~

இலங்கை எரிபொருள் வர்த்தகத்தில் இடம்பெறும் பாரிய மாபியா மற்றும் கசக்கும் உண்மைகள்..!

- வௌியிடுவது விசேட எழுத்தாளர்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , பெப்ரவரி 28 , பிற்பகல் 10.40 ) இலங்கை எரிபொருள் சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் காரசாரமான விவாதங்களும் சவால்களும் நிலவி வரும் இந்த வேளையில், இலங்கை எரிவாயு சந்தையின் முன்னணி நிறுவனமான லிட்ரோ கேஸ் நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு கட்டும் நோக்கில் அவசர கால கொள்முதல் செயல் முறையை ஆரம்பித்துள்ளது. இந்த செயல் முறை தொடர்பில் உள்ளூர் எரிவாயு மாஃபியாக்கள் மற்றும் டீலர்கள் பல்வேறு தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்கள் இது குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு செய்திகளை வௌியிட்டு வருவதுடன் இலங்கை எரிவாயு சந்தையில் உண்மையில் நடப்பது என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். 

கணக்கீட்டு ரீதியான விபரிப்பு ... 

இலங்கை எந்த அடிப்படையில் சர்வதேச சந்தையில் எரிவாயுவை கொள்வனவு செய்கிறது என்பதை முதலில் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது CIF இன் அடிப்படையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, உற்பத்திச் செலவு, காப்புறுதி மற்றும் கப்பல் செலவுகள் ( செலவு  /  காப்புறுதி  /  சரக்கு ) ஆகியவை இலங்கை நிறுவனத்தால் பாதிக்கப்படலாம் அல்லது டெண்டர் நடைமுறையின் கீழ் மட்டுமே சரக்கு மூலம் விலைகளை மாற்ற முடியும். மற்றும் ஒரு முக்கிய காரணி எரிவாயு உற்பத்திக்கான செலவை சவுதி aramco நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

சர்வதேச அளவில், ஒரு நிலையான ஏற்றத் தாழ்வு உள்ள போதும் எரிவாயு கொள்வனவு செய்யும் நாடுகள் அதற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. சவூதி அராம்கோ நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட எல் பி எரிவாயுவின் விலையை வேறு யாராலும் எந்த வகையிலும் மாற்ற முடியாது. உதாரணமாக, கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபெக்ஸ் நிறுவனமும், சவுதி அராம்கோ நிறுவனமும் சர்வதேச எரிவாயு விலையை நிர்ணயம் செய்கின்றன. மற்றும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சர்வதேச தரத்தின் படி செயல்படும் காப்புறுதி நிறுவனங்களுக்கு எரிவாயு வாங்கும் தரகர்கள் அழுத்தம் அல்லது செல்வாக்கு செலுத்த முடியாது. இது ஒரு கோட்பாட்டு விளக்கம் என்றாலும் அந்த அடிப்படை இன்றி இலங்கை எரிவாயுவைப் பெற முடியாது.

மர்மக் குழுவின் வருகை ...

கடந்த இரண்டு ஆண்டுகளில் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், ஓமன் டிரேடிங் கேஸ் ( Oq Trading ) நிறுவனத்தை தனது சரக்கு எரிவாயு வழங்குனராக டெண்டர் அடிப்படையில் தேர்வு செய்து கொண்டுள்ளது. அதற்காக, ஒரு மெட்ரிக் டொன் எரிவாயு வழங்கியதற்கு அமெரிக்க டொலர் 105.40 பெற்றனர். நிறுவனத்தின் டெண்டர் நிறைவு காலம் 2022/2/28 க்குள் முடிவடையும். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திடம் இருந்து குறைந்த அளவிலான எரிவாயுவை பெறுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக அதன் தற்போதைய தலைவர் தெஷார ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும், ஓமன் டிரேடிங் கேஸ் நிறுவனம் ( OQ Trading ) நிறுவனத்திடம் இருந்து எரிவாயுவை மட்டுமே பெறுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மர்மமான வெடிப்புகள் .. 

புதிய எரிவாயு டெண்டருக்கு தாமதம் ஏற்படுத்த படுகிறது, அதாவது 2022/02/22 க்குப் பிறகு, ஏற்கனவே உள்ள எரிவாயுவை பெறுவதற்கு ஓமன் வர்த்தக எரிவாயு நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் இலாபகரமான பரிவர்த்தனையோ அவ்வாறு செய்வதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிர்வாகம் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளானது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய டெண்டர் நடைமுறைக்கு தயாரானது. அமைச்சரவை உப குழு அவ்வாறு செய்யக் கூடாது என்றும் இலங்கையில் எரிவாயு கொள்முதல் செயன் முறைக்காக siyolit என்ற நிறுவனத்தை அமைத்துள்ளதாகவும் அதன் மூலம் கேஸ் கொள்வனவு செய்யுமாறும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் பந்துல குணவர்தன  2021 06 . 27 ம் திகதி லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

ஆபத்தில் தள்ளிய விதம் ...

