- எழுதுவது லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 25 , பிற்பகல் 06.00 ) அண்மையில் கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற இலங்கை பிரிமியர் லீக் எல் பி எல் இறுதிக் கிரிக்கெட் போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறிய இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பார்வையாளர்கள் அவர் சென்று முடியும் வரை ஹூ... கூச்சலிட்டனர். நேற்று முன்தினம் தலவத்துகொடையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இரவு உணவு உண்பதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் மெய் பாதுகாவலர்களுடன் வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்த மற்றவர்கள் ஹூ சத்தமிட்டு அசிங்கப்படுத்தினர். அந்த அவமானத்தை எதிர் கொள்ள முடியாமல், பிரசன்ன ரணதுங்க மற்றும் குடும்பத்தினர் உணவகத்தை விட்டு வெளியேறினர். இன்று ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் சமூக அமைதியின் சமூக எதிர்ப்பு இப்படித்தான் வௌிப்படுத்தப்படுகிறது.
இந்த சமூக அமைதியின்மையின் வௌிப்பாடாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (24) இரவு தனது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓஐசி உட்பட 10 பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். அதில் 4 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் ஆறு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒரு சார்ஜென்ட், இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலீஸ் சாரதியும் அடங்குவர்.
நேற்று இரவு திருக்கோவில் பொலிஸார் நத்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த போதிலும் துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் அதற்கு அழைக்கப்படவில்லை என லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கவலை அடைந்து இருந்துள்ளார். அதற்கு முதல் நாள் விடுமுறை கேட்டிருந்தும் விடுமுறை வழங்காததால் அவர் கோபம் அடைந்திருந்தார்.
பொலிஸ் நிலையத்திற்கு உள்ளே நத்தார் விருந்து நடந்து கொண்டிருந்த போது, சார்ஜன்ட் தனது தனி வண்டியில் வந்து, பொலிஸ் வாயில் அருகே பாதுகாப்பில் இருந்த கான்ஸ்டபிளிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்குள் சென்றுள்ளார். இதற்கு இடையில் ஜீப் வண்டியில் வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓஐசி மீதும் சார்ஜன்ட் துப்பாக்கியால் சுட்டுள்ளார். விருந்தில் இருந்த மற்ற பொலீஸ் அதிகாரிகள் வெறுங் கையுடன் ஓடி விட்டனர். 10 பேரை பொலிஸ் சார்ஜென் சுட்டு விட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய கையுடன் மீண்டும் தனது வண்டியில் ஏறி தப்பி ஓடினார்.
குறித்த பொலிஸ் சார்ஜன் மொனராகலை ஆயித்திமலையில் வசிப்பவர். பின்னர் இரவு ஆயித்திமலை பொலீசில் சரணடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜென்ட் 28 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றியவர். அதாவது போரில் கலந்து கொண்டதுடன், நல்ல ஒழுக்கப் பயிற்சி பெற்றிருந்தார். அப்படிப்பட்டவரின் மன நிலை திடீரென குலைந்தது ஏன் ?
இது தொடர்பில் ஒரு முக்கியமான கருத்தை லங்கா ஈ நியூஸிடம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, " இலங்கை காவல் துறை மற்றும் இராணுவத்தில் உள்ள சாதாரண அதிகாரிகளில் பெரும்பான்மையானவர்கள் தொலை தூர கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெற்றோரும் மற்ற குடும்பங்களும் அந்த கிராமங்களில் விவசாயிகள். காலங் காலமாக யாரையும் தங்காமல் வாழ்ந்தவர்கள் இன்று அனைவரின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உரம் இல்லாமல் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை பாதுகாப்பு படையில் பணிபுரியும் ஒரு அதிகாரி பராமரிக்க வேண்டும். அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையில் பணிபுரியும் சாதாரண அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு வெடித்த சமூக அழுத்தமே அதுவாகும் " என்று எம்மிடம் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.
இது மேலும் தீவிரமடையும் என்பதுடன் அழுத்தத்தில் உள்ள பாதுகாப்பு காவலர்கள் பாதுகாப்பு வழங்கும் பிரபுக்கள் நோக்கி துப்பாக்கியால் சுடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மேற்கூறிய மூத்த காவல் துறை அதிகாரி இறுதியாக எச்சரித்தார்.
---------------------------
by (2021-12-26 20:21:16)
Leave a Reply