- எழுதுவது ரசல் ஹேவாவசம்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி , 21 , பிற்பகல் 11 . 45 ) இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட மனசாட்சி அற்ற கோழைத் தனமான தீவிரவாதத் தாக்குதலுடன் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு நேரடித் தொடர்பு உள்ளமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் அம்பலமாகிக் கொண்டிருக்கிறன. இந்நிலையில், இந்தக் தாக்குதல் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் உண்மைகளை மூடி மறைத்து சட்டத்தை நசுக்கியுள்ள அரசாங்கம், நீதியின் கைகளால் தம்மைத் தானே நெரித்துக் கொள்வதை மக்கள் உணர்ந்துள்ள இந்த தருணத்தில் மற்றும் ஒரு மிகக் மோசமான அநீதியான செயலுக்குத் தயாராகி வருகிறது. அதைப் பற்றியதே இந்த வெளிப்பாடாகும்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரை இலக்கு வைத்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவின் ஊடாக அரசாங்கம் தற்போது இந்த சதித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அதன் நோக்கம், ஞாயிறு குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை காப்பாற்றி மறைத்து, ஞாயிறு தாக்குதல் குற்றத்தின் உண்மையைக் கொன்று புதைப்பதற்கு அதன் சவப் பெட்டியில் இறுதி ஆணியை அடித்து, " அமைதியாக உறங்கவும் " என்ற இன்று விருந்து வைப்பதற்கு ஆகும்.
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகிய இருவரும் இப்போது பொலிஸ் துறையில் இல்லை. அவர்கள் இருவரும் பொலிஸ் துறையில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி கால குற்றங்கள் ஒவ்வொன்றையும் தேடித் தேடி விசாரணை செய்வதும் ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தேடி விசாரணை செய்வதுமாக ராஜபக்ஷக்களுக்கு குடைச்சல் கொடுத்து வந்த குற்றத்திற்காக ஷானி அபேசேகரவை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சுமார் ஒரு வருட காலம் சட்ட விரோதமாக சிறையில் தடுத்து வைத்திருந்தது.
பொறுப்பான புலனாய்வுப் பிரிவினர் என்ற வகையில் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் புலனாய்வு செய்து ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளிப்படுத்தினர். அவற்றில் ஒன்று, ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு புலனாய்வுத் துறை தலைவர்கள் மற்றும் சஹாரானுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அவர்களைப் பயன்படுத்திய குழுவினர் தொடர்பான மிகவும் சந்தேகத்திற்குரிய பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை விசாரணைகளில் வெளிக் கொணர முன்வந்தனர். ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இது தொடர்பில் அவர்கள் முக்கிய சாட்சி அளித்துள்ளனர். அந்த நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட பல தீவிரவாத சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ரவி செனவிரட்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் வலியுறுத்தினர். அப்போது அவர்கள் வெளிப்படுத்திய தகவல்களும், கசிந்துள்ள தடயங்கள் உட்பட, இந்த விஷயத்தில் அவர்கள் செய்த முன்னேற்றங்களும் தவிர ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தற்போதைய அரசாங்கத்திற்கு ' பெருமை பேசிக் கொள்வதற்கு ' வேறு எதுவும் இல்லை.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு இந்த குற்றத்தை புதிய சதித் திட்டத்தை உருவாக்கும் பணியில் அரசாங்கம் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் ரவி செனவிரட்னவையும் ஷானி அபேசேகரவையும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி மீண்டும் சிறையில் அடைப்பதாகும்.
சதித் திட்டத்திற்கான கதை பின்வருமாறு, ... 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், கண்டி மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் மற்றும் வனாத்தவில்லு பகுதியில் (லாக்டோஸ் வத்த) கண்டு பிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்துவதற்காக, சஹரான் ஹாசிமின் மனைவி பாத்திமா காதியா வாழ்ந்து வந்த குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டிய, கெகுனுகொல்ல வீட்டிற்கு CID குழு ஒன்று சென்றது. அங்கு பாத்திமா காதியாவிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி நீண்ட விசாரணை செய்யாமல் விட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த கதை எழுதப்படுகிறது.
