~

கொலைகாரன் லொஹான் ரத்வத்த அனுராதபுர சிறைக்குள் குடி போதையில் நுழைந்து சிறைக்கைதிகளை மண்டியிட வைத்து துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..!

 ( லங்கா ஈ நியூஸ் - 2021, செப்டம்பர், 15 முற்பகல் 05.05 ) கடந்த 12 ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர் கொலைகார லொஹான் ரத்வத்த குடிபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளை அழைத்து மண்டியிட வைத்து தனது தனிப்பட்ட துப்பாக்கியை அவர்களது தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

 கடந்த 12 ஆம் திகதி இரவு 10 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அத்துமீறி நுழைந்த ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு சுமார் ஐந்து வருடங்கள் வழக்கு விசாரணை இன்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். இதன்போது லொஹான் ரத்வத்த அதிக குடி போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு பட்ட சந்தேகத்தில்  குறித்த கைதிகள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக எவ்வித சாட்சிகளும் இல்லை. இதுவரையில் அவர்களிடம் குற்றப்பத்திரிகை எதுவும்  கையளிக்கப்பட வில்லை. அரசாங்கம் முன்வைக்கும் பொய் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள இந்த கைதிகள் விரும்பவில்லை. அதனால் வழக்கு விசாரணை இன்றி   பல வருடங்களாக குறித்த கைதிகள் அநீதியான முறையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

 ஒவ்வொரு கைதிகளாக தனியே அழைத்து விசாரணை செய்த ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஒரு கைதியை அழைத்து கேள்வி எழுப்பியபோது அதற்கு அந்த கைதி வழங்கிய பதிலால் கோபமடைந்த அவர் 'இவன் பொய் சொல்கிறான்' என்று கூறி தன் வசம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்தக் கைதியின் தலையில் வைத்து 'நீ உண்மையை சொல்லாவிட்டால் இங்கேயே உன்னை கொலை செய்து விடுவேன்' என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த சிறைச்சாலை அதிகாரி துப்பாக்கியை அகற்ற முற்பட்டபோது சிறைச்சாலை அதிகாரியையும் லொஹான் ரத்வத்த கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

 சிறைச்சாலை அதிகாரிக்கு கூட ஆயுதத்துடன் சிறைக்கூடத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குழுவாகவும் சிறை கூடத்திற்கு உள்ளே செல்ல முடியாது. குடிபோதையில் யாருக்கும் உள்ளே செல்ல முடியாது. சிறைக்கைதிகள் புனர்வாழ்வு என்ற பெயரில் இராஜாங்க அமைச்சர்  கைதிகளை விசாரிக்கவும் அச்சுறுத்தல் கொடுக்கவும் துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டவும் கொலை அச்சுறுத்தல் விடவும் ஒருபோதும் முடியாது. 

 சம்பவம் இடம்பெற்ற செப்டம்பர் 12 ஆம் திகதி சர்வதேச சிறைக்கைதிகள் தினம் என்பது விசேட அம்சமாகும். சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தில் இந்த அளவு மோசமான நிலையில் கைதிகளை அச்சுறுத்திய விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். 

 லொஹான் ரத்வத்த என்பவர் உடத்தலவின்னை கூட்டுக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் ஆவார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். வெளிநாட்டு ரகர்  பயிற்சிவிற்பாளரான     ஜோயல் பெரேசிரா  என்பவரை இரவு நேர களியாட்ட விடுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரும் லொஹான் ரத்வத்த ஆவார். தனது தந்தை பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பதால் வழக்கு விசாரணை இன்றி  தப்பித்துக் கொண்டார்.

 இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கடுமையான கண்டனத்தை வெளியிட்டு இருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உடனடியாக லொஹான் ரத்வத்த பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இதுதொடர்பில் தொலைபேசி ஊடாக ஜனாதிபதியுடன் உரையாடியதாகவும் லொஹான் ரத்வத்தவை தொலைபேசியில் அழைத்து பதவி விலக வலியுறுத்தியதால் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். 

---------------------------
by     (2021-09-17 00:40:53)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links