~

"பொலிஸ் துறை மீது நம்பிக்கை வையுங்கள்" என்று துறை சார் அமைச்சர் சரத் வீரசேகர கூறினால் ஞாயிறு தாக்குதல் குறித்த இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்..! பதில் தந்தால் பொலிஸ் துறையை நம்புகிறோம்..!

-எழுதுவது ரசல் ஹேவாவசம்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி,27, பிற்பகல், 09 . 25 )  ''இலங்கை பொலிஸ்  துறையை நம்புங்கள்.  அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவு நாங்கள் ஒரு போதும் செயற்பட்டது கிடையாது. அதனால் பொது மக்களும் ஏனைய அனைவரும் பொலிஸ் துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாங்கள் வீணடிக்க மாட்டோம். ''

பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவ ஆலயத்திற்குள் கைக் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து ராகம தேவத்த தேவாலயத்தில் இடம்பெற இருந்த தேவ ஆராதனை நிகழ்வை சீர் குலைக்க எடுக்கப்பட்ட சதி முயற்சி தேவ ஆசீர்வாதத்தால் முற்றாக முறியடிக்கப்பட்டு பொலிஸாரின் இயலாமை கிழித்து எறியப்பட்டுள்ள நிலையில்  இலங்கை பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர பொரளை அனைத்து புனிதர்கள் தேவ ஆலயத்திற்கு முன்பாக நின்று மேற்கண்ட கருத்தை ஊடகங்களுக்கு வௌியிட்டார். 

இது தான் எங்களின் பதில் ...

' தம்மோ பாவே ரக்கதி தம்மச் சாரி '  என்ற கவுதம புத்தரின் வார்த்தைகளின் அழுக்கு காக்கி சீருடையை அணிந்து கொண்டு, உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குற்றவியல் நிறுவனங்களில் ஒன்றாக இலங்கை பொலிஸ் துறை செயற்படுகிறது. 

' தம்மோ பாவே ரக்கதி தம்மச் சாரி ' என்றால் ' தர்மம் காப்பவனைக் காக்கும். ' என்று பொருள்படும். புத்தரின் அந்த மகத்தான வார்த்தையை கேவலப்படுத்தும் ஊழல் வாதிகள், மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை, அறுதிப் பெரும்பான்மையினரின் ( பொலிஸ் துறை ) அர்த்தத்தை கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  இப்போது பொலிஸ் துறை செய்வது புத்த தர்மத்தின் படி நடந்து கொள்ளாமல், குற்றங்களைச்  செய்து, குற்ற வாளிகளைக் காப்பாற்றி, குற்றவாளிகளை  நம்பித்தான் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறது.

பொலிஸ் மா அதிபர்களள்  முதல்  கொண்டு சீனியர், ஜூனியர் என பெரும்பான்மையான பொலிஸார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இந்த பொலிஸ் துறையானது இலங்கையில் ஒரு கருப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது.  அங்கு அந்த கடுமையான குற்றங்களில் பெரும்பாலானவை தண்டிக்கப்படாமல் உள்ளன.

( நாட்டில் நீதியை நிலை நாட்டவும், சீருடையின் கண்ணியம் காக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டவும் ஒரு சில பொலிஸார் முன்னெடுத்துச் செல்லும் தன் நலம் அற்ற தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். அவர்களுக்கு எப்போதும் எங்கள் வணக்கங்கள் ! மற்றும் மரியாதைகள் ! ) 

நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாகச்  செயல்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸ் துறை உறுப்பினர்களால் பொய் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படும் அசிங்கமான வரலாறும் பொலிஸ் துறையினருக்கு உண்டு. அரசியல் தஞ்சம் என்ற அடிப்படையில் சட்டத்தின் வலையில் சிக்காதவர்களில் பெரும்பாலானோர் இயற்கையின் சீற்றத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகின்றனர். ( மிக சமீபத்திய உதாரணம், மகிந்த ராஜபக்சவின் காட்டு மிராண்டி ஆட்சி தசாப்தத்தில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, வாய் புற்று நோயால் அகால மரணம் அடைந்தார். )

2019 ஆம் ஆண்டு 04 ஆம் மாதம் 21 ஆம் திகதி அன்று இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் படுகொலைக்கான பொறுப்பை புறக்கணித்த பொலிஸ் துறையின் முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட  பெரும்பாலான மூத்த பொலிஸ் அதிகாரிகள் இன்னும் தலை மறைவாக உள்ளனர். உயிர்த்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் படுகொலையை முன் நிறுத்தி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் இது தொடர்ந்து நடந்து வருவது ஆச்சரியமாக உள்ளது.  

