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் கீழ் நியூசிலாந்து கொன்சுல் ஜெனரல் காரியாலயம் இயங்கி வருகிறது. எனினும் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. சுமார் 22 மாதங்கள் பதில் உயர்ஸ்தானிகர் ஒருவரே கடமையில் இருந்து வருகிறார். நாட்டுக்கு தேவையான முக்கிய நாடுகளில் உயர்ஸ்தானிகர்கள் இல்லை. முட்டாள் அரசாங்கத்திற்கு தெரிந்த இராஜதந்திரமும் இல்லை. 

இந்த சம்பவம் குறித்து குறைந்தது நியூஸிலாந்து அரசாங்கத்திற்கு கவலை தெரிவிக்க இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை. அதனால் நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 

பயங்கரவாதிகளுடன் கொடுக்கல் வாங்கல் உறவு வைத்திருக்கும் அரசாங்கம் ... 

இலங்கை முட்டாள் அரசாங்கத்திற்கு அவ்வாறு செய்ய முடியாத போதும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை பிடித்த உடனேயே, குறைந்தது ஆப்கானிஸ் தலிபான்களுக்கு இதுவரை ஆட்சி அமைக்க முடியாத நிலையிலும் தலிபான்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இலங்கை அரசாங்கம் முந்திக் கொண்டு செயற்பட்டது. அதற்கு காரணம் தலிபான் பயங்கரவாாதிகள் பின்னணியில் சீனா இருப்பதால் இலங்கை அவ்வாறு அவசரமாக வாழ்த்துக் கூறியது. 

நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது இவர்கள் பயங்கரவாதிகளுடன் கொடுக்கல் வாங்கல் உறவு வைத்திருப்பதனாலோ தெரியவில்லை. நாட்டில் இடம்பெற்ற ஞாயிறு தாக்குதல் விடயத்திலும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் பின்னணியில் இருப்பது நாட்டு மக்களுக்கு தெரியாமல் இல்லை. ஞாயிறு தாக்குதலுக்கு அரசாங்க மட்டத்தில் வசதி செய்து கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- அலுவலக செய்தியாளர்

---------------------------
by     (2021-09-04 12:02:55)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links