- எழுதுவது சந்திர பிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2021, அக்டோபர்,29 முற்பகல் 7.00 ) இலங்கையில் முட்டாள் ஜனாதிபதி நாள் ஒன்றில் வெற்றிலை சாப்பிட்டு எச்சில் வடிக்கா விட்டால் அது புதுமையாகவே கருதப்படுகிறது. அதுபோன்று நேற்றைய தினத்தில் மற்றும் ஒரு புதுமையான எச்சிலை ஜனாதிபதி வடித்துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை செயற்படுத்துவதற்கான புதிய ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கி உள்ளார். ஜனாதிபதி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பதால் செயலணி என்ற வார்த்தையை அதிகம் விரும்பும் நபராக இருக்கிறார். வேண்டியவை வேண்டாதவை என எல்லாவற்றுக்கும் ஜனாதிபதி விசேட செயலணி உருவாக்கி நாட்டு மக்களுக்கு கேளிக்கை வழங்கி வருகிறார். ஜனாதிபதி நியமித்துள்ள அனைத்து ஜனாதிபதி விசேட செயலணிகளும் தற்போது கேலிக் கூத்தாக மாறி விட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது வரை சுமார் 30 க்கும் அதிகமான ஜனாதிபதி விசேட செயலணிகளை உருவாக்கி உள்ளார். இந்த ஜனாதிபதி விசேட செயலணியின் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா 2 லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்துடன் வாகனம் ஒன்றும் அதற்கான எரிபொருளும் தொலைபேசி கொடுப்பனவு அலுவலக வசதிகளும் என மேலும் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஜனாதிபதி விசேட செயலணிகள் மூலம் நாட்டு மக்களின் வரிப்பணம் அநியாயமாக வீணடிக்கப்படும் நிலையில் செயலணிகள் செய்த உருப்படியான விடயங்கள் எதனையும் இதுவரை காண முடியவில்லை.
நேற்றைய தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த ஜனாதிபதி விசேட செயலணியான ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார என்ற கசிப்புக் கார சண்டித்தனம் செய்யும் குண்டரான தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை புதுமை அளிக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் வாக்களித்தது ஒரே நாடு ஒரே சட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆகும். சட்டம் தயாரிக்கப்படுவது பாராளுமன்றத்தில். அந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர். அது ஒரு பக்கம் இருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க அடிப்படைவாத சண்டித்தனம் செய்யும் குண்டரான கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் எவ்வித பயனும் அற்ற ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த ஜனாதிபதி விசேட செயலணி உறுப்பினர்கள் விபரம் வருமாறு,
1. கலகொட அத்தே ஞானசார தேரர் ( பிரதானி )
2. பேராசிரியர் தயானந்த பண்டார
3. பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன
5. ஜி. சுஜீவ பண்டிதரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே
8. எரந்த நவரத்ன
9. பாணி வேவல
10. மௌலவி மொஹொமட் ( காலி உலமா சபை )
11. விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப்
12. கலீல் ரஹூமான்
13. அஸஸீ நிசார்தீன
இலங்கையில் ஒவ்வொருவருக்கும் சட்டம் ஒவ்வொரு விதமாக செயல்படுத்தப்படுவது சாதாரண விடயம் என்ற போதிலும் அனைவருக்கும் பொதுவான சட்டம் எழுத்து வடிவில் இருக்கின்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு மாத்திரமே சட்டம் பாகுபாடாக செயல்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் தமிழ் மாகாணங்களில் உள்ள தேச வழமைச் சட்டம் போன்றவை இதற்கு சிறந்த உதாரணம். விகார தேவாலகம சட்டம் வேறாக செயல்படுத்தப்படுகின்ற போதிலும் இந்த அரசாங்கத்தின் தேவை சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டங்களை இல்லாத செய்வதாகும். அதனால் தான் இந்த அரசாங்கத்தை இனவாத அரசாங்கம் என்று அழைக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற பேகர், மலே மற்றும் கிறிஸ்தவ, இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட இந்த செயலணியில் உறுப்பினர்களாக இணைக்கப்படவில்லை. எனவே ஓரிரு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அடங்கிய இந்த ஜனாதிபதி செயலணி எடுக்கும் தீர்மானங்களுக்கு தமிழர்கள், பேகர்கள், மலே இனத்தவர்கள் மற்றும் இந்து, கிறிஸ்தவர்கள் கட்டுப்பட வேண்டும். அதை நிராகரிக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமைகள் உண்டு.
