~

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை விரட்டி விட்டு பிரியந்தவை அந்த பதவியில் அமர்த்த ராஜபக்சக்கள் சூழ்ச்சி ..! சர்வதேசத்தில் இருந்து சட்டம்பே நீதிபதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

- லங்கா ஈ நியூஸ் நீதிமன்ற உள்ளக தகவல் சேவை செய்தியாளர் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022, ஜனவரி , 06 பிற்பகல் 10 : 30 ) பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரியவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விரட்டி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைக் கூலியாக செயல்படும் உயர் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க பிரியந்த ஜெயவர்த்தனவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கான சூழ்ச்சியை அரங்கேற்றி உள்ளதாக லங்கா ஈ நியூஸ் நீதிமன்ற உள்ளக தகவல் சேவை செய்தியாளருக்கு தெரிய வந்துள்ளது. 

ராஜபக்ஷக்களுக்கு பாரிய பிரச்சினை..

தற்போதைய பிரதம நீதியரசர் ஜெயந்த் ஜெயசூரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி கல நிறைவின் போது ஓய்வு பெற்று செல்ல உள்ளார்.  அதாவது அவர் ஓய்வு பெற்று செல்ல இன்னும் சுமார் மூன்றரை வருடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றத்தில் தற்போது உள்ள சிரேஷ்ட நீதிபதியாக புவனிகா அலுவிகாரே காணப்படுகிறார். அவர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஓய்வு பெற வேண்டி உள்ளது. அதன் பின்னர் சிரேஷ்ட நீதிபதியாக இருப்பவர் பிரியந்த ஜெயவர்த்தன ஆவார். ஜெயந்த ஜெயசூரியாவின் பின் பிரியந்த ஜெயவர்த்தன பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டாலும் அவரால் வெறும் 8 மாத காலம் மாத்திரமே சேவையில் நீடிக்க முடியும். அதன் பின்னர் அவர் ஓய்வு பெற்று செல்ல வேண்டும்.

இது ராஜபக்ஷக்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறி உள்ளது. காரணம் ராஜபக்சக்களின் கைக் கூலியாக செயல்படும் ராஜபக்ஷக்களுக்கு தேவையான எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய பிரியந்த ஜெயவர்த்தன போன்ற நீதிபதி பிரதம நீதியரசர் பதவியில் வெறும் 8 மாத காலம் மாத்திரம் நீடிப்பது ராஜபக்ஷக்களுக்கு உண்மையில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சாதாரணமாக வெறும் சட்டத்தரணியாக பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சகளின் வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரியந்த ஜயவர்தன திடீரென ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவி உயர்த்தப்பட்டு பின்னர் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக ராஜபக்சக்களால் நியமிக்கப்பட்டமை எதிர்வரும் காலத்தில் பிரியந்த ஜயவர்தனவை பிரதம நீதியரசராக நியமித்து தங்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான விடயங்களையும் செயல் படுத்திக் கொள்வதன் நோக்கத்தை கொண்டாகும். எனினும் எட்டு மாத காலங்கள் மாத்திரமே பிரியந்த ஜெயவர்த்தன பிரதம நீதியரசராக செயல்பட முடியும் என்ற விடயத்தை அறிந்து கொண்ட ராஜபக்சக்கள் உடனடியாக தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை பதவியில் இருந்து விரட்டி அடித்து அந்த இடத்திற்கு பிரியந்த ஜெயவர்த்தனவை நியமித்து கொள்வதற்கான சூழ்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஜெயந்த ஜெயசூரியாவை கொன்று திண்ணும் அளவிற்கு ராஜபக்சக்கள் கோபத்தில் உள்ளனர்.. 

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு செய்த அநியாயத்தின் காரணமாக ராஜபக்ஷக்களுக்கு சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வந்ததால் தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த போதிலும் அவ்வாறு செய்து ஜயந்த ஜயசூரியவை விரட்டும் செயற்பாட்டில் ஈடுபட ராஜபக்சக்கள் பின் வாங்கி உள்ளனர். அதனால் தற்போது புதிய சூழ்ச்சியை அரங்கேற்றி உள்ள ராஜபக்சக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரியவை தானாகவே பதவி விலக கூடிய நிலைக்கு தள்ளும் அளவிற்கு அவருக்கு அழுத்தங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். 

