- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை எழுதுகிறது
( லங்கா ஈ நியூஸ் - பெப்ரவரி 10 , 2022 , பி.ப . 05.30 ) ராஜபக்ச ஆட்சியில் பொய்யான அபத்தமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லங்கா ஈ நியூஸ் இணையத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் ஆய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க 50,000 ரூபா தனி நபர் பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவால் நேற்று 09 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உண்மையில் நடந்திருக்க வேண்டியது கீர்த்தி ரத்நாயக்க நிரபராதி என்று முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கீர்த்தி ரத்நாயக்கவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் ஏற்க மறுத்துள்ளார். முன்னதாக, சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது கீர்த்தி ரத்நாயக்கவிற்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர போதிய குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் இல்லை என நேற்று தெரிவித்திருந்தார்.
அப்படியானால், கீர்த்தி ரத்நாயக்கவிற்கு எதிராக கீர்த்தி முதலில் பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் பொலிசாரிடம் ஒப்படைக்காமல் வௌியிட்டமை குற்றம் அல்ல என ( சட்ட மா அதிபர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார் ) அவரை விடுதலை செய்திருக்க வேண்டும். இன்னும் செய்ய வேண்டிய விசாரணைகள் இருப்பதாகவும் கீர்த்தி ரத்நாயக்க ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் பிணை நிபந்தனை உத்தரவை பிறப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த போதும் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நீதிவான் பிரியந்த லியனகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நிபந்தனைகளை நிராகரித்து, கீர்த்தி ரத்நாயக்கவை தனி நபர் பிணையில் விடுதலை செய்தார்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க, ராஜபக்ச ஆட்சியின் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்திகளை வழங்கி கட்டுரை எழுதி வந்தார். இதனால் கீர்த்தி மீது கோபம் கொண்ட ராஜபக்ஷக்கள் அவரை சிக்க வைக்க வழிபார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவருக்கு கீர்த்தி ரத்நாயக்க எச்சரிக்கை தகவல் ஒன்றை வழங்கியதை அடுத்து அதை வைத்துக் கொண்டு கீர்த்தியை வேட்டையாட ராஜபக்ஷக்கள் வாய்ப்பு பெற்றனர். அதாவது கடந்த இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வு எச்சரிக்கை தகவலை கீர்த்தி ரத்நாயக்க இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரியிடம் கூறி இருந்தார். இது ஒரு பகுப்பாய்வு தகவல் ஆகும். வழக்கு தொடரும் அளவு குற்றம் அல்ல. ஆனால் கீர்த்தி ரத்நாயக்கவவை வேட்டையாட நினைத்தவர்கள் இதனை குற்றம் என்று கூறி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 5 ( 1 ) ( a ) இன் கீழ் எட்டு மாதங்களுக்கு மேல் கீர்த்தி ரத்நாயக்கவை கைது செய்து தடுத்து வைத்தனர். இந்த சம்பவத்தை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி ஒரு தீவிரவாத தாக்குதல் பற்றி கண்டுபிடிக்க வக்கில்லாத பொலிஸார் தகவல் வழங்கிய கீர்த்தியை கைது செய்தனர்.
வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கீர்த்தி ரத்நாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கீர்த்தி பொலிஸ் நிலையத்தில் சென்று வாக்கு மூலம் அளித்து வீடு திரும்பிய போது முதலில் கீர்த்தியை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கடத்திச் சென்ற நிலையில் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். குற்றப் புலனாய்வு காவலில் இருந்த ஆறு மாத காலத்தில், கீர்த்தியிடம் எந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்தார்களோ அது பற்றி விசாரிக்காமல் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி எழுத தகவல் தருவது யார் என்று வௌிப்படுத்துமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். குறிப்பாக கீர்த்தி உணவு தருவித்த பிரபல உணவு விநியோக நிறுவன நபர்களைக் கூட குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர்.
கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த டிசம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5 ( 1 ) ( a ) பிரிவின் கீழ் குற்றச்சாட்டு மற்றும் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு எழுதிய கட்டுரைகளால் அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய விடயம் குறித்து கீர்த்தி ரத்நாயக்கவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்து மேலும் விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். எனினும் கீர்த்தி ரத்நாயக்க சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 5 ( 1 ) ( ஏ ) பிரிவை கீர்த்தி மீறவில்லை என வாதிட்டனர். அதாவது, பயங்கரவாத தாக்குதல் குறித்து தனக்கு உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, மேலும் இதுபோன்ற சாத்தியம் குறித்த தனது கருத்தை அவர் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிக்கு முன்கூட்டிய சமர்ப்பித்தார். அதன்படி, சட்டத்தின் பிரிவு 5 ( 1 ) ( a ) இன் படி தகவல்களை காவல்துறைக்கு வழங்காமல் மறைப்பதன் அர்த்தத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதால், அத்தகைய தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் தனது கருத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தார். வீடு தீ பற்றி எரிவதைப் பார்க்கும் ஒருவர் முதலில் காவல்துறையிடம் அதைச் சொல்வாரா ? அல்லது ' உன் வீடு தீ பிடித்து எரிகிறது ' என்று வீட்டு உரிமையாளரிடம் சொல்வாரா ? என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரின் அனுமதியின்றி சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என முன்வைக்கப்படும் வாதம் நீதித் துறையின் சுதந்திரத்திற்கு சவால் விடும் என குமாரப்பெரும மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் வாதிட்டனர். மக்களின் இறையாண்மையை சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுவதால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளால் நீதித்துறைக்கு உள்ள அதிகாரத்தை கட்டுப்படுத்தாமல் நீதிபதியின் அதிகாரம் நீதித்துறைக்கு அடிபணிந்துள்ளது. சட்டமா அதிபரின் அனுமதியின்றி நீதித்துறை தீர்மானம் எடுக்க முடியாது என பயங்கரவாத சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளாது பிணை கோரிக்கை குறித்து நீதவானுக்கு தீர்மானம் எடுக்க சாத்தியம் இருப்பதாக உபுல் குமாரப்பெரும வாதிட்டார்.
