-எழுதுவது சுனந்த தேசப்பிரிய
( லங்கா ஈ நியூஸ் 2022 மார்ச் 25 பிற்பகல் 9.15 ) கோட்டா வீட்டுக்குப் போ என்ற கோஷம் #GotaGoHome இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வரலாற்றில் முதல் முறையாக மக்கள் மத்தியில் இருந்து எழுந்துள்ள பாரிய பலத்த கோஷமாக மாறி உள்ளது. இந்த கோஷம் மற்றும் எதிர்பார்ப்பை வெற்றிகரமாக மாற்றி அமைக்க முடியுமா ? அது எவ்வாறு ? என்பதை ஆராயும் போது சந்தர்ப்பம் சவால் அச்சுறுத்தல் கஷ்டங்கள் போன்ற விடயங்களில் நாங்கள் ஆராய்ந்து பார்க்கலாம்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை நாட்டில் இதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட
ஜனாதிபதிகளில் மிகவும் அதிகாரம் மிக்க வராகவும் ஜெர்மனியின் ஹிட்லர் போன்றவர் எனவும் ரஷ்யாவின் ஹிட்லராக கருதப்படும் விலாடிமிர் புட்டினுக்கு ஒப்பானவர் என்றும் ஒப்பீடு செய்யப்பட்ட நபர் ஆவார். கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருபத்தி ஆறு மாதங்களே ஆகின்றன. அவரது பதவிக் காலத்தில் பெரும்பாலான பகுதி இன்னும் எஞ்சி உள்ளது. ஆனாலும் கோட்டா வீட்டுக்குப் போ என்ற இந்த நாட்டினுடைய மிக பிரபலமான கோஷம் தற்போது மேல் எழும்பி உள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட போதும் அதில் ஜனாதிபதியை திட்டி பல்வேறு கருத்துக்கள் பதி விடப்பட்டன. அதே போன்று பலர் கோபம் வெறுப்பு என்பவற்றை காட்டும் அடையாளங்களையும் வழங்கி இருந்தனர். வெறும் 3000 பேர் மாத்திரமே விருப்பம் தெரிவித்து அடையாளம் விட்டிருந்தனர்.
இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் மத்தியில் இருந்த பிரபல்யம் சுமார் 10% குறைவடைந்துள்ளது என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ள விடயம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ போன்று அவமானங்கள் எதிர்ப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி இலங்கையில் உருவாகி இருக்கவில்லை. நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ எதிர்ப்பாளர்கள் உருவாகி வருவதை சமூக வலை தளங்களில் காண முடிகிறது. அத்துடன் நாட்டு பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தூய்மையான உரிமைகள் இல்லை என்பது புலனாகிறது. கோட்டாபய ராஜபக்ஷ ஒவ்வொரு துறைகளிலும் சித்தியடைய தவறிய ஜனாதிபதியாக உருவெடுத்து உள்ளார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறக்கிப் கோட்டாபய வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோஷத்தை மிக பலமாக எழுப்பி இருந்தார்கள். இது மிகவும் பிரபலமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆக மாறியுள்ளது. கோட்டாபய வீட்டுக்குப் போ என்ற கோஷத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சென்று எழுப்பக் கூடிய சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சோசலிச கட்சி ஆகியவற்றுக்கு இருக்கிறது.
நாம் இப்போதும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி பெறக் கூடிய சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளுக்கு மாத்திரமே உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செயலை செய்யக் கூடிய ஏனைய சக்திகள் சிறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மாற்று ஊடகங்கள் தொழிற்சங்கங்கள் பொது மக்கள் அமைப்புகள் மத அமைப்புகள் போன்றவற்றையும் ஒதுக்கி வைத்து விட முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பக்கூடிய சரியான சந்தர்ப்பம் தற்போது காணப்படுகிறது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமும் சட்ட ரீதியான ஏற்பாடுகளும் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு காணப்படுகின்றன. அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உள்ளது. அதனால் சட்ட ரீதியாக அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க முடியாது. மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கான எதிர்பார்ப்பு இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சக்திகளுக்கு இல்லை. நான் நினைப்பது போன்று அதற்கான தேவையும் இல்லை.
நாடு தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார சமூக அரசியல் நெருக்கடியானது இதற்கு முன்னர் ஒரு போதும் நாடு சந்தித்த பிரச்சினைகள் ஆகும். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலகுவான தீர்வுகளும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய கூறுவது போன்று இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு இலகுவான வழிகள் இல்லை என்றே கூற வேண்டும். அதிகாரத்திற்கு வந்த பின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த ஒரு மேஜிக் திட்டமும் எதிர்க் கட்சிகள் இடம் இல்லை. பிரச்சினை பொருளாதார துறையில் மாத்திரம் அல்ல சமூக அரசியல் போன்ற துறைகளிலும் பிரச்சினை நெருக்கடி காணப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி அந்த பதவிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்க அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டாலும் மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுடைய தேவைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான உடனடித் திட்டம் கை வசம் இல்லை. அதற்குக் காரணம் இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு அப்பால் பட்டது.
