- எழுதுவது சிறப்பு நிருபர்
( லங்கா ஈ நியூஸ் - 28, மார்ச் 2022 , பி.ப. 8 : 05 ) மெதமுலன ராஜபக்ச திருடர்களால் அறியாமை மற்றும் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் காரணமாக உருவாக்கப்பட்ட டொலர் நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. மக்கள் தினமும் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் நிற்கின்றனர். முழு நாடும் அழிவின் விளிம்பில் உள்ளது. விமானப் படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தனது மகிழ்ச்சிக்காக 2021 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட புதிய டிபென்டர் லேண்ட் ரோவரை வாங்கச் செய்துள்ளார்.
இந்த சொகுசு காரின் விலை சுமார் 77000 / - அமெரிக்க டொலர் ஆகும். போக்குவரத்து கட்டணம் உட்பட மற்ற கட்டணங்கள் தவிர. இந்த வாகனத்திற்கான நிதியை ஒதுக்கிக் கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவிடம் விமானப் படைத் தளபதி கோரிக்கை விடுத்து இருந்தார்.
விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இந்த புதிய டிபென்டர் வாகனத்தை தனது பயன்பாட்டிற்காக சமீபத்திய Benz மற்றும் BMW இரண்டிலும் தருவிக்கச் செய்துள்ளார்.
நாட்டில் டொலர்கள் கிடைக்காமல், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து பால் மா குறைபாட்டை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், கொள்ளையர்கள் போன்ற துரோக அதிகார வர்க்கத்தினரால் இன்றைய இலங்கைக்கு இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு சாபம் உண்டாகட்டும் ..! அவருக்கு அமெரிக்க டொலரை வழங்க அனுமதி அளித்த தலைமை தளபதிக்கு சாபம் உண்டாகட்டும் ..!
---------------------------
by (2022-03-28 06:42:41)
Leave a Reply