( லங்கா ஈ நியூஸ் - 2021 , டிசம்பர் 29, முற்பகல் 13.30 ) மெதமுலன முட்டாள் ராஜபக்ஷக்களின் குடும்ப மூர்க்கத் தன ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் ஏற்பாடுகள் இன்றி அவர்களின் தலைவர்களுக்கு ஹூ சத்தம் அடிக்கத் தொடங்கி விட்டனர். தற்போதைக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலா துறை அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இரசாயன உர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மக்களின் ஹூ.. சத்தம் பெற்றுள்ளனர். குறிப்பாக வாசுதேவ நாணயக்கார தனது வாக்கு அதிகார பிரதேசமான எஹலியகொவிலும் நாமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையிலும் ஹூ சத்தம் பெற்றனர். வாசுதேவ ஹூ சத்தம் பெற்று திரும்பி வந்தார்.
இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் மத்தியில் ' வெட கரன விருவா ' - வேலை செய்யும் வீரர் என்று புகழ் பெயர் எடுத்த ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஹூ .. சத்தம் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது மிரிஹான வீட்டில் இருந்து வாகன பேரணியில் 29 ம் திகதி நுகேகொட ஜுபிலி கனுவ பகுதியில் உள்ள ' பெலவத்த கிரி பிட்டி கடை ' பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு வரிசையில் கூடி இருந்த மக்கள் ஜனாதிபதியை பார்த்து ஹூ ... சத்தம் அடித்துள்ளனர்.
பெலவத்த கிரி பிட்டி கடைக்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து பால் வாங்க வரிசையில் நிற்பதை அண்மைக் காலமாக காண முடிகிறது. 29 ம் திகதி மாலை இவ்வாறு நீண்ட வரிசையில் கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்த மக்கள் அந்த வழியாக தனது வீடு நோக்கிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கண்டு மிகவும் ஆவேசத்துடன் ஹூ சத்தம் இட்டுள்ளனர்.
பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பெலவத்த கிரி பிட்டி கடையை மூடுமாறு பணித்துள்ளனர்.
---------------------------
by (2021-12-31 05:02:36)
Leave a Reply