அதன்படி பாத்திமா காதியாவிடம் புதிய விசாரணைகள் நடத்தப்பட்டு ஆதாரம் பெறப்பட உள்ளது. பாத்திமா காதியாவின் ‘ வாக்குமூலம் ’ பெற்று அதன் அடிப்படையில் ரவி செனவிரட்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை கைது செய்ய உள்ளனர்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவை வழி நடத்திய இரண்டு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆளும் அரசாங்கத்தின் தொடர் இடையூறுகளால் அவர்களால் அவ்வாறு முறையாக விரைந்து விசாரணை செய்ய முடியவில்லை. குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய இடையூறாகவும் தடையாகவும் இருந்து வந்தார்.
இந்த இரண்டு அதிகாரிகளும் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்த போது தெரிவித்த முக்கிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
சஹரான் குழுவினரின் தாக்குதல்களுக்குப் பின்னால் எந்த ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சி ஐ டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இருந்து ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி நேரத்தில் சாட்சியங்களை பதிவு செய்திருந்தது. இதில் பலத்த சந்தேகம் இருந்தது. தாக்குதல் நடத்தியவர்களுடன் உளவுத்துறை தொடர்புகள் குறித்தும் அவர் தீவிர சந்தேகத்தை எழுப்பினர். மட்டக்களப்பில் வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலைகளை மறைப்பதற்காக அப்போது அரச புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் பொய்யான செய்திகள் மற்றும் தவறான சம்பவங்கள் குறித்து கருத்துக்கள் வௌியிடப்பட்டமை தொடர்பிலும் அவர்கள் அவதானம் செலுத்தி இருந்தனர்.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயரை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இரகசியமாக சாட்சி அளித்து வழங்கியிருந்தனர். ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குற்றச்சாட்டை உரிய முறையில் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக இருவரும் சுட்டிக்காட்டி இருந்தமை முக்கிய விடயமாக கருதப்பட்டது.
ஞாயிறு தாக்குதல் விசாரணையில் விரிவான அனுபவமுள்ள இவர்கள் இருவரும் ஞாயிறு தாக்குதல் குற்றத்தை மூடி மறைக்க தற்போதைய அரசாங்கத்திற்கு கடுமையான தடையாக இருப்பர் எனவும் மேலதிக உண்மைகளை அறிந்துள்ளனர் என்றும் அரசாங்கம் தெரிந்து வைத்துள்ளது. எனவே ஊழல் மோசடி நிறைந்த பொலிஸாரைப் பயன்படுத்தி அவர்களை அமைதிப்படுத்தவோ அல்லது பழிவாங்கவோ ஒரு தீவிர சதித் திட்டம் அரசாங்கத்திற்கு அவசியமாகியுள்ளது.
அரசாங்கம் கூறுவது போல பிப்ரவரி மாதம் 2019 இல் சஹரானை கைது செய்வதற்கான வாய்ப்பு தவற விடப்பட்டதா ? என்பது தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் ஊழல் காவல்துறை அதிகாரிகளையும் முட்டாள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சீருடைகளையும் அல்ல. சஹரான் தீவிரவாத அமைப்பு தொடக்கம் முதலே உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். 2012 முதல், காத்தான்குடியில் பாரம்பரிய சூஃபி முஸ்லிம்களுக்கு எதிராக சஹரான் தொடங்கிய பயங்கரவாதம் முதல் 2019 ஈஸ்டர் ஞாயிறு சோகம் வரை ஒவ்வொரு சம்பவமும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். அப்போது கொலை செய்யப்பட்ட நிராயுதபாணிகளுக்கு நீதி கிடைப்பதுடன், மூளையாக செயல்பட்டவர் யார் என்பதும் தானாக வெளிப்படும்.
---------------------------
by (2022-02-21 06:42:38)
Leave a Reply