~

ஐயோ எங்களுக்கு உதவி செய்யுங்கள்..! மெதமுலன விசுவாசிகளான பிக்குகள் சிலருக்கு பாதுகாப்பு அமைச்சு நடத்திய செயலமர்வு..! சதி முயற்சி படுதோல்வி..!

- எழுதுவது ரசல் ஹேவாவசம்

(லங்கா ஈ நியூஸ் - 2021 , செப்டெம்பர் , 25. பிற்பகல் 10.50 ) இலங்கையில் நடத்தப்பட்ட மிகவும் மிளேச்சத் தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி பல்லேவத்த கமராலாகே மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இருப்பது போலவே  இலங்கையின் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து தற்போதைய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தாக்குதலுடன் தொடர்பு பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் சமூகத்தில் பரவலாக எழுந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தொடர்ந்தும் மூடி மறைக்க தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் அரசாங்கம் கேடுகெட்ட நடவடக்கைகளை முன்னெடுத்து வருவதை லங்கா ஈ நியூஸ் ஊடாக அம்பலப்படுத்த விரும்புகிறோம். நாம் இந்த கட்டுரை ஊடாக உங்களிடம் முன் வைக்க விரும்புவது உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகளை காப்பாற்ற எடுக்கப்ப்பட்டு வரும் புதிய முயற்சி குறித்து ஆகும்.  

பிக்குகள் சிலருக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பயிற்சி செயலமர்வு .... 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வௌியாகும் தகவல்களை மூடி மறைக்க, அடுத்தக் கட்ட விசாரணைகளை முடக்க மற்றும் தன்னை நோக்கி நீட்டப்படும் விரல்களை திசை திருப்ப ராஜபக்ஷ அரசாங்கம் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது. ( அந்த முயற்சி தற்போது படு தோல்வியில் சென்று கொண்டிருக்கிறது. )

இதோ அந்த முயற்சியின் ஒரு பாகம். 

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மேஜர் கமல் குணரட்ன ஊடகங்களுக்கு முன் வந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை என தெரிவித்தர். பின்னர் அவரது ஏற்பாட்டில் அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள ராஜபக்ஷ நிக்காயவின் முக்கிய பிக்குகள் அழைக்கப்பட்டிருந்தனர். பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்களிடையே மதரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ள உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து எப்படியாவது மீட்டுத்தருமாறு குறித்த பிக்குகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.   

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிக்கும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிலரைப் பயன்படுத்தி இந்தப் பிக்குகளுக்கு செயலமர்வு நடத்தவும்  வழிகாட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆணைக்குழு தடை செய்ய கோரிய நபரும் அந்தக் குழுவில்.. 

பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த செயலமர்வு திட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பொய் பேராசிரியர் மெதகொட அபய திஸ்ஸ தேரர், மெடில்லே பஞ்சாலோக்க தேரர், பேகல்கந்தே சுதத்த தேரர், குட்டி யானை ஒன்றை திருடிய சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரர் உள்ளிட்ட பௌத்த சாசனத்தை அழிக்கும் பௌத்த தர்மத்திற்கு எதிராக செயல்படும் தேரர்கள் உள்ளடங்குவர். 

இதில் உள்ள மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆணைக்குழுவில் தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'பொதுபல சேனா' அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் உள்ளடங்குகிறார். குறித்த பிக்குகள் குழுவின் தலைவராகவும் அவர் தெரிவாகி உள்ளார். 

இதன்போது செயலமர்வு நடத்தியவர்கள், " எங்களது தேரர்களே பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் ..  சர்வதேச விசாரணையை கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை குத்த வேண்டும், இஸ்லாமிய தீவிரவாதிகளான ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் முத்திரை குத்த வேண்டும், தலிபான்களின் முத்திரையும் குத்தலாம். இவற்றை செய்ய முடியாது போனால் பாலியல் வன்புணர்வு முத்திரை குத்தியேனும் அரசாங்கத்தையும் புலனாய்வு பிரிவினரையும் நிலந்த உள்ளிட்ட குழுவினரையும் பாதுகாக்க முன்வாருங்கள் .. " என்று பிக்குகளிடம் கேட்டுள்ளனர். 

