-ரசல் ஹேவாவசம் வெளிப்படுத்துகிறார்
(லங்கா- ஈ நியூஸ் - 2021, டிசம்பர். 13 , இரவு 9.00) ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள் பல்வேறு வேடங்களில் ஜனாதிபதிக்கு நெருக்கமாக செயற்படும் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கும் பல சம்பவங்கள் ஜனாதிபதியின் இரண்டு வருட பதவி காலத்தில் நடந்து முடிந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் பல சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
நிராயுதபாணியான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட சுமார் 300 பேரைக் கொன்று, சுமார் 500 பேர் நிரந்தர ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்ட கொடூரமான ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பின்னணியில் ஒரு கொடூரமான கதை உள்ளது.
அதாவது, தங்களுக்குத் தேவையான அரசியல் செல்வாக்கிற்காகப் பகிரங்கமாகச் சம்பளம் வாங்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் உள்ள ஒரு சில காட்டு மிராண்டித்தனமான நபர்களின் துணையுடன் நீண்ட காலமாக இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை குண்டுதாரியான சஹாரான் ஹாஷிமின் மிக நெருங்கிய தீவிரவாத நண்பர்கள் தம்மை 'ஆமி முகமட்' , 'ஆமி பைஸ்' மற்றும் 'ஆமி ரில்வான்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டதே இதற்கு சிறந்த உதாரணம்.
அவர்கள் கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாக செயற்பட்டனர். இராணுவ பலம் மற்றும் பல்வேறு வழிகளில் அரச அனுசரணை உட்பட ஏனைய இரகசிய ஆதரவைப் பயன்படுத்தினர்.
அண்மையில் புதிய களனி தொங்கு பாலம் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விடுத்த அச்சுறுத்தலானது அவர் நன்கு அறிந்த குற்றவாளிகளை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்துவதற்காக எடுத்த அச்சுறுத்தல் முயற்சியாகும். ஜனாதிபதி அந்த நிகழ்வில் கூறியது என்ன ? " கூடுதலாக துள்ளினால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டம் ஒன்றை இயற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் தண்டிக்கபாபடுவர் " என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது அவருடைய போலி நடிப்பாகும். மற்றுமொரு பக்கம் அவ்வாறு செய்தாலும் இந்த மிகப் பெரிய காட்டு மிராண்டித்தனமான குற்றச் செயலுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது. அது அந்த தண்டனைக்கும் உள்ளடங்காத மோசமான செயலாகும்.
அவ்வாறான தண்டனை ஒன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உள்ள பொறுப்பு என்ன ? சஹரான்களை போஷித்து ஊக்குவித்து வளர்த்து அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர்களைப் பாதுகாத்து அரச கணக்காய்வில் உள்ளடங்காத அரச பாதுகாப்பு அமைச்சின் இரகசிய வங்கிக் கணக்கு ஊடாக அவர்களுக்கு நிதி உதவி வழங்கி செயல்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்புச் செயலாளராக இருந்த 2009 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச களனி பாலம் திறக்கும் நிகழ்வில் ஆற்றிய உரைக்கு சமனான கருத்து ஒன்றை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் பாராளுமன்றத்திலும் வெளியிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விவாதம் ஒன்றில் ஈடுபட்ட அவர், " தானும் நன்கு அறிந்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தின் மிகவும் இரகசியமான தகவல்களை வெளியிட்டுக் கொள்வதற்கு ஆசையா" ? என மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுத்து மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிட்டார்.
இந்த அனைத்து கருத்துக்களிலும் முழு நாடும் அறிந்து கொண்ட இரகசியம் ஒன்று உள்ளது.
அதுதான் தற்போதைய அரசாங்கத்திற்கும் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் குற்றவாளிகளுக்கும் அதாவது பிரதான சூத்திரதாரிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகும்.
