- விவசாயி ஒருவர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2021 நவம்பர் 08, பிற்பகல் 02.30 ) ஏதோ ஒரு நிக்காயவின் வழி நடத்துனர் என்று கூறும் வெடருவே உபாலி மற்றும் இன்னும் சில காவி உடை அணிந்த பிக்குகள் எதிர்பார்ப்பது போன்று ஹிட்லர் ஒருவர் எமது கண் முன்னே வேலையைத் தொடங்கி உள்ளார். அவர்தான் இலங்கையின் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ ஆவார். முழு உலகமும் வெறுத்த மனித குலத்தில் சேர்க்க முடியாத கொடூரக் கொலையாளியான எடொல்ப் ஹிட்லர் நிலக் கீழ் பங்கர் ஒன்றில் ஒழிந்து இருந்து இறுதியில் பயந்தாங் கோழியாக தன்னை தானே தற்கொலை செய்து கொண்டார் என்பதை இந்த அறிவு கெட்ட காவி உடைகாரர்கள் அறியாமல் இருக்கக் கூடும்.
இலங்கை நாட்டின் ஹிட்லர் ஒரு முறை பொதுக் கூட்டம் ஒன்றில் தனது வாய் வார்த்தைகள் அனைத்தையும் சுற்றறிக்கையாகக் கொண்டு செயற்படுமாறு அரச அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்தார். மன்டாடுவ பொது விளையாட்டு அரங்கல் நேற்று 6 ம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொலைகார ஹிட்லர் முகத்தை மீண்டும் வௌிகாட்டும் வகையில் உரை நிகழ்த்தினார்.
இதன் போது கைக்கூலி பிக்குகளுக்கு புதிய பதவிகள் வழங்கியதை நியாயப்படுத்தி பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டுக்கு உணவு விநியோகிக்கும் விவசாயிகளுக்கு கீழ் கண்டவாறு அச்சுறுத்தல் விடுத்தார்.
" இன்று விவசாயிகள் என்று சிலர் உள்ளனர். அந்த விவசாயிகளிடம் சேதன பசளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுமாறு கூறியதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். எனக்குத் தெரியாது உண்மையில் அவர்கள் விவசாயிகளா என்று. இராணுவத்தை பயன்படுத்தி விவசாயிகள் கழுத்தை பிடித்து 'இதனை பயன்படுத்து' என்று என்னால் பலாத்காரமாக கூற முடியும். ஆனால் எனக்கு அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எனக்கு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். " ( இது அவர் வௌியிட்ட கருத்து படி எழுதப்பட்டது என்பதை தயவுடன் தெரிந்து கொள்ளவும்.)
வௌ்ளைப் பூண்டு, சீனி, அரிசி, தேங்காய் எண்ணெய், நெனோ யூரியா, சேதன பசளை, கொரோனா தடுப்பு ஊசி, தனிமைப்ப்படுத்தல் நடவடிக்கை, யுகதனவிய ஒப்பந்தம் உள்ளிட்ட பலவற்றில் ஊழல் மோசடி செய்து கோடிக் கணக்கில் நட்டம் ஏற்படுத்திய பிழைக்கும் ஒருவரை ஏனும் இன்று வரை கழுத்தை பிடித்து தட்டிக் கேட்க திராணி, முதுகெலும்பு இல்லாத இலங்கை நாட்டின் ஹிட்லர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இராணுவத்தினரிடம் கூறி கழுத்தை பிடித்து இழுத்து விவசாய தோட்டத்தில் தள்ள முடியும் என்று கூறுவது அப்பாவி விவசாய மக்களை ஆகும்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் அமர்த்த வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் அதிகமானோர் விவசாயிகள் என்பதை அவர் இன்று மறந்து விட்டார். எப்படியும் பொல்லாதவன் என்றுமே பொல்லாதவன்தான்.
எனினும் கோட்டாபய ராஜபக்ஷ தனக்கான குழியை தானே தோண்டிக் கொள்வது விவசாயிகளின் கழுத்தை பிடித்து இழுத்துச் செல்ல வரும் நாளில் என்பதை விவசாயி என்ற அடிப்படையில் கோட்டாவிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
" வா நீ வரும் வரைதான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் "
---------------------------
by (2021-11-08 07:18:07)
Leave a Reply