-அலரி மாளிகை செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2011 , நவம்பர் , 22 பிற்பகல் 07.25 ) தாமரை மொட்டுக் கட்சியின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் அவரது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டாவது வருட ஜனாதிபதி பதவிப் பிரமாண பூர்த்தி நிகழ்வு கொண்டாட்டங்கள் இந்த முறை அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ராஜபக்சக்கள் மற்றும் அவர்களது கைக் கூலிகளின் சிவப்பு நூல் மூட நம்பிக்கை நாயகியாகத் திகழும் அனுராதபுரம் ஞான அக்காவின் முழுமையான ஆலோசனைக்கு அமைய சிவப்பு நூல் கூட்டத்தின் பிரதான உறுப்பினர் சவேந்திர சில்வா மற்றும் சுஜீவா நெல்சன் பட்டகே ஆகியோரது ஏற்பாட்டில் இன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வாழ்த்துக்கள், வாழ்த்து பாடல்கள், முகஸ்துதி பாடுதல், தீர்க ஆயுள் போன்ற வாழ்த்துக்களை வாரி வழங்கவும் சவேந்திர சில்வா மேலும் மேலும் பெயர் போட்டு கொள்ளவும் இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த பொது மக்கள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மாத்திரம் அன்றி அங்கு கூடி இருந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் சாபம் விட்டுக் கொண்டு வெளியே சென்றதாக லங்கா ஈ நியூஸ் அலரி மாளிகை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கேஸ் இல்லாமல் வரிசையில் நிற்கின்ற பொழுது, நாட்டு மக்கள் உண்பதற்கு உணவின்றி பொலஸ் அவித்து உண்ணும் போது, இரசாயன உரம் மற்றும் யூரியா இன்றி விவசாய நிலங்கள் அழிவடையும் போது ராஜபக்சக்களின் இந்த கொண்டாட்ட விழாவிற்கு குளிரூட்டப்பட்ட 150 தர 40 அடி கூடாரங்கள் 7 தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்தன.
நாட்டை விற்றுத் திண்ணும் ராஜபக்சேகளின் குடும்ப உறுப்பினர்கள் பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை தாமரை மொட்டு கட்சியின் கைக் கூலி உறுப்பினர்கள் கூட்டுத்தாபனத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் மூழ்கும் கப்பலில் செல்வதா என்ற கூற்றுக்கு அமைய அழைப்பு விடுக்கப்பட்ட நபர்களில் நான்கில் ஒரு பங்கினர் மாத்திரமே வருகை தந்ததாக தெரிய வருகிறது.
குளிரூட்டப்பட்ட சொகுசு தற்காலிகக் கூடாரங்களில் இரண்டு முழுமையாக மூடப்பட்டு மின் துண்டிக்கப்பட்டு வெறுமையாக காணப்பட்டது. எஞ்சிய ஐந்து கூடாரங்களில் ஒரு கூடாரத்தில் மாத்திரமே கூட்டம் நிரம்பி இருந்தது. அதுவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் உடைய கூடாரம் ஆகும். ஏனைய நான்கு கூடாரங்களிலும் ஆங்காங்கே அழைப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். ராஜபக்ச குடும்பத்தில் தந்தை மகன் மாத்திரம் அன்றி அவர்களது மாமாமார் மாமிமார் பாட்டிமார் பாட்டன்மார் பூட்டான்கள் சித்தப்பா சித்திமார் அக்கா தங்கை தம்பி அண்ணன் மார் என உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருந்ததோடு புதியவர்களும் குடும்பத்தில் இணைந்து இருந்தனர். லிமினி மற்றும் நித்திசா, தாதியானா ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். அந்த குடும்பத்தின் பெற்றோர்கள் மாத்திரம் அன்றி ஏற்கனவே திருமணம் முடித்த பெண் எடுத்த பெண் கொடுத்த என உறவினர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.
நாட்டை ராஜபக்சகளிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டுமானால் குறித்த குளிரூட்டப்பட்ட கூடாரத்தில் இருக்கின்ற ராஜபக்ச குடும்பங்கள் முழுவதும் கூட்டத்துடன் அழிந்து சாம்பலாகி போக வேண்டும் என இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலர் வெளியில் செல்லும் போது கூறிச் சென்றது வேறு கதை ஆகும்.
தாமரை மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கினர் மாத்திரமே இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். மஹிந்த ராஜபக்சவிற்கு நீண்ட காலமாக கட்சித் தலைவர்கள் பலரும் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் அவர்கள் கூட இந்த நிகழ்விற்கு வருகை தரவில்லை. வேறு கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் நோக்கினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாத்திரமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கடந்த 18 ஆம் திகதி இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டதுடன் மறு நாள் அதி காலை 4 மணிக்கு ஞான அக்காவின் தேவாலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாம் வருட பதவி பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வு பகல் உணவுடன் விசேடமாக கொண்டாடப்பட்டது.
பிரதேச உறுப்பினர்கள் இருந்த குளிரூட்டப்பட்ட கூடாரத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாத்தளை பகுதி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில் ,
"சார் எங்களுக்கு கொஞ்சம் கதைக்க வேண்டும்.. ஊருக்கு செல்ல முடியாது.. எல்லா இடங்களிலும் பிரச்சினை.."
"இப்போது சாப்பிட்டு வினோதத்தை அனுபவித்த விட்டு செல்லுங்கள் .. அதற்கு வேறு ஒரு நேரத்தை ஒதுக்கி கொள்வோம் .." என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறிவிட்டு விரைவாக அங்கிருந்து சென்று விட்டார்.
"உண்பதற்கு என்றால் வீட்டில் உணவு இருக்கிறது .. சார் நாங்கள் வந்தது உண்பதற்கு அல்ல .." என்று ஒருவர் கூறிய போது அருகில் இருந்த அனைவரும் கை தட்டி அந்தக் கருத்தை வரவேற்றனர்.
பிறந்த நாள் கேக் வெட்டிய பின்னர் மஹிந்த ராஜபக்ச நித்திரைக்கு சென்று விட்டார். ஒரு நாளும் எதிர்பார்க்காத வகையில் ஆங்காங்கே கூடி இருந்த மக்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட அவர்களை கடுமையாக திட்டித் தீர்த்ததை காண முடிந்தது.
மிகவும் உற்சாகத்துடன் விழாவை ஏற்பாடு செய்த சவேந்திர சில்வாவிற்கு இறுதியில் சிவில் உடைகளில் இராணுவ வீரர்களை அழைத்து வந்து நாற்காலிகளை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
வியத் மக அமைப்பின் உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை புறக்கணித்ததுடன் மறு நாள் அதி காலை இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டாம் ஆண்டு பதவி ஏற்பு பூர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஏதேனும் ஒரு சம்பவம் நடப்பதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை.
---------------------------
by (2021-11-23 13:16:57)
Leave a Reply