-சந்திரபிரதீப் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் -2021 அக்டோபர் 16 , காலை 10.15 ) இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் இறையாண்மை ராஜபக்சாக்களுக்கு சொந்தமானது என்று பலர் நினைக்கின்ற போதிலும் அந்த இறையாண்மை நாட்டு பொது மக்களுக்கு சொந்தமானதாகும். அரசியலமைப்பு ஆரம்பத்தில் அதனை கைவிட முடியாது என இலங்கையின் அரசியல் யாப்பு ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு மக்கள் இறையாண்மை கொண்ட குடியரசில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி மற்றும் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவென முன்னிலையில் நிற்க வேண்டிய பிரதான தலைமை சட்ட அதிகாரி சட்ட மா அதிபர் ஆவார்.
ஆனால் அவ்வாறான தலைமை சட்ட அதிகாரி ஒரு ராஜபக்சேவுக்கு ஆதரவாக நின்று, அனைத்து இறையாண்மை பொது மக்களுக்கும் நீதி வழங்குவதை வேண்டுமென்றே தடுத்தால், அவர் சட்டத்தின் முன் குற்றவாளி மட்டுமல்ல, தேசத் துரோகி, மக்கள் துரோகி, கேடுகெட்ட நபர் ஆவார். மன்னர் ஆட்சி காலத்தில் இவர் ஒரு துரோகியாக இருந்தால் உடலை நான்காக கிழித்து நான்கு வாயில்களில் தொங்க விடுவார்கள்.
தற்போதைய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் அவ்வாறான ஒருவர் என்பது நேற்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இது முதல் முறை அல்ல. ராஜரத்னத்திற்கு முன்பு இருந்த சட்ட மா அதிபர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சுமத்தப்பட்ட திவி நெகும அபிவிருத்தி நிதியில் 36 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை தனது சகோதரரின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து பசில் ராஜபக்சேவுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை சுமத்தி இருந்தார. ஆனால் தற்போதைய சட்ட மா அதிபர் ராஜரட்ணம் அந்த குற்றப் பத்திரிகையை திரும்பப் பெற்றமையே அவர் தேசத் துரோகி என்று அழைக்க காரணமாயிற்று.
சட்ட மா அதிபர் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றால், " இல்லை, வழக்கை விசாரிக்க வேண்டும் " என்று கூறி வழக்கை தொடர நீதிபதியால் முடியாது. அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே நேற்று அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பசில் ராஜபக்ஷவை விடுதலை செய்தார்.
இதேபோன்று இந்த தேசத் துரோக மக்கள் துரோக சட்ட விரோத கேடுகெட்ட சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்ணம் இதற்கு முன்னரும் 11 மாணவர்களை கடத்தி மிரட்டி கப்பம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றார். ஆனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் சட்ட மா அதிபர் குற்றச்சாட்டை திரும்பப் பெற்றமைக்கு எதிப்புத் தெரிவித்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன் முறையீடு நேற்று விசாரணைக்கு வந்தது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை மீளப் பெற்ற சட்ட மா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை நேற்று (15 ம் திகதி) மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சோபித ராஜகருணா மற்றும் தம்மிகா கணேபோல ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. சஞ்சய ராஜரத்தினம் பசில் ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுகளை மீளப் பெற்ற அதே நாளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
" இந்த 11 பேர் கடத்தல் மற்றும் காணாமல் போன வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபர் வசந்த கரன்னாகொட மீதான குற்றப் பத்திரிகையை மீளப் பெற சட்ட மா அதிபர் எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வசந்த கரன்னாகொடவின் அனைத்து மனுக்களையும் நிராகரித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் எவ்வித தங்கு தடையும் இன்றி நீதி நியாயம் கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை தொடருமாறும் கேட்டுக் கொள்கிறோம், ” என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக ரிட் மனு தாக்கல் செய்த மக்கள் நல சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் அச்சல செனவிரத்ன கூறினார்.
உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யும் முன்னாள் சட்ட மா அதிபரின் முடிவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனு நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிகா கணேபொல ஆகியோரால் 13 ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இராணுவத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட சட்ட மா அதிபர் மீளப் பெறத் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் ஆஜரான அரச சட்டத்தரணி அவந்தி பெரேரா குறிப்பிட்டார்.
2008-2009 காலப் பகுதியில் கொழும்பில் வாழ்ந்த மாணவர்கள் மற்றும் கணவர்கள் உட்பட 11 ஆண்கள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 13 வருடங்கள் விசாரணை இடம்பெற்று பிறகு 14 பிரதிவாதிகள் மீது 667 குற்றச்சாட்டுகள், 126 சாட்சிகள் மற்றும் 64 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட 14 வது குற்றவாளியாக உள்ளார்.
அத்துடன் இந்த வழக்கில் கடற்படை புலனாய்வு பிரிவு லெப்டினன் ஜெனரல் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, கடற் படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கடற்படைத் திட்ட பிரதி பணிப்பாளர் கமான்டர் தசநாயக்க கம்கானம்லாகே பியசேன தசநாயக்க, விசேட புலனாய்வு அதிகாரி லெப்டினன் கமான்டர் ரணசிங்க ஜெடிகே சுமித் ரணசிங்க, திலகரட்ன லக்ஷமன் உதய குமார, காரியவசம் ஹேவகே நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிட்ட இஹலகெதர தர்மதாஸ, ராஜபக்ஷ பத்திரனகே கித்சிறி, கஸ்துரி ஆராச்சிகே காமினி, பிரதான சிறிய அதிகாரி முத்துவாஹென்னதிகே அருண துஷார மென்டிஸ், முன்னாள் கடற் படை தளபதி வசந்த கரன்னாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பாளர் லெப்டினன் கமான்டர் முனசிங்க ஆராச்சிகே நிலந்த குமார ஆகியோர் ஏனைய சந்தேகநபர்கள் ஆவர்.
கஸ்தூரி ஆராச்சிலாகே ஜோன் ரெய்ட், அந்தோணி கஸ்தூரி ஆராச்சி, ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், முகமது சஜீத், திலகேஸ்வரம் ராமலிங்கம், ஜமால்டின் டிலான், அமலன் லியோன், ரோஷன் லியோன், கனகராஜா ஜெகன் மற்றும் முகமது அலி அன்வர் ஆகியோர் கடத்தப்பட்டு கப்பம் கோரி அவர்களது பெற்றோரை மிரட்டி கப்பம் பெற்ற பின் சிலர் கொழும்பிலும் சிலர் திருகோமலை கடற் படை முகாம் குகைக்குள்ளும் வைத்து கொலை செய்யப்பட்டனர்.
சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் நாங்கள் முன்பு கூறிய படி குடியரசில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நிற்கும் தலைமை சட்ட அதிகாரியாக அல்லாமல் மாறாக குற்றவாளிகளின் மீட்பராக முன் நிற்கிறார்.
நாட்டு பொது மக்களின் வரிப் பணத்தால் பராமரிக்கப்படும் சஞ்சய ராஜரத்தினத்திற்கு மட்டுமல்ல அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கும் நீதி மற்றும் நேர்மைக்காக காத்திருக்கும் இறையாண்மை கொண்ட அனைத்து பொது மக்களும் இணைந்து தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்.
---------------------------
by (2021-10-16 23:08:37)
Leave a Reply