- விசேட எழுத்தாளரின் வௌியீடு
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 29 , பிற்பகல் 02 : 25 ) இலங்கை நாட்டில் எரி பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்வு அடைந்துள்ளதை இப்போது முழு உலகமும் அறிந்து வைத்துள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் கையாலாகாத தனத்தினால் எரி பொருள் விடயத்தில் மாத்திரம் அன்றி முழு நிர்வாக விடயத்திலும் நாட்டை குழப்பத்தில் தள்ளி உள்ளனர். நாட்டு மக்கள் எதிர் நோக்கி வரும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்வதாகவும் கவலைப் படுவதாகவும் தெரியவில்லை. செயல் திறன் அற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது காலம் கடத்தி வருகிறார். ஆனால் நாடும் நாட்டு மக்களும் நாளுக்கு நாள் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்தில் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை சிறிது அளவேனும் கண்டு கொள்ளாது பொறுப்பு இன்றி செயற்பட்டு வரும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மற்றும் ஒரு மோசடி நடவடிக்கையை இந்த செய்தி ஊடாக அம்பலத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
இலங்கை நாட்டிற்கு தற்போது முறையான விலை மனு நடைமுறை இன்றி அதிகாரிகள் தேவையான எரி பொருளை இலங்கை இறக்குமதி செய்கின்றனர். அவற்றின் விலை அல்லது தரம் குறித்து எந்த பொறுப்பும் அல்லது ஆய்வும் இல்லை செய்யப்படுவது கிடையாது. இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் மேலும் ஒடுக்கி ஏமாற்றி வரும் கேடுகெட்ட முட்டாள் தனமான அரசாங்கம் ஒக்டேன் 92 பெற்றேல் ஒரு லீற்றரை 303 ரூபாவிற்கு விற்பனை செய்கின்ற போதிலும் அதில் 92 ஒக்டேன் சரியாக இல்லை என்றும் மிகவும் தரம் குறைந்த ஒக்டேன் 75 - 80 வீதத்துடன் காணப்படும் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பெற்றோல் குறித்து இலங்கையில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்கள் துல்லியமான பரிசோதனைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னர் 10 லிட்டர் பெற்றோலில் பயணிக்கக் கூடிய தூரத்தையும் தற்போது பயன்படுத்தப்படும் பெற்றோலின் ஊடாக பயணிக்க முடிந்த தூரத்தையும் ஒப்பிடும் போது தரம் குறைந்த பெற்றோல் விற்பனை செய்யப்படுவதை அடையாளம் காண முடியும். இந்த முறையை செய்து நன்றாக கவனித்தால், இந்த மோசடியை நீங்களே புரிந்து கொள்ள முடியும். மேலும் வாகனத்தில் இருந்து வௌியாகும் புகையின் நிறம், பெற்றோலின் நிறம், என்பனவற்றையும் கவனித்தால் மோசடி வௌிச்சத்திற்கு வரும். மேற் கூறிய விடயங்களை அடிப்படையாக வைத்தே உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தரம் குறைந்த அந்த பெற்றோல் குறித்து பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட பரிசோதனை விசாரணை முடிவுகளை வெளியிடக் கூடாது என பலம் வாய்ந்த ராஜபக்சே ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஒரு நபர் தனது வீட்டில் புல் அறுக்கும் இயந்திரத்திற்கு இந்த பெற்றோலை என்ஜின் எண்ணெயுடன் கலக்கும் போது, அது தார் போன்ற அடர்த்தியான திரவமாக மாறி இருந்தது என்று கட்டுரை எழுதும் எழுத்தாளரிடம் கூறினார்.
வாழ் நாள் கனவு நனவாகவென லீசிங், லோன், குத்தகை பெற்று கடன் பெற்று வயிற்று பசியை தாங்கிக் கொண்டு உலக சந்தை விலைக்கும் அதிகம் விலை கொடுத்து மிகவும் கஸ்டப்பட்டு வாகனத்தை கொள்வனவு செய்துள்ள அன்பான வாசகர்களே ..! உங்கள் வாகனத்திற்கு அதிக விலை கொடுத்து பெற்றோல் நிரப்புவதற்கு முன்னர் அதன் தரம் குறித்து பல தடவைகள் சிந்தித்து பார்க்குமாறு மிகவும் பொறுப்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், உயிர் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது அச்சத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த மோசடிக்கு நியாயம் பெற வேண்டும் என முன்வரக் கூடிய தனி நபர் அல்லது நிருவனத்திற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
---------------------------
by (2022-03-29 15:16:14)
Leave a Reply