' கருவாடு துண்டை கள்ளத் தனமாகத் தின்று அதனைக் கண்ட பூனைக்கு மாசி துண்டு ஒன்றை வீசி எறிதல் ' 

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ நந்தசேனாவின் ஆட்சியில் குற்றம் நடக்க காரணமான நபர்களுக்கு சட்ட விதிகளின் படி தண்டனைக்குப் பதிலாக முடிவில்லாத பதவி உயர்வுகளும் மன்னிப்புகளும் சலுகைகளும் வழங்கப்படுவதும், விசாரணையில் ஈடுபட்ட அரச சார்பற்ற அதிகாரிகள் உடனடி இடமாற்றங்களும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்படுவது தொடர்ந்து கேவலமானதாக நடைபெற்று வருகிறது. 

குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் பதவியை ராஜபக்சவுக்கு ஆதரவான  வெறுப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ள  குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அடைக்களம் வழங்கும் மேற் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைத்ததே மிக சமீபத்திய நிகழ்வு ஆகும்.  ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, அவர் குற்றம் சாட்டப்பட்ட போது நடந்த இந்த சம்பவம், ' உலர்ந்த மீனை பூனைக்கு வீசியது ' நிலைக்கு சமமானது. 

ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் ஆசீர்வாதத்துடன், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்குக் கூட தெரிவிக்காமல் தேசபந்து தென்னகோனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையை கிடப்பில் போட்டு, படுகொலைகளைக்கு காரணமான பிரதான சூத்திரதாரிகளை மூடி மறைத்து , ஈஸ்டர் ஞாயிறு அன்று 269 பேரைக் கொன்ற கொடூரப் படுகொலையை மூடி மறைத்து அதன் மேல் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்வதே தேசபந்து தென்னகோனின் தற்போதைய ஒரே நோக்கமாக உள்ளது. 

இவ்வாறு பதவிகள் சலுகைகள் வரப்பிரசாதங்கள் பதவி உயர்வுகள் வழங்கி கேவலமான செயற்பாடுகளை அரங்கேற்றி வருவதன் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படுகொலையுடன் தொடர்புபட்டதை உலகுக்கு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுவதை காண முடிகிறது. 

2019 ஆம் ஆண்டு மேல் மற்றும் வட மாகாணங்களுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் துவேஷ பந்து தென்னகோன் மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நன்கு அறிந்த பிரதான குற்றவாளிகள் ஆவர்.  பொலிஸாரின் பார்வையில் இவரை மூன்றாவது அல்லது நான்காவது பிரதிவாதியாக மௌனம் காத்து இந்தப் படுகொலையை நடக்க அனுமதித்தவர் என்று குறிப்பிடலாம். அப்போது அவர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் கட்டளைப் பொறுப்பாளராக இவர்கள் இருந்தார்கள். 

குற்றம் சுமத்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு வரப்பிரசாதம் வழங்கியது ஏன் ? 

இன்று நாம் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புவது "  04/21 உங்களுக்கு நினைவு இருக்கிறதா ? " என்று எழுதப்பட்ட போஸ்டரை நாடு முழுவதும் விளம்பரப் படுத்தி ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, கூட்டு படுகொலை புரிந்த அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இரகசிய வங்கிக் கணக்கில் இருந்து சம்பளம் வழங்கி, ஞாயிறு தாக்குதலை ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு உறுதுணையாக கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவு குற்றவாளிகள் அல்லது சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை விடுத்து அவர்களுக்கு பதவி உயர்வு சலுகைகள் வழங்கியது தொடர்பிலாகும். 

