- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2021, டிசம்பர் , 31 முற்பகல் 11.40 ) ராஜபக்ஷக்கள் நாட்டை அழிவு குழிக்குள் தள்ளிய காரணத்தால் நாட்டு மக்கள் மிகவும் கஸ்டப்படும் நிலையில் மக்கள் புரட்சி விரைவில் வெடிக்கும் என்ற எச்சரிக்கை விடுத்த போதும் கொழும்பு ஏழில் பிரதமரின் வீட்டுக்கு அருகாமையில் இந்த மக்கள் புரட்சி 30 ம் திகதி வெடித்தது. எரிவாயு கெஸ் திருட்டின் மூலம் இது நடந்துள்ளது.
கொழும்பு ஏழு மல் வீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு அருகில் சமையல் எரிவாயு விநியோக நிலையம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களில் இந்த கேஸ் விநியோக நிலையத்தில் தொடர் நீண்ட வரிசை காணப்பட்டது. மக்களுக்கு தேவையான கேஸ் விநியோகிக்க முடியாமல் இருந்தது. கடந்த 30 ம் திகதியும் இதே போன்று சமையல் எரிவாயு பெற நீண்ட வரிசை காணப்பட்டது. கேஸ் ஏற்றிய கொள்கலன் அந்த இடத்திற்கு மலை வேளையில் வந்தது. அந்த கொள்கலனின் இருந்த கேஸ் அங்கு வரிசை நின்ற மக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்கள் வரிசையில் இருந்து விலகி கொள்கலனில் ஏறி பலாத்காரமாக 25 சமையல் எரிவாயுகளை பணம் கொடுக்காமல் தூக்கிச் சென்றுள்ளனர்.
நாட்டில் காணப்படும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் சில இடங்களில் அத்தியாசநிய பொருட்களை திருடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் பச்சை மிளகாய், தக்காலி போன்றவை திருடப்பட்ட சம்பவம் பதிவாகியது.
கொழும்பு ஏழில் ஆரம்பமான கேஸ் திருட்டும் வேறு இடத்தில் பதிவான பச்சை மிளகாய், தக்காலி திருட்டும் விரைவில் நாடு முழுவதும் இடம்பெறும் நிலை ஏற்படும். அந்த அளவு நிலைமை மோசமாகி உள்ளது.
நாட்டில் மக்கள் புரட்சி பாரிய அளவில் வெடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...!
கேஸ் திருட்டு தொடர்பான புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
---------------------------
by (2022-01-02 08:22:21)
Leave a Reply