- சூழ்ச்சித் திட்டத்தின் அடி முடியை அம்பலப்படுத்துகிறார் சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, ஒக்டோபர் 24, பிற்பகல் 03.30 ) இலங்கையில் இடம்பெற்ற மிகக் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை முழு உலகும் தற்போது அறியும். அவர் இன்று இலங்கையில் அரச அதிகாரத்தை கைப்பற்றி உள்ளார். ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை வௌிப்படுத்துமாறு போராடி வரும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கொலை செய்யும் சதித் திட்டம் குறித்த அனைத்து தகவல்களும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்பவர் கேடுகெட்ட கொலைகார ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர ஆடை இன்றி வக்காலத்து வாங்கிய மதத் தலைவர் என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆனாலும் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கொடூர சம்பவத்தின் பின் ஏற்பட்ட வேதனையை அடுத்து அவருக்கு இன்று மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ராஜபக்ஷ ஆதரவு நிலையில் இருந்து விலகி ராஜபக்ஷ எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு முறை போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்படும் துமிந்த சில்வாவுடன் ஒரே வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதன் பின் ஒருமுறை இனவாத கொள்கை கொண்ட குண்டரான அத்துரலியே ரத்தன தேரர் கண்டியில் ஏற்பாடு செய்த இனவாத நிகழ்வில் கலந்து கொண்டு வெட்கம் இன்றி செயற்பட்டவர் என்பதை அறியாதவர்கள் யார் உளர் ? ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எதிராக கருத்து வௌியிட்டு வந்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் வேண்டி அதே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதைதான் விதியின் செயற்பாடு என்று கூறுவார்கள்.
இவை எல்லாவற்றுக்குப் பின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தான் வக்காலத்து வாங்கிய, தான் போற்றிப் புகழ்ந்த கொலைகார கேடுகெட்ட ராஜபக்ஷக்களுக்கு எதிரான அணியில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தங்களது நிரந்தர எதிரிகளை விட தங்கள் கூடவே இருந்து விட்டு பின் எதிரியாக மாறுபவர்கள் மீது ராஜபக்ஷக்கள் அதிகம் ஆத்திரம் கொள்வது அவர்களது சுபாவம் ஆகும். சிரேஸ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, போத்தல ஜயந்த, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தேசமான்ய கொத்தலாவல போன்ற சிலர் அதற்கு சிறந்த உதாரணம். அந்த வரிசையில் தங்களதுடன் நெருங்கிப் பழகி தற்போது தங்களுக்கு எதிராக திரும்பியுள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்தும் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளான ராஜபக்ஷக்கள் இறுதி முடிவு எடுத்து இறுதியாகி விட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தகவல் வந்துள்ளது.
தமக்கு எதிரான நபர்களை இந்த உலகை விட்டு விரட்டி பரலோகம் அனுப்பும் அமானுஷ்ய திட்டம் அவர்களிடம் எப்போதும் உண்டு. பழைய வௌ்ளை வேன் முறைப்படி தற்போது அவர்கள் செயற்படுத்த மாட்டார்கள். அனைத்தும் இயற்கை மரணம் என்ற சொரூபத்தில் இடம்பெறும். கொலை செய்வதற்கு சாதகமாக கொரோனா வைரஸ் வந்துள்ளதால் அவர்கள் அதனை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வர்.
அதன்படி முதலில் கொரோனா வைரஸை முன் நிறுத்தி பரலோகம் அனுப்பியது கிளி மகாராஜாவை ஆகும். மிகவும் பாதுகாப்பான பைஸர் தடுப்பு ஊசிகள் இரண்டையும் ஏற்றிக் கொண்ட கிளி மகாராஜாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பதை இன்று வரை எவரும் அறியார். கிளி மகாராஜா கொரோனா பொஸிட்டில் ஆன முதல் நாள் அவருடன் இணைந்து பயணித்த சாரதிற்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆச்சரியம். கிளி மகாராஜா கொரோனா பொஸிடிவ் என சென்ற நவலோக்க வைத்தியசாலை ராஜபக்ஷக்கள் உணவு உட்கொள்ளும் இடமாகும். அங்கு அனுமதிக்கப்பட்ட கிளி ராஜா மகேந்திரன் சில வாரங்களில் கொரோனா குணமடைந்து வீடு திரும்பினார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதே நாளன்று அவர் மீண்டும் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்படி நடந்தது ஏன் ? நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவது பூரண குணமடைந்த பின் அல்லவா ? அத்துடன் ராஜா மகேந்திரன் சாதாரண நபரும் அல்ல. அவர் இலங்கையின் முதல் தர பணக்காரர். அதிகாரம் மிக்க கிளி மாகாராஜா.