 ' பொலிஸ் துறை மீது நம்பிக்கை வையுங்கள் ' என்று கேட்ட அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு இங்கு பதில் கிடைக்கும். 

01. நாட்டின் தற்போதைய பொலிஸ் மா அதிபர்  சி. டி விக்ரமரத்ன 2019 , 04 , 21 ஆம் திகதிகளில் பொலிஸ் திணைக்கள நிர்வாகப் பொறுப்பு அதிகாரியாக கடமை ஆற்றியதோடு, பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த படியாக இரண்டாவது அதிகாரம் மிக்க பதவியில் இருந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதில் பொலிஸ் மா அதிபராக சி. டி விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். வியக்கத்தக்க வகையில், தேசிய பாதுகாப்பில் பெருமை பாராட்டிக் கொள்ளும்  ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷ சி, டி விக்ரமரத்னவை பதில் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கி வைத்தார். 

02. நிலாந்த ஜயவர்தன மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து புலனாய்வுக்கு முந்தைய தகவல்களைப் பெற்ற ஒரே நபர் அவர் மட்டுமே. பின்னர், அவரது உத்தியோகபூர்வ கணினி மற்றும் கைத் தொலைபேசியில் இருந்து இரகசிய தகவல்கள் அழிக்கப்பட்டதை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் தடயவியல் பிரிவு உறுதிப்படுத்தியது. அவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று முழு அளவிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்தது. இருந்த போதிலும், சட்டத்தை கேலிக் கூத்தாகிய குற்றம் செய்ததற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் ஒழுங்கு விசாரணை கூட அவர் மீது நடாத்தப்படவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதி  நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் பின்னர் மத்திய மாகாண பொறுப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். மேலும், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் ஜனாதிபதி கோட்டாபயவை காப்பாற்றுவதற்காக சந்தேகநபர் தற்போது அரசாங்க சாட்சியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.  ( ரவிராஜ் படுகொலை வழக்கிலும் இந்த ‘திறமையான பொலிஸ் அதிகாரி’ தான் ரவிராஜின் கொலையாளியை அல்லது ரவிராஜின் கொலைக்கு மூளையாக இருந்து காப்பாற்ற சட்டமா அதிபருக்கு எதிராக சாட்சி அளித்தார்.)

ஆம் வீரசேகர ..! நந்த சேனாவையும் உங்கள் பொலிஸ் துறையையும் நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நன்று  ..!

03. பாரிய குற்றச்சாட்டை எதிர் நோக்கும் துவேஷ பந்து தென்னகோன், 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் காலத்தில், மேல் மாகாண ( மேற்கு வடக்கு ) சிரேஷ்ட பிரதிப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து, பின் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றார். ஜனாதிபதி நந்தசேனவின் கீழ் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்  குற்ற விசாரணை பிரிவின் தலைவராக இரு மடங்கு பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார், அது அவரை  " டபல் புரமோசன் " ஆக மாற்றியது.

04. 2017 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவத் தளபதியாக இருந்த அதே ஆண்டில், விடுதலைப் புலிகள் கிளர்ச்சி உள்ளிட்ட போலி சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புச் சபையில் பதவியை இழந்த பிரிகேடியர் துவான் சுரேஷ் சலேவுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. சஹாரன் ஒரு உலவுத் துறை அதிகாரி. ராஜபக்சேக்கள் சஹாரா அரசாங்கத்திற்கு சம்பளம் வழங்கிய நேரத்தில் சுரேஷ் சலே இராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்தார்.

அக்டோபர் 2018 அரசியல் சதிப் புரட்சியின் 24 மணி நேரத்திற்குள், இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட  பிரிகேடியர் சலே, ஜனாதிபதி சிறிசேனவினால் உடனடியாக மலேசியாவில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு, இராணுவ உளவுத்துறை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 

ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன், சுரேஷ் சலே உடனடியாக மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின் வரலாற்றில் முதல் முறையாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பதவிக்கு கீழ்  அனைத்து புலனாய்வு சேவைகளையும் இணைத்தார்.