1953ஆம் ஆண்டு ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருந்து வீட்டுக்கு விரட்டி அடிக்கக் கூடிய பொருளாதார பிரச்சினையுடன் கூடிய மக்கள் எழுச்சி இதுவரை ஏற்படவில்லை. 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்கு காரணம் அரிசி நிவாரணம் இல்லாமல் செய்தது, பாடசாலை மாணவர்களும் பகல் உணவை நிறுத்தியது, தபால் மற்றும் ரயில் கட்டணங்களை அதிகரித்தது போன்ற பொருளாதார பிரச்சினைகள் ஆகும்.
மேலும் 53 ஆம் ஆண்டு காலப் பகுதியில் துறைமுகம் மற்றும் ரயில்களை நிறுத்தி வைக்கக் கூடிய போராட்ட குணமுடைய தொழிற்சங்கங்களும் நடு வீதியில் ரொட்டி செய்து உண்ணுவதற்கு தயார் நிலையில் இருந்த தைரியமான நபர்களும் இருந்தனர்.
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் இலங்கை சமசமாஜ கட்சி தலைமையில் அரசியல் பேதங்களை மறந்து குழுவாக அரசியல் சித்தாந்தங்களைப் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு பிலிப் அவர்களின் புரட்சிகரமான சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து எழுச்சி பெற்றனர். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கான பிரதான கூட்டம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போது அதன் தலைமை பண்டாரநாயக்க விடம் வழங்கப்பட்டது. சமஷ்டி கட்சியும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியது. யாழ்ப்பாணத்திலும் எழுச்சி ஏற்பட்டது.
1953 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்று நமது நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை மிகவும் படு மோசமானதாக காணப்படுகிறது. ஒரே இரவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை சுமார் 30 சத வீதத்தால் கடந்த வாரம் அதிகரித்தது. 1970 தொடக்கம் 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டில் காணப்பட்ட வரிசை இன்று தோற்கடிக்கப்பட்டு பாரிய வரிசை
யுகத்தை காண முடிகிறது. மண்ணெண்ணெய் ஒன்று அல்லது இரண்டு போத்தல்களை பெற்றுக் கொள்ள மக்கள் மணித்தியாலக் கணக்கில் வீதிகளில் வரிசையில் நிற்கின்றனர். இந்த வரிசையில் நின்று சிரேஷ்ட பிரஜைகள் மூவர் உயிரிழந்துள்ளனர். கேஸ் வரிசையில் நிற்கும் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்து வெளியிடும் கருத்துக்களை கடந்த வாரங்களில் காண முடிந்தது.
ஹர்த்தாலுக்கு மேல் சென்று சமூக கிளர்ச்சியை உருவாக்கக் கூடிய அளவு கோபம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆனாலும் வரிசையில் நின்று உயிரிழந்த 3 உயிர்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு மக்கள் மீண்டும் மணித்தியாலக் கணக்கில் வரிசையில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலின் போது நெருப்பு வைக்க கண்ட அம்பலாங்கொடை கந்தேகொட பெண் மற்றும் மனிதர்கள் இன்று விசாலமான இடத்தில் வெறும் கேஸ்களை வைத்துக் கொண்டு வெறும் கையுடன் வரிசையில் நிற்கின்றனர்.
அரபி வசந்தத்தை போன்று அல்லது மாபோஸ்டுக்கு எதிராக பிலிப்பைனில் மக்கள் எழுச்சி பெற்றது போன்று அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பொது மக்களை திரட்டி களத்தில் இறக்கக் கூடிய சிவில் அமைப்பின் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் இன்று நாட்டில் இல்லை.
கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய ராஜபக்ச ஆட்சியை முழங்காலிட செய்த தொழிற்சங்கங்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மிகவும் உக்கிரமான விரிசல் காணப்படுகிறது.
ராஜபக்ஷக்களுக்கு பிரச்சினை மற்றும் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலை அதிகரித்து செல்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரே அரசியல் பயணத்தை முன்னெடுத்து ராஜபக்சக்களை தாக்கக் கூடிய வலுவான சக்திகள் இன்னும் உருவாகவில்லை. அத்துடன் ஆங்காங்கே மக்கள் கிளர்ச்சிகள் ஒழுங்கமைக்கப் படாத ஒன்றாக நடந்து வருகின்றன. நாட்டு மக்கள் மத்தியில் கோபங்கள் அதிகரித்து வருகின்றன. அதே போன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு அலைகளும் அதிகரித்துள்ளன.
