-எழுதுவது அலரிமாளிகை விஷேட செய்தியாளர்
(லங்கா ஈ நியூஸ் -2021, டிசம்பர் , 23 பிற்பகல் ஐந்து நாற்பத்தி ஐந்து 5.45) இலங்கையின் முதல் தர ஆடைத் தொழிற்சாலைகளில் உயர்தரமான உற்பத்திகள் மேற்கொள்ளப்படுவது சர்வதேச சந்தையை பிடிப்பதன் நோக்கத்தில் ஆகும். உலகின் மிகப் பிரபலமான டொமி , போலோ , நைக் , லிவைஸ் மற்றும் விக்டோரியா சீக்ரெட் போன்ற ஆடைகள் பல இலங்கையில் உற்பத்தி பூர்த்தி செய்யப்பட்ட ஆடைகளாக கருதப்படுகிறது. குறைந்த அளவு செலவிலான மனித வளம் காலம் தோறும் காணப்பட்ட வியாபாரம் சந்தை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இலங்கை நாட்டிற்கு அரிய வாய்ப்புகள் இந்த ஆடை உற்பத்திகள் மூலம் கிடைத்தன. ஆனாலும் ராஜபக்சக்களின் 2005 தொடக்கம் 2015 வரையான ஆட்சி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி எஸ் பி பிளஸ் GSP+ வரிச் சலுகை இழக்கப்பட்ட காரணத்தினால் குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் இலங்கையில் இருந்து அகற்றப்பட்டு பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டன.
உற்பத்தி திட்டமிடல், வடிவமைப்பு, துணி, நூல் மற்றும் பொத்தான் போன்ற அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் மனித வளம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு உலகின் மிகப் பிரபலமான பெயர் பொறித்த ஆடைகள் இலங்கை தயாரிப்பு ஆடைகளாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் தடை செய்யப்படும். இந்தப் பெயர் பொறிக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆடைகள் ஒன்றேனும் இலங்கை சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டால் தமக்கான வியாபாரம் நிறுத்தப்படும் என்ற அச்சத்தில் வர்த்தகர்கள் அதனை செய்வது கிடையாது. நேரடியாக இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
உற்பத்தியின் போது குறைபாடுகள் மற்றும் தவறுகள் ஏற்படும் ஆடைகள் ' டெமேஜ் ஸ்டொக் ' என்ற பெயரில் ஒதுக்கப்பட்டு உற்பத்தி நிறுவனத்தின் பெயர் இலட்சினை அகற்றப்பட்டு தேசிய சந்தைக்கு விற்பனைக்கு விடப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற போதும் உலக புகழ் பெற்ற உற்பத்தி பெயர் சின்னம் அகற்றப்படும். மிகவும் பழைய உற்பத்திகள் இருக்கின்ற போது இரண்டு வருடங்களின் பின்னரே உற்பத்தி சின்னத்தை அகற்றி சந்தைக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். அதற்கு காரணம் குறித்த உற்பத்தியின் வடிவமைப்பின் காலம் காலாவதியான பின்னர் இவ்வாறு சந்தைக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் தற்போது உலகப் புகழ்பெற்ற பெயர் சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை இலங்கையில் வர்த்தகர்களுக்கு அதே சின்னத்தில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டிற்கு இடி விழுந்தாலும் பரவாயில்லை தங்களுடைய தேவையை பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும் ராஜபக்சே குடும்பத்தின் செயல் காரணமாக இவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக இலங்கைக்கு அதிகளவான அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் ஆடைத் தொழிற்சாலை துறையும் மிக வேகமாக அழிவை நோக்கி செல்லும்.
இந்த எழுத்தாளர் இதற்கு முன்னர் கூறியது போன்று அலரி மாளிகையில் தற்போது அனைத்து கொடுக்கல்-வாங்கல்களும் நித்திஷா ஜெயசேகர என்ற யோசித ராஜபக்சவின் மனைவியின் வர்த்தகம் ஊடாகவே முன்னெடுக்கப்படுகிறது. அனைத்து வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்களின் விளம்பரங்கள் மாத்திரமன்றி அரச திட்டங்கள் அனைத்திலும் வழங்கப்படும் விருந்து வெட்டப்படும் கேக் போன்ற அனைத்தும் நித்திஷாவின் நிறுவனம் ஊடாகவே வழங்கப்படுகிறது.
கொழும்பு 7 ரிங்டன் அவென்யூ இலக்கம் 260 என்ற இடத்தில் அமைந்திருக்கும் ' நுமா கான்செப்ட் ஸ்டோர்ஸ் ' என்ற நித்திஷா ஜெயசேகரவின் புதிய வியாபார நிலையத்தில் மேற் கூறிய உலக புகழ் பெற்ற பெயர் சின்னம் பொறித்த ஆடைகளை கொள்வனவு செய்ய முடியும். அதுவும் சாதாரணமாக இல்லை.
அண்மையில் நாட்டின் பிரதான ஆடை உற்பத்தி தொழிற்சாலை உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்த யோசித்த ராஜபக்ஷ தனது மனைவியின் புதிய வியாபார நிலையத்திற்கு தங்களது ஆடை உற்பத்திகளை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் போது மறுத்து ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு ஆடை உற்பத்தி தொழிற்சாலை உயர் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு மறு நாள் யோசித ராஜபக்சவின் கடற்படை கைக்கூலிகள் சிலர் குறித்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சென்று உலக புகழ் பெற்ற பெயர் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகளை பலாத்காரமாக ராஜபக்சக்களின் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி யோசிதவின் மனைவியின் புதிய வர்த்தக நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
ராஜபக்சகளின் இந்த கேவலமான செயற்பாடுகள் காரணமாக இலங்கை நாட்டுக்கு சிறிய அளவேனும் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் ஆடை தழிற்சாலை துறை அழிவை நோக்கி செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை. சர்வதேச நிறுவனங்களில் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும்.
நாளை மறு தினமே ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் GSP+ இலங்கைக்கு தடை செய்யப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள சில ஆடை உற்பத்தி தொழிற் சாலைகளுக்கும் அழிவு நிச்சயம்.
தமது கைக் கூலிகளுக்கு கழிவுத் தேயிலையை ' சிலோன் டீ ' என்ற பெயரின் கீழ் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்து இலங்கையின் தேயிலை ஏற்றுமதி துறையை சீரழித்த விடயம் போலவே ராஜபக்சக்கள் ஆடை தொழிற்சாலை துறையையும் அகால மரணத்துக்கு இட்டுச் செல்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
( வங்கி கட்டமைப்பில் அனைத்தையும் கணினி மயப்படுத்தல் செயற்பாடுகளையும் தனக்கு கீழ் யோசித ராஜபக்சவின் டிஜிட்டல் திட்டத்தினூடக கொண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கியின் தலைவருக்கு யோசித்த ராஜபக்ச பேசிய விதம் மற்றும் அதற்கு மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வழங்கிய பதில் போன்றவற்றை அடுத்த கட்டுரையில் எதிர்பாருங்கள் )
---------------------------
by (2021-12-25 13:39:57)
Leave a Reply