பாதுகாப்புச் செயலாளராக சஹாரா உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு சம்பளம் வழங்கியதை ஒப்புக்கொண்ட அவரது முன்னாள் சகோதரர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் நாட்டின் ஜனாதிபதியானார். பொலிஸ் துறை மற்றும் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடூரமான குண்டர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈஸ்டர் ஞாயிறு படுகொலைகளுடன் தொடர்பில் இருந்ததாக காட்டப்படுகின்றன.

ஈஸ்டர் ஞாயிறு படுகொலை என்ற மாபெரும் குற்றமானது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, பாதுகாப்புப் படையிலுள்ள பல காட்டு மிராண்டித்தனமான குற்றவாளிகளின் உடந்தையுடன்  திட்டமிடப்பட்டது என்பதற்கு மேற்கூறிய உதாரணங்கள் போதாதா ?

" வீம்புப் பேச்சு " ஊடக விளம்பரத்திலாவது பதில் கூறு ..! 

அனைத்து புனிதர்களும் தேவாலயத்திற்கு ( எனவே கடவுளையும் மீறி ) முதுகு காட்டி, “ போலீஸை நம்புங்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் சீர் குலைக்க மாட்டோம் ” என பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களுக்கு வீம்புப் பேச்சில்  தெரிவித்தார். வாய் கிழிய பேசும் சரத் வீரசேகர அவர்களே உங்கள் வார்த்தைகளில் சுத்தம் இருந்தால் ஊடகங்களுக்கு முன் நின்று பின்வரும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். 

01. புத்தளம் வனாதவில்லுவையில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை ?

02. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டு, கொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கணக்கில் வரவு வைத்தது ஏன் ? அதன் பின்னணியில் இருந்த உளவுத்துறை அதிகாரி யார் ?

03. ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீதான விசாரணை, தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்ததுடன் நிறுத்தப்பட்டது ஏன் ? டி ஐ டி க்கு பொறுப்பாக இருந்த டி ஐ ஜி நாலக சில்வா, முறையான விசாரணையின் பின்னர் இவ்வாறான சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தாரா ? அப்படியானால் நாலக்க சில்வா இன்றும் ஏன் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் ?

04. சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் மீது ஏன் விசாரணை இல்லை ?

05. அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தனவிடம் குறைந்தபட்சம் ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கு ஏன் பொலிஸ் மா அதிபர் அஞ்சினார் ?  ஒரு குற்றவாளி எப்படி அரசாங்க சாட்சியாக இருக்க முடியும் ?

06. முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் ஒருங்கிணைப்பு அதிகாரி தஸ்லிம் மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸாரை தான் கடத்திச் சென்று அதே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சஹாரான் குழு என்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏன் பொலிஸார் விசாரிக்கவில்லை?

07. தேசிய பாதுகாப்பு உத்தரவாதம் என்று தம்பட்டம் அடிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த  தயாராகி வருவதாக கடற்படையினர் கூறுவது யாருடைய நலனுக்காக ? தேவாலயங்களில் இருந்து கைக் குண்டுகளை தூக்கும் நாடகத்தின் பின்னணியில் உள்ள கும்பல் யார் ? நாம் எப்போதும் சொல்வதை இன்று சொல்ல வேண்டும் ..!

2019. 04. 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதலில் பலியான அழகான குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நாடு மற்றும் வெளிநாடுகளில் இறந்த நிராயுதபாணியான அப்பாவி மக்களுக்கு நீதியை விரும்பும் அன்பர்களே..! மத , தேச பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இறுதி மூச்சு வரை நீதிக்கான போராட்டத்தில் இணைவோம்..! போராடுவோம்..!!

- எழுதியது ரசல் ஹேவாவசம்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து ரசல் எழுதிய தொடர் கட்டுரைகள் பின்வருமாறு
https://www.lankaenews.com/category/74

---------------------------
by     (2022-01-27 01:54:22)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links