~

பூஜித மற்றும் ஹேமசிறி விடுதலை..! ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள்..! சர்வதேசம் செல்வதை தவிர வேறு தீர்வு எதுவும் இல்லை..!

- ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , 21 பெப்ரவரி , பி.ப. 9.10 ) இலங்கையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான ஞாயிறு படுகொலை வழக்கு, காலத்தைக் வீணடிக்க முன்னெடுக்கப்பட்டும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் தந்திரம் என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் இன்று ஒரு நல்ல உதாரணத்தை வழங்கியது.  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை உட்பட 855 குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை முழுமையாக விடுவித்து கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று ( பிப்ரவரி 18 ) தீர்ப்பு அளித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் தீர்ப்பை காலை வேளையிலும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் தீர்ப்பை மாலை வேளையிலும் உயர் நீதிமன்றம் வழங்கியது. தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் நாமல் பலாலே, ஆதித்ய படபெந்தி மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெறும் ஊடக விளம்பரங்கள் ...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர்  855 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகைகளுடன் குற்றவியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.  பூஜிதவும் ஹேமசிறியும் 855 குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.  சட்ட மா அதிபரால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சியங்களைக் கேட்காமல் குப்பைத் தொட்டியில் வீசியிருப்பதால் எஞ்சிய வழக்குகளின் முடிவை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இந்த நாட்டின் சட்ட மா அதிபர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக இலட்சக்கணக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவை விசாரணை இன்றி தள்ளுபடி செய்யப்படும் வழக்குகள் என்பதையும், அவை வெறும் ஊடக விளம்பரங்களுக்காகப் போடப்பட்ட வழக்குகள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன்படி, ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான இந்த நீதி விசாரணையின் முடிவில், ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களுக்குச் சென்ற பக்தர்களும், சுற்றுலா விடுதிகளுக்குச் சென்ற 300க்கும் மேற்பட்டவர்களும் குற்றவாளிகளாகக் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

அப்போது ஹேமசிறி தெரிவித்த சர்ச்சை கருத்து ...

ஈஸ்டர் படுகொலைகள் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சர்வதேச ஊடகங்களுக்குக் அன்று தெரிவித்த  கருத்து உலக நாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன கதைகளை உங்களைப் போலவே நாங்களும் மறக்கவில்லை. " குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் வந்தன, ஆனால் அது இவ்வளவு தீவிரமான தாக்குதல்களாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல, அதைச் செய்வது அவர்களின் வேலை" என்று ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார். ஹேமசிறி ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி அல்லாவிட்டாலும் தாக்குதல் நடக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்தும் அதனை தடுக்க ஒரு மயிரையும் பிடுங்காத சூத்திரதாரி என்பதை அறிவு உள்ள அனைவரும் புரிந்து கொள்வர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யுமாறு ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையை திரித்து, சிறப்பு பிரிவுகளை மறைத்து, குற்றவாளிகளை விடுவித்து, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க அரசாங்கம் செயல்படுகிறது. இதன் மூலம் இந்த அரசாங்கம் ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவையும் பல கோடி பொது மக்கள் பணத்தையும் வீணடித்த மற்றும் ஓரு ஆணைக்குழுவாக மாற்றி உள்ளது. 

கவலைப்பட்டு முடங்கி இருக்காமல் ... 

கத்தோலிக்க திருச்சபை இப்போது செய்ய வேண்டியது, ஞாயிறு தாக்குதல் குற்றங்கள் போன்று மற்றும் ஒரு தொடர் படுகொலைக்காக காத்திருக்காமல், அது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அச்சம் கொண்டு, உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்றுக்குப் போராட வேண்டும். அல்லது கொல்லப்பட்ட 300 பேரின் உயிருக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அப்படி இன்றேல் அரசியல் ஆதாயத்திற்காக இன்னும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழி கொடுத்து கண்ணீர் வடிக்க வேண்டி ஏற்படும்.

தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் அவ்வாறான ஒரு மத மோதலை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது. கத்தோலிக்க சமூகத்தை இவ்வாறான ஒரு மோதலில் ஈடுபடுத்தும் வகையில் கொச்சையான பாவ வெறுப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு பலத்துடன் இருப்பதாகக் கூறும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பாரிய கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்படும் நிலையில் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு துரிதமாகச் செயற்பட வேண்டும்.

சட்ட மா அதிபர் திணைக்களம் ஒரு நகைச்சுவை நிறுவனம் ...

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் படுகொலைகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொடர்புகள் தற்போது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகின்றன. நாம் கேட்க இன்னும் ஒரு கேள்வி உள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான 855 குற்றப்பத்திரிகைகளையும் விசேட நீதிமன்றத்தினால் ஒரு தடவை கூட விசாரணை செய்ய முடியாத அபத்தமான குற்றச்சாட்டுகளாக சட்ட மா அதிபர் தாக்கல் செய்தாரா?

சட்டமா அதிபர் திணைக்களம், பொதுமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தனது உத்தியோகபூர்வ கௌரவத்தை கெடுத்துக் கொண்டு, பொதுப் பணத்தை நாசமாக்கி, தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருகிறது.

- எழுதியது ரசல் ஹேவாவசம் 

---------------------------
by     (2022-02-21 06:51:10)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links