- லங்கா ஈ நியூஸ் அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்
(லங்கா ஈ நியூஸ் - 2021. அக் . 04 , பிற்பகல் 11.20 ) லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வாளர் கீர்த்தி ரத்நாயக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் சுமார் 50 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தையுடன் அநுராதபுரம் சிறைக்கு தூக்கு மேடை பார்க்கச் சென்ற மற்றும் திருமதி இலங்கை அழகி போட்டியில் வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடம் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட்ட நடிகை சூலா பத்மேந்திர, ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவுடன் உரையாடியதாகவும் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்து ராஜபக்சேவின் ' அம்மாவின் விசாரணை பிரிவாக ' இருக்கும் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ( சிஐடி ) விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
2 ம் திகதி காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்குச் சென்ற சூலா பத்மேந்திராவிடம் சிஐடி பிரிவு சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிந்த பின் அழகுக் கலை கலைஞர், நடிகை சூலா பத்மேந்திரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
" கீர்த்தி ரத்நாயக்க பத்திரிகையாளரிடம் என்ன கதைத்தேன் என்பதை அறியவே என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அழகுக் கலை கலைஞர், நடிகை என்ற அடிப்படையில் நாம் உள்நாட்டு, வௌிநாட்டு பத்திரிகையாளர்கள் பலருடன் பேசுகிறோம். அதன் தரவுகளை நாம் வைத்துக் கொள்வது கிடையாது. அதன்படி பத்திரிகையாளர் கீர்த்தி ரத்நாயக்க, திருமதி இலங்கை அழகி போட்டியில் இடம்பெற்ற குழப்பம் குறித்து தகவல் அறிந்து கொள்ளவே என்னிடம் தொலைபேசியில் பேசினார். இந்த நிகழ்வில் இடம்பெற்ற டிக்கட் அச்சிட்டு இடம்பெற்ற மோசடி குறித்து கீர்த்தி ரத்நாயக்க தகவல் அறிந்து வைத்திருந்தார். நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தது, ஒரே நாடு ஒரே சட்டத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில். ஆனால் இன்று அது வெறும் கனவாகிப் போகியுள்ளது. இதை விட அதிக விடயம் தொடர்பில் ஆராய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் உள்ளன. பத்திரிகையாளர் ஒருவருடன் பேசியதற்காக ஏன் இப்படி விசாரணை செயகிறார்கள் என்று தெரியவில்லை ” என்று சூலா பத்மேந்திர கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் சூலா பத்மேந்திரவிற்கு சட்ட ஆலோசனை வழங்கிய சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் சட்டத்தரணி சேனக்க பெரேரா கூறியதாவது :
" குற்றப் புலனாய்வு பிரிவின் இந்த விசாரணைக்கான அழைப்பு எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதனை விடயம் மினவும் கடுமையான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் பதிவாகி உள்ளன, ஆனால் அவை தொடர்பாக விசாரணை செய்யாது மிகவும் அமைதியான கொள்கை பின்பற்றுகின்றனர். இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து குடி போதையில் சிறை கைதிகள் தலையில் கைத்துப்பாக்கி வைத்து மிரட்டி சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எவரையும் அழைத்து விசாரணை செய்யப்படவில்ழல. எனினும் அரசியல்வாதிகளின் தேவைகள் கருதி பொது மக்கள் பணத்தில் இயங்கும் குற்றப் புலனாய்வு பிரிவு போன்ற நிறுவனம் செயற்பட்டால் அது மிகவும் அபாயகரமானது " என சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்தார்.
சமூக ஆர்வலரும் பத்திரிகையாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் நெருங்கிய நண்பருமான துஷாரி வன்னியாராச்சியும் இதன்போது கருத்து வௌியிட்டார். கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்ட பின்னர் துசாரி வன்னியாராச்சி வீட்டிற்குச் சென்ற ராஜபக்ஷக்களன் அம்மாவின் விசாரணை பிரிவான குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரது வீட்டை சோதனை செய்து அங்கிருந்து கனிணி, பென் டிரைவ் போன்றவற்றை எடுத்துச் சென்றதுடன் விசாரணை என்ற பெயரில் அவருக்கும் இடையூறு ஏற்படுத்தினர். தனது கணவரின் 187 பாடல்கள் அடங்கிய பென் டிரைவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியதாகவும் அதனை இப்போது ' வழக்கு பொருளாக ' வைத்திருப்பதாகவும் துசாரி வன்னியாராச்சி கூறினார்.
இந்திய சுதந்திர தினத்தன்று தாலிபான் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு ரகசிய தகவல் வழங்கியதாக தெரிவித்தே லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது கீர்த்தி ரத்நாயக்க லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு எழுதிய கட்டுரைகள் தொடர்பில் விசாரணை நடத்துகின்றனர். நடிகை சூலா பத்மேந்திரவை அழைத்து இந்திய தூதரகத்திற்கு விடுக்கப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து கேள்வி கேட்க எந்த காரணமும் இல்லை.
தற்போது, ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தொலைபேசி ஊடாக உணவு ஓடர் செய்த நபர்களிடமும் ' அம்மாவின் புலனாய்வுத் துறை ' கைக் கூலிகள் விசாரணை செய்து வருகின்றனர். எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் தொலைபேசி தரவுகளை தரவிறக்கம் செய்து அதில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மதிப்பு மிக்க நிறுவனங்களையும் ராஜபக்ஷக்கள் நாய்களுக்கு வீசி விட்டனர். ஆட்சி மாறிய போதிலும், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இந்த நாட்டில் மதிப்பு இருந்தது. இன்று, ராஜபக்ஷக்கள் நாய்கள், ஹிக்கன்கள், தலகோயாக்கள் மற்றும் காவலர்களை சிஐடிக்கு இன்பத்திற்காக அழைத்து விசாரணை செய்வதன் மூலம் அந்த நற்பெயரை அழித்து வருகின்றனர். குற்றப் புலனாய்வு பிரிவு இன்று ' ராஜபக்ஷக்களின் அம்மாவின் விசாரணை பிரிவாக ' மாறி உள்ளது.
மெதமுலான ராஜபக்ச குடும்பத்தின் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் அனைவரையும் மற்றும் அவர்களின் உதவியாளர்களையும் நாங்கள் எச்சரிக்கிறோம். ராஜபக்சேக்கள் இன்று ஆடும் பற்களை போன்றவர்கள். நாட்டில் ஐந்து சதம் கூட இல்லாத அரசாங்கம். எந்த ஒரு குற்றவாளியின் குற்றங்களும் குளவி போன்று மணலில் சுற்றித் திரியாது. மக்களின் துரோகிகளுக்கு அழிவு விரைவில் நிகழும். அதுதான் உலகின் தர்மம். அந்த நாளில் சட்டவிரோத உத்தரவுகளை அமல்படுத்திய ஒவ்வொரு அதிகாரிகளிடமிருந்தும் எதிர்காலத்தில் ' மக்கள் சபை போராட்டத்தில் ' மக்கள் ஒரு சிறந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
---------------------------
by (2021-10-04 15:57:19)
Leave a Reply