- எழுதுவது போத்தல ஜயந்த
( லங்கா - ஈ நியூஸ் - 2022 , ஜனவரி , 24 , பிற்பகல் 11.05 ) மது , சிகரெட் , வாகனங்கள் , தொலைத் தொடர்பு சேவைகள் , பந்தயம் மற்றும் சூது ஆட்டம் ஆகிய ஏழு வகையான வரிகளை வேறு வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் சதி பற்றிய அம்பலப்படுத்தல் இதுவாகும்.
இலங்கை நாடு இறக்காமல் அல்லது உயிருடன் நிலைத்து இருக்க ஒரு பிரதான கோபுரம் மற்றும் இரண்டு ஏனைய தூண்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அதில் பிரதான கோபுரமாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் காணப்படுகிறது. ஏனைய இரண்டு முக்கிய கோபுரங்களாக இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை கலால் வரித் திணைக்களம் என்பன திகழ்கின்றன.
இலங்கை நாட்டின் இலவசக் கல்வி , இலவச சுகாதாரம், ஏழை நிவாரணம் ( சமுர்த்தி ) மற்றும் சாலைகள் உட்பட அனைத்து பொது மக்கள் நலன் சார்ந்த மொத்தச் செலவுகளும் மேற்கண்ட மூன்று நிறுவனங்கள் ஊடாக அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள வரி வருவாயின் மூலம் ஈடு செய்யப்படுகிறது.
நாடு எந்த அளவு அழியை நோக்கிச் சென்றாலும் அவற்றை சிறிது அளவேனும் கணக்கில் எடுக்காது கொஞ்சம் கூட கூசாமல் சுக போகங்கள் சலுகைகளை அனுபவிக்கும் நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரை, ஜனாதிபதி மற்றும் பிரதமர், பிரதமர் அலுவலகம் முதல் பாராளுமன்றம் , அமைச்சுக்கள் , அலுவலகங்கள் , வாகனங்கள் , உத்தியோகபூர்வ வாகனங்கள் என அனைத்தும் மேற்படி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு பொது மக்களிடம் இருந்து சேகரித்துக் கொடுக்கும் வரி வருமானத்தில் நடாத்திச் செல்லப்படுகிறது.
இந்த மூன்று நிறுவனங்களுக்கு உள்ளும் கூட நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானத்தை பெற்றுக் கொடுக்காமல் இருக்க பல்வேறு நயவஞ்சக யுக்திகள் கையாண்டு பாரிய மோசடிகளும் ஊழல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதை மறைப்பதற்கு இல்லை. இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய நிதி ஊழல் மோசடியான 2200 கோடி ரூபா ' VAT ' வரி மோசடி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம் பெற்றது என்பதை இந்த எழுத்தாளர் முன்னர் ஒரு முறை நாட்டுக்கு வௌிச்சம் போட்டுக் காட்டினார். இத்தனை ஊழல் நிதி மோசடி முறைகேடுகள் இருந்த போதிலும், இந்த மூன்று முக்கிய நிறுவனங்களும் நாட்டிற்கு ஈட்டித் தரும் மற்றும் உருவாக்கி வரும் பாரிய வரி வருமானத்தில் இலங்கை நாடு இன்னும் நம்பிக்கையுடன் மூச்சு விட்டு நிலைத்து வருகிறது.
மேற்கூறிய இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் , இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை கலால் வரித் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் சேகரிக்கப்பட்ட அரசாங்க வரி வருமானம் இதுவரை மூன்று நிறுவனங்களினால் நேரடியாக ஒன்றிணைக்கப்பட்ட அரச நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி நந்தசேனா கோட்டாபய ராஜபக்ச , நிதி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ச , பிரதமர் பேர்சி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் சமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் ஒன்று சேர்ந்து இப்போது என்ன செய்யப் போகிறார்கள் ?
