( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர், 10 , பிற்பகல் 8 15 ) அமைச்சரவையை ஏமாற்றி நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்திற்கு தெரியாமல் ஏமாற்றி நாட்டின் இறைமை அதிகாரம் கொண்ட நாட்டு மக்களையும் முட்டாள்களாக்கி திருட்டுத் தனமாக கையொப்பம் இடப்பட்ட கெரவலபிட்டி - யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை ஐக்கிய அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் தேசத் துரோக சட்ட விரோத ஒப்பந்தம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமாகிய அனுர குமார திசாநாயக்கவினால் இன்று 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக குறித்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களைத் தருமாறு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை முன்வைத்த போதும் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அதற்கான காரணமும் தற்போது இந்த ஒப்பந்தம் வெளியே வந்துள்ளதால் தெரிய வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதும் விற்பனை செய்யும் நடவடிக்கை இல்லை என நிலத்தில் அடித்து சத்தியம் செய்த நபர்களுக்கு ஒப்பந்தத்தின் ஊடாக அபூர்வமான பதில் கிடைத்துள்ளது. அதுதான் ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் விற்பனையாளர் (Seller) - " இலங்கை அரசு " என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கொள்வனவு செய்யும் நபர்களாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு கொண்ட நிறுவனத்தை " (Buyer) " -கொள்வனவாளர் " என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இது விற்பனை ஒப்பந்தம் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி வழங்கப்பட்டமை ' நியூ போடிரைஸ் எனர்ஜி ' என்ற நிறுவனத்திற்கு ஆகும். ஆனால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு ' நியூ போடிரைஸ் எனர்ஜி ஸ்ரீலங்கா பவர் ஹோல்டிங் எல் எல் சி ' என்ற நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலக்கம் 1206 ஒரங்ச் ஸ்ட்ரீட் வாஷிங்டன் டீர் , 19801 என்பதே இந்த நிறுவனத்தின் முகவரி ஆகும்.
எனவே ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்துடன் அல்லாது அதனோடு இணைந்த மற்றும் ஒரு இணை நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ஹோல்டிங் நிறுவனம் ஒன்று ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளமை புதுமையான விடயம் ஆகும். யுக தனவி ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் படுவதற்கு முன்னர் தற்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் திடீரென காணாமல் போய் ஐக்கிய அமெரிக்காவான தனது சொந்த நாட்டிற்கு விஜயம் செய்திருந்தார். சிறிது நாட்கள் ஐக்கிய அமெரிக்காவில் தங்கி இருந்த பசில் ராஜபக்ஷ அங்கு என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியாத புரியாத புதிராகவே உள்ளது.
இந்த ஒப்பந்தம் சட்ட விரோதமானது என கூறுவதற்கு பிரதான காரணம் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்துடன் அல்லாது வேறு ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனை இரகசிய ஆவணமாக வெளியில் கொடுக்காமல் வைத்திருக்க காரணம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13 - 1 சரத்திற்கு அமைய ஆகும். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வருடங்கள் செல்லும் வரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இரண்டு தரப்புகளின் அனுமதி இன்றி ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களையோ ஆவணங்களையோ நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தக் கூடாது என்பதே இந்த சரத்து ஆகும். இதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் 3 - 2 சரத்தின் படி எதிர்வரும் ஒப்பந்தங்களின் போது ' நியூ போர்டிரைஸ் எனர்ஜி ஸ்ரீலங்கா பவர் ஹோல்டிங் எல் ல் சி ' நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுவதற்கு இலங்கை அரசாங்க தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்ட விரோத தேசத் துரோக ஒப்பந்தத்தில் இலங்கை அரசு சார்பில் திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல என்ற சஜித் ருசிக்க ஆட்டிகல என்பவர் கையொப்பம் இட்டுள்ளார்.
நாட்டு மக்களின் இறைமை அதிகாரத்திற்கு தெரியாமல் நாட்டில் நிதி அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்துக்கு தெரியாமல் அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்காமல் அமைச்சரவைக்கு அறிவிக்காமல் அனைவரையும் ஏமாற்றி சட்ட விரோத ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து நாட்டுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் எஸ் ஆர் ஆட்டிகல எதிர் காலத்தில் சிறைக்கு செல்வார் என்பது நிச்சயமான உண்மையாகும். லலித் வீரதுங்க போன்றவர்கள் திருட்டு வேலைகளில் ஈடுபட்ட பின்னர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது போல எஸ் ஆர் ஆட்டிகலவை காப்பாற்ற ஒரு நாளும் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரப் போவதில்லை என்பது எழுதப்படாத உண்மை. ராஜபக்சகளுக்கான இறுதி கீதமே பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் ராஜபக்சக்கள் சொல்கிறார்கள் என சட்ட விரோத தேசத் துரோக ஒப்பந்தங்களில் கைச்சாத்து இடுவது குறித்து அரச ஊழியர்கள் ஒன்றுக்கு பல தடவை சிந்திக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யுகதனவி ஒப்பந்தத்தின் முழு வடிவம் கீழுள்ள இணைப்பில் உள்ளது.
https://pdfhost.io/v/xfXxPRKRN__
---------------------------
by (2021-12-13 14:05:10)
Leave a Reply