- எழுதுவது லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவை செய்தியாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் , 30, பிற்பகல் 03.00 ) இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ( மாரா ) மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் இரண்டு நாள் விஜயமாக இந்தியாவின் திருப்பதிக்கு யாத்திரைக்கு சென்ற T7-JSG தனியார் வர்த்தக அதி சொகுசு ஜெட் விமானம் மற்றும் ராஜபக்சேக்களின் மர்மப் பயணம் பற்றிய மேலதிக விவரங்கள் வௌிந்த வண்ணம் உள்ளன. இந்த விடயமானது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
JetSetGo Aviation Services Private Limited) ஜெட்செட்கோ ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் (பிரைவேட்) நிறுவனம் இந்தியாவிற்கு சொந்தமான ஒன்று என்பதுடன் உலகில் பணக்கார நபர்களுக்கு விமானம் மற்றும் ஜெட் விமானங்களை வழங்கி வரும் நிலையில் இந் நிறுவனம் இத்தாலியின் செயின்ட் மரினோவில் வரி புகலிடமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கான சராசரி கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு 6700 அமெரிக்க டொலர் ஆகும்.
இந்த அதி சொகுசு விமானத்தின் உண்மையான உரிமையாளர் தற்போதைய லைக்கா மொபைல் நிறுவன உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவாக இருக்கலாம் என லங்கா ஈ நியூஸ் ஏற்கனவே கூறியது.
பயங்கரவாத குழுக்கள் அமைப்புகளின் கருப்பு பணத்தை வௌ்ளை பணமாக மாற்றும் நிறுவனம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் பல நாடுகள் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு தொழில் செய்ய வாய்ப்பு அளிக்காத நேரத்தில், இலங்கையின் பிரபல சிங்கள தொலைக்காட்சி நிறுவனமான ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட பெரும் சர்ச்சைக்கு உரிய ஈ ஏ பி குழும நிறுவனத்தை விலைக்கு வாங்கிய தற்போது இங்கிலாந்தில் இருந்து செயற்படும் லைக்கா மொபைல் நிறுவனம் 740 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் ஒன்றை யாழ். பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதற்கும் தயார் நிலையில் உள்ளது.
' ஞானம் அறக்கட்டளை ' என்ற அரச சார்பற்ற என் ஜி ஓ தொண்டு நிறுவனம் இந்த திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களால் ஞானம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
லைக்கா மொபைல் நிறுவனத்தை விட அதிக விலைக்கு ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட ஈ ஏ பி குழும நிறுவனத்தை கொள்வனவு செய்ய உள்ளூர் முதலீட்டாளர்கள் ஏலத்தில் கோரிய போதிலும், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவரின் தலையீட்டால் லைக்கா மொபைலின் துணை நிறுவனத்தால் ஸ்வர்ணவாஹினி மற்றும் ஈ ஏ பி கொள்வனவு செய்யப்பட்டது.
லைக்கா நிர்வாகம் இலங்கையில் தொடங்கி பின்னர் ஹிரு தொலைக்காட்சியில் இருந்த ஊடகவியலாளர் சுதேவ நாணயக்கார அதிக சம்பளம் கொடுத்து ஸ்வர்ணவாஹினி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் சிறிது காலத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் நாயகமாக அவர் நியமிக்கப்பட்டார். இவை அனைத்திற்கும் பின்னால் அரசியல் வணிக தேவைகள் மட்டுமே உள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதி பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அதி சொகுசு ஜெட் விமானம் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கி பின் அதே நாளில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து கென்யா நாட்டின் ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்திற்கு பறந்து சென்றுள்ளது. கடந்த 13 ஆம் திகதி மலாவியில் உள்ள மஹரி மசூரி சஃபாரி கேம்ப் சென்று, 14 ஆம் திகதி ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் இருந்து கென்யாவில் உள்ள புகோபா விமான நிலையத்துக்கும், அங்கிருந்து தான்சானியாவுக்கு 15 ஆம் திகதி சென்று தான்சானியாவில் இருந்து உகாண்டா, கம்பாலாவுக்கு சென்று பின் கொழும்பு ரத்மலான விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு இரத்மலானையை வந்தடைந்த பிறகு, கொச்சிக்கும் சென்னைக்கும் இரண்டு முறை சென்று திரும்பிய விமானம் டிசம்பர் 23 ஆம் திகதி கொழும்பில் இருந்து திருப்பதி சென்று டிசம்பர் 24 ஆம் திகதி மீண்டும் கொழும்பு திரும்பி டிசம்பர் 27 ஆம் திகதி புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்று அடைந்துள்ளது.
கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கன வி கனநாதனுக்குத் தெரிந்தே குறித்த விமானம் கொழும்பில் இருந்து கென்யா நோக்கிச் சென்றுள்ளது. அங்கு கனநாதன் பல ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று சந்தேகத்திற்கு உரிய பல ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இலங்கையில் இருந்து பெருமளவிலான ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ரத்தின கற்கள் , தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சட்ட விரோதமாக கடத்திச் செல்வதற்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டதுடன் கடத்தல் பணி முடிவில் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதி பயனத்திற்கு பயன்படுத்தப்பட்தாக முடிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் திருப்பதி விஜயத்தில் கன வீ கனநாதனும் உடன் சென்றார்.
இந்த அதி சொகுசு ஜெட் விமானம் தனது தந்தையின் நண்பர் ஒருவரால் தந்தைக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் அந்த நண்பரின் பெயர் தனக்கு தெரியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பிரதமர் அலுவலக பிரதானியுமான யோஷித ராஜபக்ச ' The Morning ' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தனது வாழ் நாளின் கடைசி சில மாதங்களைக் கழிக்கும் முரட்டுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தீவிர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அது மிக மிக முக்கியமான ஒன்றாக அமையும். சத்திர சிகிச்சையின் பின்னரே மஹிந்த ராஜபக்ஷவின் தலை விதி தீர்மானிக்கப்படும் என்பதால் பசில் ராஜபக்ஷவை தற்காலிக பிரதமராக நியமிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கென்னிய உயர்ஸ்தானிகர் கன வீ கனநாதன் தனது ஆபிரிக்கா பயணத்தின் போது உரிய விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் மற்றும் திருப்பதி சென்று மஹிந்தவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இங்கே தரப்பட்டுள்ளது.
---------------------------
by (2021-12-30 14:11:49)
Leave a Reply