அதன் பின் கிளி மகாராஜா உயிரிழப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன் நவலோக்க வைத்தியசாலையில் வைத்து உலப்பனே சுதங்கல தேரரை சந்தித்து இருவரும் முகக் கவசம் கூட அணியாமல் மணித்தியாலக் கணக்கில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர் மரணப்படுக்கையில் இருக்கும் அளவு நோய்வாய் படவில்லை. மிகவும் சிறந்த முறையில் கதைத்துள்ளார். அதற்கு அடுத்த நாளும் உலப்பனே சுமங்கல தேரர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கிளி மகாராஜாவுடன் உரையாடி உள்ளார். அப்போதும் கிளி மகாராஜா சிறந்த நிலையில் இருந்துள்ளார். சொல்லக் கூடிய அளவு நோய்வாய்படவில்லை.
இவை அனைத்தையும் பின்தள்ள வைப்போம் ..! கிளி மகாராஜா உயிரிழந்த நாள் காலை அவரை சந்திக்க அவரது நிறுவன இயக்குநர்கள் இருவர் நலலோக்க வைத்தியசாலையில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற போது கிளி மகாராஜா தனது அறைக்கு அருகில் இருந்த குளியல் அறையில் நன்கு குளித்து நலமுடன் வந்துள்ளார். அதன் பின் சில மணி நேரங்களில் மாரடைப்பு காரணமாக கிளி மகாராஜா உயிரிழந்ததாக செய்தி வந்தது.
காலையில் கிளி மாகாராஜாவை சந்திக்கச் சென்ற மாகாராஜா நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் யார் என்பதை எழுத்தாளர் அறிந்துள்ள போதும் அவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய் மூடி இருப்பதாலும் அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாலும் பெயர் விபரங்களை வௌியிடுவது அந்த அளவு முக்கியமானதல்ல. கிளி மகாராஜாவின் மரணம் குறித்த சந்தேகத் தகவல்களை மகாராஜா நிறுவன இயக்குநர்கள் சிலர் அறிந்துள்ள போதும் ராஜபக்ஷக்கள் அதிகாரத்தில் இருந்து விலகும் வரை அமைதி காக்கின்றனர். பின்னர் அவர்கள் வாய் திறக்கக் கூடும் என்பது உண்மை.
கிளி மகாராஜா என்பவர் வெறும் சாதாரண பிரஜை அல்ல. அதனால் அவரது மரணம் குறித்து நவலோக்க வைத்தியசாலை நிர்வாகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்திருக்க வேண்டும். அது பொறுப்பு வாய்ந்த வைத்தியசாலையின் கடமையாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலை கூட விஐபி நோயாளர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பொறுப்புடன் தகவல் வழங்குவதை நாம் அதிகம் கண்டிருக்கிறோம். அதனால் இந்த கட்டுரை எழுதும் இந்த நிமிடம் வரை நவலோக்க வைத்தியசாலை அவ்வாறானதொரு அறிக்கை ஒன்றை வௌியிடவில்லை என்பது புதுமை அல்லவா ?
கிளி மகாராஜாவின் கொலை இந்த கொலைகார கும்பலின் கொலை பட்டியலில் முதல் கொலையாகும். அடுத்தது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆவார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கொலை செய்யத் திட்டம் தீட்டி இருப்பது இலங்கையில் அல்ல. அவர் வௌிநாட்டு சுற்றுலா செல்லும் வரை கொலைகாரன் காத்துக் கொண்டிருக்கிறான். கொலை வௌிநாட்டில் இடம்பெற ஏற்பாடாகி உள்ளது. அவ்வாறு நடந்தால் இலங்கையில் கொலையாளிகள் மீது விரல் நீட்ட முடியாது. இது சரியாக கங்கொடவில சோமா தேரரின் கொலை போன்று அமையும்.
1. கிளி மகாராஜா - ( இலக்கு எட்டப்பட்டு விட்டது )
2. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை - ( இலக்கு விரைவில் எட்டப்படும் )
3. கரு ஜயசூரிய
4. வௌிநாட்டில் இருந்து ஊடக செயற்பாட்டில் ஈடுபடும் செய்தி ஆசிரியர் ( எழுத்தாளர் செய்தி ஆசிரியருக்கு இந்த அச்சுறுத்தல் குறித்து தெரியப்படுத்தி உள்ளார் )
5. ராஜித்த சேனாரத்ன
6. சானி அபேசேகர
இந்த பட்டியலில் மேலும் நபர்கள் உள்ளனரா என்பது எழுத்தாளருக்குத் தெரியாது. அநேகமாக இருக்கக் கூடும். தெரியாத சிலர் கீழ் இருந்து மேலே வரக் கூடும். மங்கள சமரவீரவும் அவ்வாறான ஒருவராக இருந்திருக்கக் கூடும்.
---------------------------
by (2021-10-24 06:59:23)
Leave a Reply