மேலும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் அரசியல் எதிர்ப்புக்களை அடக்கு முறை ரீதியாக நிர்வாகம் செய்வதற்கு ஹிட்லர் போன்றவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதற்கு ராஜபக்ஷக்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இது மிகவும் குறைந்த சந்தர்ப்பமாகும். ஆனாலும் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுக்க முடியாத மனநிலை கொண்டவர்கள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்களின் எண்ணங்களால் இந்த அடக்கு முறை ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது.
எழுந்துவரும் மக்கள் எதிர்ப்பு கிளர்ச்சிகளை இனவாத வட்டத்திற்குள் முடக்குவதற்கு விமல் வீரவன்ச வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில போன்றவர்கள் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான நிலையில் முன் வந்துள்ள போதும் அது இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சில வேளை பேரளவு தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி இந்த ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து செல்வதற்கு ராஜபக்சக்கள் முயற்சிக்கக் கூடும்.
ராஜபக்சக்கள் விரும்பினால் ஞானசார ஹிட்லர் வாதத்தை தெரிவு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ராஜபக்சவின் ஆட்சி தோல்வி அடைந்து அதன் இதய சுத்தி நிலை இல்லாமல் போயுள்ளது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. சமூக வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மீண்டும் இப்படியான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.
இந்த ஆட்சியை கவிழ்க்க கூடிய சமூக அரசியல் சக்திகள் காணப்படுகின்ற போதும் இதனை கவிழ்க்க முடிந்து மற்றும் அதன் பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான வெற்றிடங்களை நிரப்ப வேண்டும்.
நிலைமை அதே போன்று மேலும் அராஜக தன்மையை நோக்கி செல்லுமாயின் அடக்கு முறையை கையாள்வதை விட வேறு மாற்று வழி ராஜபக்ஷ அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
நாம் தெரிவு செய்ய வேண்டியது சந்தர்ப்பத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக அச்சுறுத்தல்களை பின் தள்ளி திறன் இன்மை ஒழிப்பதாகும். இன்றைய அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் எதிர் கொண்டுள்ள தற்காலப் பிரச்சினை அதுவாகும்.
எனவே இதனை சாத்திய படுத்துவதற்கு இயலுமான அனைத்து நட்பு சக்திகளும் ஒன்றிணைந்து ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான நிறுத்த முடியாத போராட்டத்தை களத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அதற்காக நாடு எதிர் கொண்டுள்ள பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்வதற்காக பொது இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணத்தை சாத்திய படுத்திக்கொள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் மலையக வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் உடன் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி பொது கோரிக்கையாக உடனடியாக பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும்.
பொதுத் தேர்தல் ஒன்றுக்கான பொது கோரிக்கையை முன் வைப்பது என்ற முடிவை எடுத்து விட்டால் நாடு தழுவிய ரீதியில் அமைதியான ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு தேர்தல் நடத்தி எந்தக் கட்சி அதிக பலத்தை பெற்றாலும் அந்த கட்சி செய்ய வேண்டிய முதலாவது செயல் அவசரமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி சுயாதீன சட்டமா அதிபர் திணைக்களம் வலுப்படுத்தி 19வது திருத்தச் சட்டத்திற்கு மேல் சென்று புதிய அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்களின் இணக்கப்பாடுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரங்களை நீக்குவது தொடர்பான கோரிக்கைகளில் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் செய்த காட்டிக் கொடுப்புக்களை இந்த புதிய அரசாங்கம் செய்யக்கூடாது.
நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வழி வகைகளை மேற்கொண்டால் தற்போதைய நிலையில் அனைத்து தரப்பினருடனும் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடியும். அது பொது கோஷமக மாறி விடும் . மனிதன் ஒருவரிடத்தில் நிறைவேற்று அதிகாரம் குவிக்கப்பட்டு நாட்டிற்கு ஏற்படும் அழிவு இதற்குப் பின்னரும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான புதிய திட்டமாக நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திற்கு பொதுவாக இருக்க வேண்டும்.
பொதுத் தேர்தல் மூலம் புதிதாக நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் நாட்டு மக்கள் எதிர் கொள்ளும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அவசர மற்றும் நீண்ட கால தீர்வினை முன் வைக்க வேண்டும்.
வீட்டுக்குப் போ கோட்டா என்ற கோஷத்தை வெற்றிக் கோஷம் ஆக மாற்றுவதற்கு இன்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் செய்ய வேண்டியது முதலில் அனைவரும் ஒரு தளத்தில் இருந்து பொதுவான ஒன்றை நோக்கி பயணிப்பதாக அதற்கான இணக்கப்பாடு பொதுத் தளத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இந்த கருத்துக்களை முன் வைப்பதற்கு காரணம் இவ்வாறான எண்ணங்களில் இருக்கும் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவாகும். மாறாக வெறுமனே சூத்திரத்திற்காக இந்தக் கருத்துக்களை முன்வைக்கவில்லை.
---------------------------
by (2022-03-25 16:17:16)
Leave a Reply