விசாரணை ஆணைக்குழு ஊடாகவும் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் ஊடாகவும் இந்த மிக மோசமான குற்றச் செயல்களுடன் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இருக்கும் நேரடி தொடர்பு மற்றும் இந்த குற்றச் செயலை முன்னெடுக்க இராணுவம் மற்றும் பொலிஸ் குழுவினருக்கு உள்ள தொடர்புகள் குறித்த சாட்சிகளும் போதுமான அளவு வெளி வந்துள்ளன.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் ஆழமான சிந்தனைக்கு வழி ஏற்படுத்திய முதலாவது காரணம் இதோ : நிலந்த ஜெயவர்தன என்ற பொலிஸ் அதிகாரிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தற்போதைய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபயவிடமும் போதிய அளவான பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளவும் : அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி என்ற மிக முக்கியமான பதவிக்கு எந்தவித தகுதியும் இல்லாத நிலந்த ஜெயவர்தனவை நியமித்தது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார்.
சஹரான் குழுவினர் முன்னெடுத்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் கொலைகளுடன் தொடர்புடைய உண்மையான தகவல்களை மறைத்து தனக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை தனது கணினி மற்றும் தொலைபேசியில் இருந்து அழித்து மிக மோசமான குற்றத்தை புரிந்தவர் நிலந்த ஜெயவர்தன ஆவார். அவ்வாறு இருக்கையில் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஏற்பட்ட அழிவுகளை தனது அரசியலின் ஆரம்ப படியாக மாற்றியதோடு தான் ஜனாதிபதி பதவியேறறு இரண்டு வாரங்களில்
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு வருட ஆட்சி காலத்தில் இதுவரைை எவருக்கும் தண்டனை வழங்கவில்லை. அதாவது நிலந்த ஜெயவர்த்தனவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து அவர் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டு பின்னர் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அத்துடன் குற்றவியல் சட்டத்தின் கீழ் நிலந்த ஜெயவர்த்தனவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதும் அவரை அரச தரப்பு சாட்சியாளராக மாற்றியமை எந்த நோக்கத்தின் அடிப்படையில் ஆகும் ? யார் இதற்கு ஆலோசனை வழங்கியது ? எனவே இவ்வாறு சலுகைகள் மற்றும் பதவிகள் வழங்குவதன் மூலம் இந்த குற்றச்சாட்டுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேரடி தொடர்பு கொண்டுள்ளமை வெளிப்படையாகத்் தெரிகிறது.
அன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நிலந்த ஜெயவர்த்தனவை விசாரணைக்கு அழைத்த போது சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் அழைப்பை மதிக்காத அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலந்தவை குறித்த விசாரணைக்கு செல்ல வேண்டாம் என அச்சுறுத்தினார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் குறித்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நிலந்தவிடம் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது பாரிய அழுத்தத்தின் மத்தியில் அவரது வாக்கு மூலங்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதை அப்போது ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த நாம் அவதானித்தோம்.
எனவே நந்தசேன கோட்டாபய ராஜபக்ச மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜெயவர்தன ஆகியோர் மிகவும் நெருக்கமாக செயல்பட்ட விடயத்தை எங்களிடம் இருந்து மறைக்க முயற்சிப்பதன் காரணம் என்ன ?
ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்ததன் பின்னர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் விடையங்களை மூடி மறைப்பதற்கு பல செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாங்கள் மீண்டும் ஞாபகப்படுத்திக் கூற வேண்டும். காரணம் இவற்றை மறைப்பதற்கு மறப்பதற்கும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் நிலந்த உள்ளிட்ட மூளை காரர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவற்றை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்த வேண்டியது எங்களுடைய கடமையாகும்.
1. ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய குற்ற விசாரணை திணைக்களத்தின் ( சிஐடி ) அனுபவம் வாய்ந்த திறமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகள் பலரை மாறி மாறி இடமாற்றம் செய்தமை,
2. பாரிய குற்றங்களை தேடி பின்னால் சென்று கொண்டிருந்த குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்தமை மற்றும் அவரது நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்காது கொரோனா வைரஸுக்கு உள்ளாக்கி அவரை கொலை செய்ய முயற்சித்தமை.
3. ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல தடவைகள் கோரிக்கை வைத்தும் அதனை இன்றுவரை பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இழுத்தடிப்பு செய்கின்றமை.
4. அதி வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இலங்கை கத்தோலிக்க சபை ஆகியன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கைகளை பகுப்பாய்விற்கு கோரிய போதும் அது குறித்து எவ்வித பதிலும் இதுவரை வழங்காமல் இருப்பதுடன் திட்டமிட்டு விசாரணை அறிக்கையை மறைக்கின்றமை.
5. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தாமை மற்றும் இழுத்தடிப்பு செய்கின்றமை
6. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிகவும் ஆழமாக பகுப்பாய்வு செய்வதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் முட்டாள் அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை. ( ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் அந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள் குற்றம் மற்றும் குற்றச் செயலுக்கு துணை போனவர்கள்)
7. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர திடீரென ஊடகங்கள் மத்தியில் வந்து ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என ஒருவரை பெயரிட்டமை.
8. பொலிஸ் மா அதிபருக்கு தொடர்பற்ற எழுதிக் கொடுத்த அறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன முழு நாட்டிற்கும் வாசித்துக் காட்டி கேலி கூத்தில் ஈடுபட்டமை.
9. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான பிக்கு வேடம் தரித்த ஞானசார தேரர் உள்ளிட்ட சில கைக்கூலி பிக்குகளை அழைத்து ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செயலமர்வு நடத்தி கத்தோலிக்க சபையை ஆத்திரமூட்டும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து விடயத்தை திசை திருப்ப முயற்சித்தமை.
10. நிலந்த ஜெயவர்தன போன்ற மிகவும் மோசமான குற்றங்களை மறைக்கும் போலீஸ் அதிகாரிகளை திட்டமிட்டு பாதுகாத்து அவரை அரச சாட்சியாளராக மாற்றி ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் கேடுகெட்ட மிக மோசமான முயற்சி.
11. சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா காதியாவின் சாட்சிகளை பகிரங்கப் படுத்தாமல் சமயம் பார்த்து அவரை கொலை செய்ய எதிர்பார்த்துள்ளமை.
12. இறுதி முயற்சியாக சர்வதேச பயங்கரவாத பகுப்பாய்வாளர் என தன்னை காட்டிக் கொள்ளும் 88 - 89 காலப்பகுதிகளில் இளைஞர்களை கொலை செய்வதற்காக தூதராக செயல்பட்ட அதன் பின்னர் ஒவ்வொரு ராஜபக்ச ஆட்சியிலும் தூதராக செயல்பட்ட பிரபலமான ரொஹான் குணரட்ன என்பவர் ஊடாக சஹரான் குழுவிற்கும் புலனாய்வு பிரிவினருக்கு இடையில் காணப்பட்ட தொடர்புகளை மூடி மறைப்பதற்கு விரிவுரை மற்றும் செயல் அமர்வுகளை ஏற்பாடு செய்து நடத்தியமை. ( அதற்கு இலஞ்சமாக அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்பு தொடர்பான பகுப்பாய்வு நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக அண்மையில் நியமனம் வழங்கினார்.)
கண் காது வாயுடைய நீதியை எதிர்பார்க்கும் அமைதிப் போராட்டம் நடத்தும் மக்களே.. தேவ சாபத்திற்கு உள்ளாகியிருக்கும் கொலையாளிகளை குற்றவாளிகளை ஆட்சியாளர்களை தண்டிக்கவென ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்துவது மாத்திரமன்றி அச்சமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியை நாடவும்.
அதற்காக ஒற்றுமையாக ஐக்கியப் படுவோம்.
---------------------------
by (2021-12-13 14:39:02)
Leave a Reply