~

ஹரிகுப்தா ஜனாதிபதிக்கு அருகில் இருந்து ' வழக்கு வாபஸ் பெரும் ' வியாபாரத்தில்..!

(லங்கா ஈ நியூஸ் - 2021, நவம்பர் 19, பிற்பகல் 09.15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டப் பணிப்பாளர் நாயகம் பதவி வகிக்கும் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர என்ற குண்டர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கொண்டு தான் முன்னிலையான, தனக்கு நெருங்கிய, ஆகாயத் திருடர்களின் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு தற்போது மோசடி நபராக மாறியுள்ள சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்னத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தின் நீதிமன்ற உள்ளக தகவல்கள் சேவைக்குத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வாபஸ் பெற முயற்சிப்பது பொலிஸ் விசேட நிதி மோசடி பிரிவு (FCID) கண்டுபிடித்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய Globle Life Style என்ற மோசடி பிரமிட் வியாபாரத்திற்கு எதிரான வழக்காகும். இந்த மோசடியான பிரமிட் வியாபாரத்தின் உரிமையாளர் என்று கருதப்படும் வில்வராஜன் மற்றும் அவரது நண்பர் ராசன் ஆனந்தன் ஆகியோர் புத்தளம் பிரதேச மக்களை முட்டாள்களாக்கி தமது பிரமிட் வியாபாரத்தை பரப்பியதுடன் இதற்கு பல மக்கள் மயங்கி இறுதியில் தமது பணத்தை இல்லாமல் ஆக்கிக் கொண்டனர்.

இந்த மோசடி வியாபாரிகள் மலேசியாவில் உள்ள தமிழர் ஒருவருடன் இணைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு பல கோடி ரூபா பணத்தை வௌிநாட்டுக்கு கடத்திச் சென்றனர். பிரமிட் வியாபாரம் இலங்கையில் மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட போதும் சோலர் பெனல், ஹோட்டல் பெக்கேஜ் போன்ற பல வடிவங்களில் தமது பிரமிட் வியாபாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

இவர்களுக்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி பிரிவு FCID சிறிது காலம் விசாரணை நடத்தி பின் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது Globle Life Style வியாபார ஏமாற்றுக் காரர்கள் சார்பில் ஹரிகுப்த ரோஹனதீர சட்டத்தரணியாக முன்னிலை ஆகினார். தற்போது  சட்டத்தரணி  ஹரிகுப்த ரோஹனதீர   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்ட பணிப்பாளர் நாயகமாக செயற்படுவதால் மோசடிக்கார சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்னத்துடன் இணைந்து வழக்கை வாபஸ் பெற முயற்சித்து வருகிறார். வழக்கில் ஆஜராவதால் கிடைக்கும் பணத்தை விட வழக்கை வாபஸ் பெறும் போது அதிக பணம் கிடைக்கும் என்பதை ஹரிகுப்த ரோஹனதீர தெரிந்து வைத்துள்ளார்.

ஹரிகுப்த ரோஹனதீர ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்து ஜனாதிபதி செயலகத்தில் தனது பதவியை விபச்சாரமாக்கி பிழையான செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து நீங்கும் போது அவருக்குச் செல்ல அவரது சொந்த நாடு அமெரிக்கா உள்ளது. ஆனால் ஹரிகுப்தாவிற்கு செல்ல வேறு நாடு இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஹரிகுப்த மாத்திரம் அல்ல சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்னமும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீரவுடன் Globle Life Style வியாபார உரிமையாளர் வில்வராஜன் இருக்கிறார். நீல நிற சட்டை அணிந்து இருப்பவர் வில்வராஜன் ஆவார். 

---------------------------
by     (2021-11-19 06:32:31)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links