இந்த செயல் அமர்வின் பின்னர் ஊடகங்களுக்குக் குறித்த பிக்குகளும் அவர்களோடு இணைந்த சில அணிகளும் இலங்கை கத்தோலிக்க சபைக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்தனர். கத்தோலிக்க சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஆத்திரமூட்டும் வகையில் இவர்களது கருத்துகள் அமைந்திருந்தன. விடுதலைப் புலிகள் ஐ எஸ் ஐ எஸ் தலிபான் போன்ற குழுவினரின் முத்திரை குத்தி மோசமான கருத்துக்களை வெளியிட்டனர்.

யாருடைய ஒப்பந்தம் என்பதை முழு நாடும் அறியும் ..

பௌத்த தர்மத்தை நாசமாக்கும் இந்த பிக்குகள் தங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தை குற்றங்களல் இருந்து காப்பாற்றுவதற்கும் மூடி மறைப்பதற்கு மறைமுகமாக செயல்பட்டு வருவதை நாம் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டி இருந்தோம்.  இந்த பிக்குகளின் கருத்துக்களால் நாட்டில் தற்போது கத்தோலிக்க மக்கள் ஒருவகையான பதட்டத்தில் உள்ளனர். எந்த ஒரு அடிப்படையும் இன்றி இந்த பிக்குகள் ஊடக சந்திப்பு நடத்தி இவ்வாறு கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது யாருடைய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக என்பதை முழு நாட்டு மக்களும் அறிவர். இந்தத் திட்டத்தின் மறைமுக நோக்கம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை காப்பாற்றுவதாகும். 

மற்றுமொரு பக்கத்தில் ஒருபோதும் இல்லாத அளவு அரச ஊடகங்களும் சில தனியார் ஊடகங்களும் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகளை மூடி மறைப்பதற்கு தேவையான உதவி ஒத்துழைப்புக்களை வழங்க ஆரம்பித்துள்ளன. ஊடக நிறுவனங்களாக இருந்து கொண்டு வெட்கமின்றி அவர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ராஜபக்ச அரசாங்கத்தின் சலுகைகளை பெறவும் புலனாய்வுத் தரப்பினரை காப்பாற்றவுமே இவ்வாறு செய்கின்றனர். 

இதிலுள்ள விசேடமான விடயம் என்னவென்றால் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்ப முற்படுகின்ற போதிலும் நாட்டு மக்கள் அதனை நன்கு விளங்கிக் கொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இத்தாலியின் பொலங்கோ நகரம் தொடக்கம் பிரான்ஸ் வழியாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருமாறு இந்த அலை நீண்டு செல்கிறது.

அடுத்த இலக்கு ' நிகழ்ச்சி ' ஒன்றாகும் ..    

முன்னர் செய்தது போல உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை மூடி மறைக்க முடியாத அளவிற்கு நாட்டு மக்கள் மாறி விட்டார்கள் என்பதே பௌத்த பிக்குகளும் ராஜபக்சே நிக்காய உறுப்பினர்களும் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் இவர்களின் அடுத்த நோக்கம் 'சம்பவம்' ஒன்றை உருவாக்கி “ event ” அதன் மூலம் இலக்கை அடைவதாகும். அதாவது ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் போலவோ அல்லது அதற்கு குறைவான உயிரிழப்புகள் ஏற்படுவது போலவோ தாக்குதல் ஒன்றை நாட்டில் நடத்தினால், தமிழ் அல்லது முஸ்லிம் நபர்களை அதனுடன் தொடர்புபடுத்தி ' பிரதான சூத்திரதாரிகள் நாங்கள் இல்லை. எங்களையும் கொள்கிறார்கள் ' என்று பிரச்சாரம் செய்து நாட்டினுடைய ' தேசிய பாதுகாப்பு ' மீண்டும் அச்சத்தில் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி விடலாம் என இந்தத் திட்டத்தின் சூத்திரதாரிகள் அல்லது ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகளை மூடி மறைக்க முயற்சிக்கும் நபர்கள் நம்புகின்றனர்.

அதனால் தான் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் போலான ஒரு தாக்குதல் நாட்டில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மெதமுலன நிக்காயவின் தலைமைப் பிக்கு ஞானசார தேரர் அண்மையில் தகவல் வெளியிட்டார். இதன் ஒரு அங்கமாகவே கொழும்பு தனியார் வைத்தியசாலை மலசல கூடத்தில் இருந்து கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டது. 

இதனால் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கத்தோலிக்க மக்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சுமார் 300 உயிர்களை பலி கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அதுவல்ல.