2021/10/28 முடிவு நடைமுறைப்படுத்தப்படும் வரை, இந்த கண்ணுக்கு தெரியாத கும்பல் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் டெண்டர் நடவடிக்கைகளை ஐந்து மாதங்களுக்கு இடை நிறுத்தி உள்ளது. அக்டோபர் 2021 இல், லிட்ரோ கேஸ் நிறுவனம் புதிய டெண்டர் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியது. இலங்கை எரிவாயு சந்தை அதன் போது அழுத்தத்தை எதிர் கொண்டது. தவறாக அடையாளம் காணப்பட்ட எரிவாயு தீ விபத்துக்கள் சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ( slsi ) அதிகாரிகள் 2021/12/16  அன்று  புதிய எரிவாயு கலவையை அறிமுகப்படுத்தி சில விளைவுகளுடன் தாமதமாகியேனும் அதனை செயற்படுத்தினர். லிட்ரோ கேஸ் அதன் டெண்டர் நடைமுறைக்கு தேவையான எரிவாயு கலவையின் தொழில்நுட்ப விவரக் குறிப்பை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டதே இந்த தாமதத்திற்கு காரணம். இந்த சீர்குலைக்கும் சக்திகள் எரிவாயு சந்தையின் கட்டுப்பாட்டைப் பெற ஊழல் அதிகாரிகள் மூலம் நேரடியாக ஈடுபட்டன. லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் டெண்டர் பாதிக்கப்பட்டு தாமதமானது.

அவசர டெண்டரில் வௌியான உண்மை ..

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர், டெண்டர் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் எரிவாயுவைப் பெற முடியாத அபாயம் ஏற்பட்டது. Litro Gas நிர்வாகம் 28/12/2021 அன்று நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகலவிடம் கோரிக்கை விடுத்து பிரதான எரிவாயு டெண்டர் நடைமுறைகள் நடைபெறுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும், அதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும் எனவும் இலங்கையில் எரிவாயு பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பிரதான டெண்டர் நடைமுறைப் படுத்துமாறும், அவசர கொள்முதல் செயல் முறையின் கீழ் எரிவாயுவைப் பெறுவதற்கான அனுமதி அளிக்குமாறும் கோரப்பட்டது. பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த அதுல குமார, 05/01/22 அன்று முன்மொழிவை பரிசீலித்து, நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு Litro Gas Lanka மற்றும் அதன் நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எழுத்துமூல அனுமதி அளித்தார்.

05/01/2022 லிட்ரோ கேஸ் நிறுவனம் ஒரு செய்திக் குறிப்பு மூலம் அவசரகால கொள்முதல் டெண்டர் பகிரங்கப்படுத்தியது. இது ஒரு சர்வதேச பரிவர்த்தனை என்பதால், வெளி உறவு அமைச்சகமும் தூதரகங்கள் மூலம் டெண்டரை விளம்பரப்படுத்தியது.

ஆச்சரியம் தரும் விடயம் ...

இலங்கை எரிவாயு சந்தையை கைப்பற்ற முனைந்த கண்ணுக்குத் தெரியாத கும்பல் பல அழுத்தங்கள் கொடுத்த போதிலும், ஆறு சர்வதேச நிறுவனங்கள் டெண்டருக்கான விலை மனுக்களை சமர்ப்பித்தன. வியக்கத்தக்க வகையில், லிட்ரோ காஸ் நிறுவனத்திற்கு எரிவாயுவை வழங்கிய முன்னாள் நிறுவனமான Omane Trading ( oq trading ) இந்த டெண்டருக்காக 145 அமெரிக்க டொலர் விலையை குறிப்பிட்டது. அதாவது லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு இதற்கு முன்பு வழங்கிய விலையை விட அதிக விலையை சமர்பித்தது. முன்பு  105.40 அமெரிக்க டொலருக்கு வழங்கியது. லிட்ரோ கேஸ் லங்காவின் தொழில்நுட்பக் குழு, ஆறு சர்வதேச நிறுவனங்களில் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்த SHV - ஐ, நிறுவனம் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 97.88 அமெரிக்க டொலர் என்ற மிகக் குறைந்த விலையில் அதன் தற்காலிக சரக்கு விநியோகஸ்தராகத் தேர்ந்தெடுத்தது. SHV என்பது நெதர்லாந்தில் 1896 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் மிகப் பெரிய எரிவாயு நிறுவனத்தின் விநியோக நிறுவனம் ஆகும். இவ்வாறான சர்வதேச விநியோகஸ்தர் இலங்கை சந்தையில் ஈடுபடுவது ஒருபுறம் இலங்கைக்கு கிடைத்த பொருளாதார வெற்றி ஆகும். 

92 மில்லியன் மேலதிக லாபம் ..

omane trading ( 0q trading ) நிறுவனம் முன்பு லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு 105.40 அமெரிக்க டொலர் விலையில் எரிவாயு வழங்கியது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 60,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதன் மூலம் 92 மில்லியன் ரூபா மேலதிக இலாபத்தை ஈட்டவுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கேடுகெட்ட அழுத்தங்கள் இன்னும் குறையவில்லை ...

தொடரும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து இலங்கை மக்களுக்கு தனது வெற்றியை பெற்றுக் கொடுக்க தேசிய நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு கிடைத்த சந்தர்ப்பம் என ஊடகங்கள் இந்த நிலையை போற்றுகின்றன.

ஆனால் இப்போது இலங்கை எரிவாயு சந்தையை கைப்பற்றும் நம்பிக்கையில் இருக்கும் அந்த கண்ணுக்கு தெரியாத சதி கும்பல் அழுத்தங்களை நிறுத்தவில்லை. எதிர்காலத்தில் பிரதான எரிவாயு டெண்டரை கையகப்படுத்த பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவதாக அறிய முடிகிறது. இலங்கையின் எரிவாயு சந்தையின் எதிர்காலத்தை எமது ஊடகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கும் என்பதை மிக அவதானத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- எழுதியது விசேட எழுத்தாளர் 

---------------------------
by     (2022-02-28 13:21:29)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links