ஜனாதிபதி உருவாக்கிய ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பல்வேறு சமூகங்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு செயல்படுத்தப்பட்டால் உண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரர் இருக்க வேண்டியது சிறையில் ஆகும். நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து நீதிபதிகளுக்கு வழக்கு விசாரணை செய்ய பாடம் எடுத்த சம்பவத்தில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தினால் சுமார் 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர் கலகொட அத்தே ஞானசார தேரர். மைத்திரிபால சிறிசேன என்ற இலங்கையில் உருவாகிய மிகவும் கேடுகெட்ட ஜனாதிபதி கலகொட அத்தே ஞானசார தேரர் சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் முட்டாள் தனமான முடிவை எடுத்து கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.
இந்த வழக்கு மாத்திரம் அன்றி ஞானசார தேரருக்கு எதிராக மேலும் பல வழக்குகள் உள்ளன. கசிப்பு குடித்து விட்டு லொறி ஒன்றை செலுத்திச் சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் மோதி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டு தண்டனை பெற்ற நபராக ஞானசார தேரர் விளங்குகிறார்.
ஞானசார தேரர் கடும் இனவாதி என்பதை அறியாதோர் யாரும் உள்ளனரா ? ஞானசார தேரரின் இனவாத செயற்பாடுகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பல விசாரணையில் உள்ளன. அதில் ஒரு சிலவற்றை சுட்டிக்காட்டினால், அளுத்கம முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கு, கண்டி திகன முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவர வழக்கு போன்றவை ஞானசார தேரருக்கு எதிராக விசாரணையில் இருக்கிறது. இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய மதம் மற்றும் இஸ்லாமியர்களின் அல்லா கடவுள் தொடர்பில் அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தாக்கல் செய்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு வெலிக்கடை போலீஸ் பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு விசாரணையில் உள்ளது.
இவ்வாறான சுமார் 20 வழக்குகள் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தற்போது நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி விசேட செயலணியின் தலைமை பதவி வகிக்கும் இந்த ஞானசார தேரருக்கு தெரிந்த சட்டம் என்ன ? குறைந்தது பிக்குவாக காவி உடை அணிந்து இருப்பதால் புத்த பெருமான் பிறப்பித்துள்ள சட்டங்கள் தொடர்பிலாவது கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவு கொண்டவராக இல்லை. புத்த பெருமானின் சட்டங்களை ஞானசார தேரர் அறிந்திருந்தால் பிரான்சில் இவருக்கு ஒரு மனைவியும் பிள்ளைகளும் இருக்க வாய்ப்பே கிடையாது.
ஜனாதிபதி நியமித்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு தனது பரிந்துரையில் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமை வகிக்கும் பொதுபல சேனா அமைப்பு இனவாத அமைப்பு என்றும் அது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்கும் செயல்பாட்டிற்கு தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளதன் மூலம் ஒரு உண்மை வெளிப்படையாக தெரிகிறது. அதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அனுபவம் குறைந்த முட்டாள் மடையன் என்பது மாத்திரம் அன்றி புத்தியே இல்லாத பைத்தியக்காரன் என்பதுவும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதிலும் வெறும் பைத்தியக்காரன் என்று மாத்திரம் கூறி விட முடியாது. அதற்கும் மேல்...
---------------------------
by (2021-10-29 19:31:12)
Leave a Reply