~

சமையல் அறையில் எரிவாயு வெடி குண்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதா..? நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சொல்லும் உண்மை கதை..!

(லங்கா ஈ நியூஸ் - நவம்பர் 27, 2021 , பி.ப. 07.45) நாடு முழுவதும் தங்கள் வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் இருக்கும் வேளையில், எரிவாயு மற்றும் அது தொடர்பான கருவிகள் சரியான தரத்தில் கொண்டு வரப்படுகிறதா என சுங்கத் துறை எவ்வித ஆய்வும் செய்வதில்லை என  கூட்டுறவு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் தரத்தை சரி பார்க்காமல் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதும் தெரிய வருவதாகவும்

அமைச்சர் லசந்த தெரிவித்தார்.

அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் கூறுகையில்,

“நமது நாடு சுதந்திரம் அடைந்தது தொடக்கம் இருந்தே நுகர்வோர் பாதுகாப்பு விடயத்தில் பெரும் சிக்கலை எதிர் கொண்டு வருகிறோம். (அதாவது காலனித்துவ காலத்தில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை.) தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒரு தர நிலை அறிமுகப்படுத்தி உள்ளது.  இலங்கைக்கு கேஸ் இறக்குமதி செய்யும் இரண்டு எரிவாயு நிறுவனங்களும் இறக்குமதி செய்யும் பொருட்களின் தரத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை.  அந்த நிறுவனங்களைத் தவிர மற்ற தனியார் நிறுவனங்களும் அதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்து வருகின்றன.

அந்த பொருட்கள் குறித்த தகவல்கள் எனக்கு இன்று 27 ஆம் திகதி மாலை வேளையில் கிடைக்கும்"

அதன் பின்னர் மிகவும் ஆபத்தான விடயத்தை அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்டார்.

" எமது நாட்டிற்கு ஹெச் எஸ் குறியீடுகள் மூலம் 7800 பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 1200 பொருட்களை நாங்கள் சரி பார்த்து நாட்டுக்கு உள்ளே அனுமதிக்கிறோம். (HS என்பதன் ஆங்கில பதம் Harmonized System Code ஆகும். இது பொருட்களின் உள்ளடக்கம் குறித்த தரக் கணிப்பீடு செய்ய உலக சுங்க ஸ்தாபனம் அறிமுகம் செய்த குறியீடாகும். ) நாங்கள் வேறு எந்தப் பொருளையும் தரம் பார்த்து நாட்டிற்குள் அனுமதிப்பது கிடையாது.  எரிவாயுவும் அதில் உள்ளடங்கும் "

அதாவது வீட்டு எரிவாயு பாவனைக்காக தர நிர்ணய நிறுவனம் வகுத்துள்ள தரா தரங்கள் அடிப்படையில் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே நாட்டுக்குள் எரிவாயு அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் கூறுகிறார். தற்போது சமையல் எரிவாயு வெடிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், எரிவாயு நிறுவனங்கள் புரொப்பேன் - பியூட்டேன் கலவையை 30 - 70  இல் இருந்து 50 - 50 ஆக மாற்றி உள்ளதாகவும் தங்கள் அமைச்சு தலையிட்டு குறித்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவ்வாறு கலவை மாற்றப்பட்ட சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்றியதாகவும் ஏற்கனவே இது தொடர்பில் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற  உணவக அறைக்கு அருகில் கேஸ் சிலிண்டர்கள் அதிகளவில் காணப்படுவதால் நாடாளுமன்ற உணவு அறைக்கு செல்லவே அச்சமாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

அப்படி இருக்கையில் வீட்டு சமையல் அறையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து, வீடுகளை அழித்து, மக்களைக் கொன்று குவிப்பதில் ஆச்சரியம் உண்டா?

இதற்கு முன்னர் நாட்டில் எரிவாயு விபத்துக்கள் ஆங்காங்கே இடம்பெற்ற போதிலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தினமும் எரிவாயு வெடிப்புகள் இடம்பெற்று வருகிறது.  கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பிறகு, கள்ளப் படகில் அன்றி சுங்கம் ஊடாகவே தரமற்ற தேங்காய் எண்ணெய் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  ஊழல் சீனி அவ்வாறு வந்தது. ஊழல் வௌ்ளை பூண்டு அவ்வாறு வந்தது. கள்ளத் தனமாக மஞ்சள் நாட்டுக்குள் வந்தது.  கிருமி நாஷினி அடங்கிய அசிங்க உரம் நாட்டுக்கு உள்ளே வந்தது. அது ஒரு வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது எரிவாயு வந்து விட்டது.  நாட்டில்  சமையல் அறைகள் வெடித்து சிதறுகின்றன. நாளை என்ன நடக்கும் என்பது பைத்தியக்காரனுக்கு மட்டுமே தெரியும். 

---------------------------
by     (2021-11-28 16:25:20)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links