இதுவரை இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகள் வரி , பந்தய வரி மற்றும் சூதாட்ட வரிகள் , கசினோ வரிகள் , மது வரி மற்றும் சிகரெட் வரிகள் மற்றும் இலங்கை கலால் திணைக்களத்தினால் அறவிடப்படும் மது வரிகள் மற்றும் சுங்கத் திணைக்களத்தினால் அறவிடப்படும் வாகன வரி என்பன ஒன்றிணைந்த அரச நிதியத்தில் வைப்புச் செய்யப்படுவது நீக்கம் செய்யப்பட்டு நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் கீழ் தொடங்கப்படும் புதிய வங்கிக் கணக்கில் சிறப்பு சரக்கு மற்றும் சேவை வரிகள் என்ற பெயரில் வைப்பு செய்வதற்கான திட்டங்களின் வரைபை தயார் செய்து வருகின்றனர்.
நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ' மாறு வேடத்தில் ' சுற்றித் திரியும் எதிர் கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர் கட்சியில் உள்ள எவருக்கும் இந்த ஆபத்து தெரியாமல் இருப்பது ஏன் என புரியவில்லை ?
மேற் கண்ட சிறப்பு சரக்கு வரிகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான விசேட அரசாங்க வர்த்தமானி அறிவிப்பு கடந்த 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை எதிர் கட்சியில் இருந்து யாரும் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லை. ஒருவர் கூட ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் நாட்டை எப்படி முன்னேற்றுவது என்று சிந்திக்காமல் இருப்பது தினமும் காலை வேளையில் ஒரு ராத்தல் பாணுக்குக் கூட வரி செலுத்தும் ஆதரவற்ற மக்களின் பெரும் துரதிர்ஷ்டம் ஆகும்.
ராஜபக்சக்கள் கொண்டு வரத் தயாராகும் புதிய வரிச் சட்டத்தின் படி, மூன்று நிறுவனங்களுக்கும் பொருந்தக் கூடிய வரி விதிப்புகள் நீக்கப்படவுள்ளன. இதன்படி, இலங்கை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் , இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை கலால் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டு முடிவு எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சின் மேலதிக செயலாளரிடம் வழங்கப்படவுள்ளது. குறைந்த பட்சம் , அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய திரைசேறி செயலாளரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படாது.
ராஜபக்சக்கள் கொண்டு வரத் தயாராகும் இந்த புதிய வரித் திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் , மேற்படி வரி வருவாய் வசூல் மற்றும் வரிப் பணத்தை ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைப்பதற்கு யார் பொறுப்பு என்று சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் பொது மக்களது வரி பணத்தை மெதமுலன ராஜபக்ஷ குழுவினர் தங்களது தனியார் சொத்தாக மாற்றி உரிஞ்சிக் குடிக்க முயற்சிக்கும் புதிய சட்ட மூலத்தை எதிர்க்க எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வற்புறுத்த வேண்டிய நிலைக்கு நாட்டு மக்கள் இப்போதாவது முன் வர வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட வரித் திருத்த சட்டத்தின் காரணமாக 2020 ஆம் ஆண்டில் மட்டும் 60, 000 கோடி ரூபா வரிகளை நாடு இழந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு நிதி உதவி வழங்கி கை கொடுத்த தமது வர்த்தக கூட்டாளிகளுக்கு சலுகை சேர்க்கும் வகையில் முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்ட வரி திருத்தத்தின் ஊடாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மட்டும் சுமார் 60, 000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது.
2019 ஆம் ஆண்டு 1025 பில்லியனாக இருந்த வரி வருமானம் 2020 ஆம் ஆண்டில் 424 பில்லியனாகக் குறைந்துள்ளது. நாட்டின் வருமானத்தை ராஜபக்சக்கள் தமது தனிப்பட்ட சொத்தாகக் கருதி உரிஞ்சிக் குடிப்பதால் இன்று நாட்டு மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மேற்கண்ட வரி திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் தலை விதி என்னவாகும் ?
தூக்க கலக்கத்தில் உள்ள கண்களை துடைத்து விட்டு தௌிவான கண்கிளில் மக்களே பார்க்கவும் ..!
---------------------------
by (2022-01-24 17:18:54)
Leave a Reply