~

மீண்டும் அழிவின் முன்னோட்டம்..! நாடு முழுவதும் கடற் கரைகளில் இனந்தெரியாத 09 சடலங்கள் மீட்பு..!

( லங்கா ஈ நியூஸ் - 2022 ஜனவரி 12 , பிற்பகல் 08.40 ) நாட்டில் மீண்டும் அழிவின் கொடூரங்களின் முன்னோட்டமாக நாடு முழுவதும் உள்ள கடற் கரைகளில் இருந்து அடையாளம் காணப்படாத சடலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன. 10 ஆம் திகதி கொழும்பில் மாத்திரம் இவ்வாறு அடையாளம் காணப்படாத 03 சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளன. இதற்கு முன் வடக்கு கடற் கரையில் 06 அடையாளம் காணப்படாத சடலங்கள் மீட்கப்பட்டன.

கொழும்பில் கரை ஒதுங்கிய மூன்று சடலங்களும் வௌ்ளவத்தை கடற் கரை, பம்பலபிட்டி கடற்கரை மற்றும் கொலன்னாவ எரிபொருள் கூட்டுத்தாபன கால்வாய் ஆகியவற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. வௌ்ளவத்தை ராமகிருஸ்ணமிஷன் பகுதி கடற் கரையில் மீட்கப்பட்ட சடலம் கடலில் மிதந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பம்பலபிட்டி மெராயின் ட்ரைவ் வீதி கடற் கரை பகுதியில் மீட்கப்பட்ட சடலம் அதிகம் பழுதடைந்து காணப்பட்டுள்ளது. கொலன்னாவை எரிபொருள் கூட்டுத்தாபன கால்வாயில் மீட்கப்பட்ட சடலம் இளைஞர் ஒருவருடையது. ஆனால் இளைஞன் யார் என அடையாளம் காணப்படவில்லை.  

இதற்கு முன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி யாழ், வடமராட்சி கடற் கரையின் இரு பகுதிகளில் இருந்து அடையாளம் காண முடியாது மிகவும் பழுதடைந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. வடமராட்சி சக்கோட்டை கடற் கரையில் ஒரு சடலம் கரை ஒதுங்கிய நிலையில் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற் கரையில் மற்றைய சடலம் கரை ஒதுங்கியது.

அதற்கு சில நாட்களுக்கு முன் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வடமராட்சி மரதங்கேனி கடற் கரையில் ஒரு சடலமும் நவம்பர் 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற் கரையில் ஒரு சடலமும் நவம்பர் 27 ஆம் திகதி யாழ். வல்வெட்டித்துரை மணல்காடு கடற் கரையில் இரண்டு சடலங்களுமாக நான்கு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த 9 சடலங்களிலும் பொது நிலையாக ஒன்று கூட அடையாளம் காணக் கூடிய நிலையில் இருக்கவில்லை. சடலம் மீட்கப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் காணாமல் போனதாக பொலிஸ் முறைப்பாடு கிடைக்கவில்லை. அனைத்து சடலங்களையும் இன்று வரை அடையாளம் காண முடியவில்லை.

இந்த 9 சடலங்கள் குறித்தும் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.

( அண்மையில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி யாழ், வடமராட்சி கடற் கரையில் கரை ஒதுங்கிய சடலங்களின் புகைப்படங்கள்)

---------------------------
by     (2022-01-12 16:33:57)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links