இந்த தாக்குதலின் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட தீ வைத்து அதில் ஆக்ஸிஜன் பெற்றுக் கொண்டது இந்த சூத்திரதாரியின் திட்டம். அதனால் மீண்டும் இனப் பிளவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நாட்டு மக்கள் உண்மை நிலையை நன்கு புரிந்து கொண்டு அனைவரும் இன மத பேதமின்றி ஒன்று சேர்ந்து ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் குற்றவாளிகள் அல்லது பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவர். இதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்.

கத்தோலிக்க சபைக்கு எச்சரிக்கை ...

நாட்டில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடும் பௌத்த பிக்குகள் நாட்டின் அனேக பௌத்த மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். இந்தக் கூட்டத்தில் ஒருவர் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கினார். இதன்போது பௌத்த மக்கள் குறித்த நபரை நிலத்தில் அடிப்பது போன்று படு தோல்வி அடையச் செய்து பாடம் புகட்டினார். அவர்தான் மெதமுலன நிக்காயவின் தலைமைப் பிக்கு கலகொட அத்தே ஞானசார தேரர். இந்தக் குழுவினர் பௌத்த மக்களிடையே நம்பிக்கை இழந்து அவர்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வாறு இயங்குவதற்கு காரணம் அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் ' எண்ணெய் '  என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

அதனால் கத்தோலிக்க சபை ஆயர்கள் இந்த பிக்குகளின் கருத்துக்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் முன் வைத்த யோசனைகளை நிறைவேற்றக் கோரியும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமைதியாக இருந்து நியாயமான சர்வதேச விசாரணை ஒன்றே கோருவதாகும். அதற்காக செயல்பட வேண்டும்.  அதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும். 

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை மூடி மறைக்க முயற்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரின் விசாவை தடை செய்தல், வங்கி கணக்குகளை தடை செய்தல் போன்ற சர்வதேச தடைகளை பெறுவதற்கு கத்தோலிக்க சபை ஆயர்கள் செயல்பட வேண்டும். 

மெதமுலன நிக்காயவை சேர்ந்த பிக்குகளின் கருத்துக்களுக்கு பதில் கூறும் வகையில் ஊடக அறிக்கைகளை விடுவதோ ஊடக சந்திப்புகளை நடத்துவதோ அரசாங்கத்தின் இந்த பிக்குகளுக்கு மேலும் எண்ணெய் வழங்குவதற்கான வாய்ப்பாக அமையும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவே இந்த பிக்குகளின் அடிப்படையற்ற கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் அவர்களுடைய வாய்கள் தானாகவே அடைக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறப் போனால் இனங்களுக்கு இடையிலான பிளவு விரிவடைந்து அது மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

40 வெளி நாட்டவர்களும் பலி, அவர்களின் உறவினர்களையும் இணைத்துக் கொள்ளவும் ..

நியாயத்தை கோரி சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கும் போது நாம் மறந்து விடக் கூடாத சில முக்கியமான விடயங்களும் உள்ளன. கொலையாளிகள் சஹரான் குழுவினரை அனுப்பி மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இறை வணக்கத்திற்கு சென்ற அப்பாவி கத்தோலிக்க பக்தர்கள் மாத்திரம் கொலை செய்யப்படவில்லை. நாட்டின் அதிகார மாற்றத்திற்காக புலனாய்வு பிரிவினர் அறிந்து முன்னெடுக்கப்பட்ட இந்த கொடூரமான தாக்குதல்களில் இலங்கைக்கு சுற்றுலா வந்து ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ( பிரித்தானியாவின் அதிக ஆதரவு பெற்ற ) கோடீஸ்வரரின் பூ போன்ற பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் சுமார் 40- க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர். 

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை உண்மையாக கண்டறிய இலங்கை கத்தோலிக்க சபை விரும்பினால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளி நாட்டவர்களின் தகவல்களை தூதரகங்கள் ஊடாக பெற்று அவர்களுடைய உறவினர்களை தேடி சர்வதேச விசாரணைக்கும் சர்வதேச நீதி கிடைக்கவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர்களையும் இணைத்துக் கொள்ள முடியும். அப்படியான ஒரு நீதி கோரும் பயணம் மிகவும் வலிமையானதாக இருக்கும். 

- எழுதியது ரசல் ஹேவாவசம்

---------------------------
by     (2021-09-25 17:33:43)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links