~

பண்டாரகமவிலும் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு..! மேலும் இருவர் உயிரிழப்பு..! ( காணொளி )

(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 26, 2021 , பி.ப. 8.15 ) பண்டாரகம பகுதியில் மேலும் இரண்டு உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தொலைக்காட்சி ஊடகங்களின் கவனத்திற்கு வராத இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் பண்டாரகம - கொத்தலாவல வீதி , இலக்கம் 5B இல் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் வசித்த பி. ஜி. வாசலசிங்க என்பவர் சம்பவத்தில் உயிரிழந்தார்.  சிலிண்டர் வெடிப்பிற்குப் பிறகு அவர் பலத்த காயமடையவில்லை, ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு பலியாகினர். சிலிண்டர் வெடித்ததில் அவரது உள் உறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. இந்த வெடிப்பு தீ பரவல் ஏற்படுத்தவில்லை.  ஆனால் வீட்டினுள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதை  சிலிண்டர் வெடிப்பின் அளவை கீழுள்ள வீடியோ காட்டுகிறது.

சம்பவம் தொடர்பில் மில்லேனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சம்பவம் இடம்பெற்று சில தினங்களின் பின்னர், பண்டாரகம பிரதேசத்தில் ரைகம சந்தியில் உள்ள பலந்துடாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டாவது எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. அங்கு ஒரு பெண் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது சம்பவத்தின் புகைப்படங்களோ காட்சிகளோ  பெறப்படவில்லை.

இரண்டு லிட்ரோ கேஸ் சிலிண்டர்களில் இருந்து எப்படி எரிவாயு கசிகிறது என்பதை கீழுள்ள வீடியோவின் கடைசி பகுதி காட்டுகிறது

---------------------------
by     (2021-11-27 15:09:06)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links