- அலுவலக செய்தியாளர் எழுதுகிறார்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஜனவரி, 31 , பிற்பகல் 09 . 20 ) கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களிதேவாலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கைக் குண்டு நாடகத்தின் அடுத்த அரங்கேற்றம் எப்படி இருக்கப் போகிறது ? நாம் இந்த கேள்வியை கேட்பது ஏன் ?
சுற்றி வளைத்துச் சொல்லாமல் நேரடியாக கூறுவதானால் ராகம தே வத்த தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருந்த விசேட ஆராதனை வழிபாட்டினை நாசப்படுத்தும் நோக்கில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர்களை குழப்பம் அடைச் செய்யும் நோக்கில் அரசாங்கத்தின் கிரிமினல் தலைவர்களால் மூடி மறைக்க முயற்சி செய்யும் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளால் கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக் குண்டு வைக்கப்பட்டு பின் அது அரசாங்கத்தின் கைகளால் பற்றியுள்ளது.
இதனால் இந்த வெடி குண்டு நாடகத்தின் கதை, வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், மேக்கப் கலைஞர்கள் என அனைவரும் நாளுக்கு நாள் குழம்பி வருகின்றனர். போதைப் பொருள் ஊடகம் மற்றும் விஷப் பாம்பு ஊடகம் உள்ளிட்ட ஊடகப் பிரச்சாரகர்களும், அதன் பிரசாரத்தில் தலைமறைவாகி இருக்கும் அடிமைகளும் தற்போது வெட்கமும், சங்கடமும் அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக குற்றங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் குற்றவியல் மாஃபியாவின் பிரதான குற்றவாளி சூத்திரதாரிகளான கோத்தபாய ராஜபக்ஷ , சி. டி விக்கிரமரத்ன, சரத் வீரசேகர மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் நாட்டின் முன் மற்றும் சர்வதேச சமூகத்தின் முன் வெட்கித் தலை குனிந்து நிற்கிறார்கள்.
கத்தோலிக்க திருச் சபை மற்றும் பிற சுயாதீன ஆய்வாளர்கள் மூலம் இந்த வெடி குண்டு தேவாலய ஊழியரான முனீந்திரன் அல்லது கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான டாக்டர் ஷெர்லி ஹேரத்தால் வைக்கப்படவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.
ஜனாதிபதி நந்தசேன கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகர - மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தொன்னகோன் குழுவினரால் சூத்திரதாரிகளையும் அதன் இரகசியங்களையும் பாதுகாக்கும் நோக்கில் எழுதி இயக்கிய நாடகத்தின் தோல்வி அடைந்த 'புளொட்' ‘ plot ’ இது. எனவே, இந்தப் பொய்யை இனியும் இழுத்தடிக்க முடியாது. இது முழுப் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்களே இதை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக, தலைமறைவானவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அப்படியானால், இந்த நாடகம் சோகத்தில் முடியும் என்பது சி. டி. விக்கிரமரத்னவிற்குத் தெரியும் . எனவே பொலிசார் என்ன செய்தார்கள் என்பது லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு நன்றாகவே தெரியும்.
சம்பந்தப்பட்ட காட்சிகள் கீழ்காணும் இவற்றில் ஒன்றாக இருக்கும். பொலிஸ் ஊடகப் பேச்சாளரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்று செய்தி வரக்கூடும்.
* “ பொலிஸ் கஸ்டடியில் இருந்த மருத்துவர் சாப்பிடவில்லை, பலவீனமாக இருந்தார். உடல் நிலை மோசமாக இருந்தார். திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டது. வைத்தியர்களை அழைத்து சோதனை செய்த போது அவர் .... விட்டார். "
* " கைது செய்யப்பட்ட மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் அவரது கிளினிக்கின் முன்னாள் பணியாளரும் அவர்கள் ஆயுதங்களை ( எறி குண்டு உட்பட ) எங்கு வாங்கினார்கள் என்பதைக் காட்டுவதற்காக பொலிஸ் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மறைந்திருந்த ஒருவர் பொலிஸார் மீது கைக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார். துப்பாக்கிச்சூடும் நடத்தினார். இதன் போது பொலிஸார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சந்தேகநபர்கள் ...... செய்யப்பட்டனர். சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் காயம் ஏற்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "
* " ரிமாண்ட் காவலில் இருந்த பொரளை தேவாலய ஊழியர் கவலையுடன் இருந்தார். இன்று காலை அவர் திடீரென ........ அவர் ஒரு வித விஷத்தை உட்கொண்டதாக மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். "
இந்த துயரக் காட்சிகளில் ஏதேனும் ஒன்று கைதிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சட்டத்திற்கு புறம்பான கொலைகள் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் நடத்தப்படுகின்றன.
எனவே, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அவருடன் இணைந்துள்ள முன்னணி செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் லங்கா ஈ நியூஸ் இந்த அபாயத்தை முன் கூட்டியே எச்சரிக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்த போது சந்தேகநபர்கள் எவரும் கடந்த செவ்வாய்க் கிழமை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவில்லை. இதனால் இவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கலாநிதி ஹேரத்தின் மகன் ஓஷல தனது தந்தையை இன்னும் பார்க்கவில்லை. முனீந்திரனைப் பார்க்கும் வாய்ப்பு அருட் தந்தை டிலானுக்குக் கிடைத்தது. தலையில் சாக்கு மூடி தாக்கப்பட்டதாக தமக்கு அருகில் கதறி அழுத முனீந்திரன் என்ற அப்பாவி ஆதரவற்றவர் தன்னிடம் தெரிவித்ததாக அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
வேறு என்னனென்ன நடந்தது ? அவர்களை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லக் கூடாது ? இவை பாரதூரமான பிரச்சினைகள் என்பதை கடந்த கால அனுபவத்தில் இருந்து நாம் அறிவோம்.
இந்த ஆபத்தை நன்கு உணர்ந்து இந்த சந்தேகநபர்களின் உயிரைக் காப்பாற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அனைத்து மனிதாபிமானிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
---------------------------
by (2022-01-31 05:51:52)
Leave a Reply