- LeN உள்ளக தகவல் சேவை வௌியீடு
( லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர், 13 , முற்பகல் 07.40 ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கி உள்ளதன் பின்னணியில் அரசாங்க ஆட்சியை புரிந்து வரும் இராணுவம் அப்பாவி பொது மகன் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்து சம்பவத்தை வௌிவராது தடுப்பதற்கு சட்டத்தை இரும்பு பாதணிகள் கொண்ட கால்களால் நசுக்கி பயங்கர விடயத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான செய்தி ஒன்று லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு வந்துள்ளது. சம்பவம் வௌி வந்து மூன்று நாட்கள் கடந்தும் எந்த ஒரு ஊடகத்திலும் அதனை பகிரங்கப்படுத்த விடாது மறைத்து வைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
வௌி வரும் தகவல் படி கொலை இடம்பெற்றது இவ்வாறு,
மட்டக்குளி சமிட்புர பிரதேச கிராம சேவகரின் கணவரான அக்கில என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராம சேவகரான பெண் மட்டக்குளி இராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரி ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்துள்ளார். அதனால் கிராம சேவகரின் கணவரான அக்கில இராணுவ அதிகாரிக்கு ' பெரும் தொந்தரவாக ' இருந்துள்ளார். இதனால் அக்கில கிராம சேவகர் அலுவலகம் சென்று வீடு திரும்பும் போது மேட்டார் சைக்கிளுடன் அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் கயிற்றால் கட்டிய அக்கிலவின் சடலம் கடலில் மிதந்து கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 21 ம் திகதி இந்த சடலம் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை மோதர வல குற்ற விசாரணை பிரிவினர் DCDB முன்னெடுத்து வருகின்றனர். DCDB பிரிவு நடத்திய விசாரணையில் அக்கில வாய் மற்றும் முகம் மறைத்து பொலித்தீன் உரையில் கட்டப்பட்டு உயிரிழந்ததாகவும் பின்னர் கயிற்றில் கட்டி களனி கங்கையில் சடலம் வீசப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. பின்னர் நீச்சல் வீரர்கள் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் அக்கில இறுதியாக பயணித்த மோட்டார் சைக்கிளின் பாகங்கள் களனி கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய DCDB பிரிவு மட்டக்குளி இராணுவ முகாம் கட்டளை இடும் அதிகாரியின் தொலைபேசி உரையாடலுக்கும் கொலைக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் அக்கிலவை கடத்த மட்டக்குளி இராணுவ முகாம் வாகனம் ஒன்று பயன்படுத்தப் பட்டுள்ளமையும் தெரிய வந்தது. குறித்த வாகனம் போதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்குளி இராணுவ முகாம் கட்டளை இடும் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் போதைப் பொருள் சுற்றி வளைப்பு இராணுவத்திற்கு கொடுப்பப்படவில்லை. இராணுவம் அவ்வாறு தகவல் பெற்றால் அதனை சுற்றி வளைப்பு செய்யும் பொலிஸ் பிரிவிற்கு அறிவிக்க வேண்டும்.
எனினும் கொலையுடன் நேரடியாக தொடர்பு பட்ட மட்டக்குளி இராணுவ முகாம் கட்டளை இடும் அதிகாரி கடந்த செப்டெம்பர் 11 ம் திகதி DCDB பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதும் இராணுவ அழுத்தம் காரணமாக வாக்கு மூலம் கூட பெற்றுக் கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தக் கட்ட விசாரணைகளுக்கு பொலிஸார் மட்டக்குளி இராணுவ முகாமிற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேவைப்படும் ஏனைய சந்தேகநபர்களை இராணுவ முகாம் உள்ளே மறைத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவ கட்டளை இடும் அதிகாரியை நீதிமன்றில் ஆஜர் செய்து மேலதிக விசாரணைகள் நடத்தவும் இடமளிக்கப்படவில்லை. ஊடகங்களில் இருந்தும் இந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்தும் இலங்கயைில் உள்ள அப்பாவி ஊடகவியலாளர்கள் அது குறித்து தகவல் திரட்டி வௌியிடாது உள்ளனர்.
இராணுவத்தில் உள்ள சில கைக்கூலிகளால் செய்யப்படும் இவ்வாறான கொலை ' இராணுவம் ' என்ற லேபலுக்கு அடியில் மறைத்து வைக்கும் செயற்பாடுகள் முதல் நிலையில் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஓகஸ்ட் 30 ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்ற போர்வையில் மறைத்து வைத்து வௌியிட்ட அவசர கால சட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இராணுவத்தினருக்கு பொலிஸ் அதிகாரிகள் அனைத்தும் கிடைத்துள்ள நிலையில் இராணுவ கட்டளையை மீறி செயற்பட்டதாகக் கூறி பொது மகன் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முடியும் என்பதுடன் அந்த கொலைக்கான காரணத்தை கூறாது சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இராணுவத்திற்கு முடியும் என லங்கா ஈ நியூஸ் செம்டெம்பம் 1 ம் திகதி செய்தி வௌியிட்டது. அதன்படி இந்த குற்றம் வர்த்தமானி அறிவித்தல் வருவதற்கு முன்னரே செய்யப்பட்டுள்ளது.
---------------------------
by (2021-09-13 17:47:36)
Leave a Reply