அதனால் உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஜெயவர்த்தன ஊடாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தும் திட்டத்தில் ராஜபக்சக்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷக்களுக்கு எதிராக அதிகளவான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக பதவி வகிக்கின்ற காலத்தில் ஆகும். அதனால் ஜயந்த ஜயசூரியவை கொன்று திண்ணும் அளவிற்கு ராஜபக்சக்களுக்கு அவர் மீது கடும் கோபம் உள்ளது.  இவ்வாறு ராஜபக்ஷக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சுமார் 75 வழக்குகள் தற்போதைய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்ணம் ராஜபக்சேக்களின் கைக் கூலியாக செயல்பட்டு வரும்  நிலையில் அவரை வைத்து தொழில் நுட்ப கோளாறு என்ற காரணத்தைக் காட்டி அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. சட்ட மா அதிபர் வழக்கினை வாபஸ் பெறும் போது நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது.நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்படும் தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்து மீண்டும் அந்த வழக்கினை பதிவு செய்ய முடியுமான நிலை காணப்படுகின்ற போதிலும் அவ்வாறு வழக்கொன்று இதுவரை மீள் பதிவு செய்யப்படவில்லை. 

உத்தியோகபூர்வமற்ற பிரதம நீதியரசர் சட்டம்பே பிரியந்த.. 

தன்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை வேறு செய்ய வழி இன்றி தானே வாபஸ் பெறுவதால் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய பாரிய மன அழுத்தத்தில் உள்ளார். அதற்கு இடையில் தற்போது உத்தியோகபூர்வமற்ற பிரதம நீதியரசராக ராஜபக்சக்களின் கைக் கூலியான உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஜெயவர்தன செயல்படுகிறார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு கூட்டத்தின் போது பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவை மீறி நீதிபதி பிரியந்த ஜெயவர்த்தனே செயல்படுகிறார்.

இதேவேளை அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட பிஸ்சு பூசாவின் தலைமையிலான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல் படுத்தும் நோக்கத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி குழுவின் தலைவராக பிரியந்த ஜயவர்தன செயல்படுவதால் இரவு பகல் பாராது செயல்படும் பிஸ்சு பூசாவின் பரிந்துரைகளை எப்படியாவது செயல்படுத்துவதற்கு பிரியந்த ஜெயவர்தன கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார். ராஜபக்சகளின் மனதில் மேலும் மேலும் இடம் பிடித்து எப்படியாவது முன் கூட்டியே பிரதம நீதியரசர் பதவியில் அமரும் நோக்கத்தில் பிரியந்த ஜெயவர்தன இவ்வாறு செயல்பட்டு வருகிறார். 

சட்டம்பே கைக் கூலி நீதிபதிகளுக்கு சர்வதேசத்தில் இருந்து சிவப்பு எச்சரிக்கை ... 

இலங்கை உயர் நீதிமன்றத்தின் உள்ளக பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வெளியே சர்வதேச அளவில் வேறு விதமான நிலைமை காணப்படுகிறது. இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தேவைக்கு ஏற்றவாறு செயல் படுத்தப் படுவதால் அவ்வாறு பக்கச்சார்பாக செயலபடும் நீதிபதிகள் தொடர்பில் சர்வதேச அளவில் கண்காணிப்பு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்படும் நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது. அதன் விளைவாக ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நீதிபதிகளுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்குவது தடை செய்யப்பட உள்ளது. இவ்வாறு சில நீதிபதிகள் உடைய பிள்ளைகள் வெளிநாட்டில் கல்வி பயில விசா கோரிக்கையை முன்வைத்த போதிலும் எவ்வித காரணங்களும் இன்றி அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தூதரகங்கள் தங்களுடைய நாடுகளுக்கு நுழைய விசா மறுக்கும் போது எதனையும் செய்ய முடியாது. அதற்கு காரணம் கூறுவதற்கு தூதரகங்கள் தலைபடாது. இதனால் கைக் கூலி நீதிபதிகளுக்கு உதவிகள் கிடைக்கப் பெறாது. 

எனவே அனைத்து நீதிபதிகளுக்கும் சொல்ல வேண்டியது ஒன்றுதான். மெதமுலன ராஜபக்ஷகளை விரைவில் அழிந்து செல்லும் விலங்குகளாக நோக்கியே மக்கள் நியமித்துள்ளனர் என்பதாகும்.  அதனால் அவர்களுடன் சேர்ந்து அழிந்து செல்வதா ? அல்லது புதிய பரிமாணத்தில் முன்னோக்கி பயணிப்பதா ? என்பதை நீதிபதிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். 

- எழுதியது லங்கா ஈ நியூஸ் நீதிமன்ற உள்ளக தகவல் சேவை செய்தியாளர் 

---------------------------
by     (2022-01-06 09:14:15)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links