எவ்வாறாயினும், இரு தரப்பினரிடம் இருந்தும் வழங்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணங்களை பெற்றுக் கொண்ட நீதிபதி பிரியந்த லியனகே, பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்கள் அடங்கிய ஹன்சார்ட் அறிக்கைகளை கவனத்தில் எடுத்தார்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுக்கு முன்னதாக இராஜபக்ஷ ஆட்சி அச்சுறுத்தல்களை எதிர் கொண்டுள்ளது. ராஜபக்சே ஆட்சியில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில வாரங்களாக பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்வதேச ரீதியில் குற்றஞ்சாட்டப்பட்ட பல சந்தேக நபர்களை ராஜபக்சக்கள் பிணையில் விடுவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பிரபாகரனின் படத்தைப் பகிர்ந்த கலாநிதி சஃபி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆசாத் சாலி மற்றும் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவும் சட்டமா அதிபர் வழக்குத் தொடர்வதற்கு எவ்வித காரணமும் இல்லை என தெரிவித்து நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், சுதந்திரமான குற்றமற்ற ஒருவரை பொலிஸார் எட்டு மாதங்கள் தடுத்து வைத்தது, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதை தவிர்த்தது வேறு எந்த காரணத்திற்காகவுமா என்பதற்கு பொலிஸ் மா அதிபரும், சட்ட மா அதிபரும் பதிலளிக்க வேண்டும். கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டதில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்ட மா அதிபரிடம் தொடர்ந்து அறிக்கை அளித்து ஆலோசனை கேட்டு வந்ததால் சட்ட மா அதிபரால் இப்போது கை கழுவி நழுவிச் செல்ல முடியாது.
இலங்கையின் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் அப்பாவிகள். இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மிருகத்தனமான சட்டத்தை உடனடியாக செய்ய வேண்டும்.
ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் பாதிப்புக்களுக்கு சட்டத்தரணிகள் ஊடாக 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவிடம், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம், பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து விளக்கம் அளிக்க கீர்த்தி ரத்நாயக்க எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவின் விடுதலைக்காக தொடர்ச்சியாக உழைத்த சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, மஞ்சுள பாலசூரிய, ராதா குருவிட்ட பண்டார, செலோமி குணரத்ன, தர்ஷிகா உடுகம, ஒஷினி ருபேரு, அமில எகொடமஹாவத்த மற்றும் ஏனைய சட்டத்தரணிகளுக்கு லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் குழு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள், உதவி அமைப்புகள், அவர்களின் ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் இந்த பிரச்சினையில் குரல் எழுப்பியவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
லங்கா ஈ நியூஸில் எமக்கு நிலையான ஊடக நோக்கம் உள்ளது. நாங்கள் ' வெறும் நடு நிலை ' ஊடகம் அல்ல. ஆளும் சர்வாதிகாரத்திற்கு எதிராக, சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக, இனவெறிக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, மூட நம்பிக்கைக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, அநீதிக்கு எதிராக, சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்காதவர்களின் குரலாக 17 வருடங்களாக அயராது உழைத்து வருகிறோம் . எங்களுடன் இணைந்தவர்களில் பெரும்பாலோர் அர்ப்பணிப்புடன் அந்த இலக்குகளை நோக்கிச் செயல்படும் தன்னார்வலர்கள். கீர்த்தி ரத்நாயக்கவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். பல வருடங்களாக இலங்கைக்கு வெளியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதி வந்த கீர்த்தி, நாட்டிற்குள் நுழைந்தாலும் தன் பெயரில் எழுத அஞ்சவில்லை. கடந்த 17 வருடங்களாக எமது ஊடகச் சேவையைப் பாராட்டியவர்களில் பலர் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும், அதிகார வரம்புகளிலும் இருந்தார்கள், அவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் ஆதரவு வழங்கியமைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உண்மையான காரணத்திற்காக பாடுபடுபவர்கள் கொலை செய்யப்பட்டாலும் ' போராட்டம் ' வெற்றியை நோக்கி முன் நகரும் ..! " போராட்டமில்லாத வெற்றி " என்பது போர்க்குணமிக்க சொல்லாட்சியில் இல்லை. இயற்கையின் விதிகளில் உள்ளது..!!
---------------------------
by (2022-02-11 07:39:08)
Leave a Reply