(லங்கா ஈ நியூஸ் - 2022 , மார்ச் , 28 , பிற்பகல் 01 : 25 ) நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் கேடுகெட்ட முட்டாள் தனமான தான்தோன்றித் தன குடும்ப ஆட்சி அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து தூக்கி எறியவென அரசாங்கமே வீட்டுக்குப் போ என கோஷம் எழுப்பி நாடு முழுவதும் துரோக சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தி வரும் நெருக்கடியான நிலையில் திறமை இல்லாத அரசாங்கத்தின் எரிபொருள் வரிசையில் இருந்து ஐந்தாவது பரிதாப மரணம் பதிவாகி உள்ளது.
அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர் தனது சொந்த வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அத்துருகிரிய, கல்பொட்ட வீதியில் வசிக்கும் 85 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 26ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
அத்துருகிரிய சந்தியில் உள்ள எரி பொருள் நிரப்பு நிலையத்தில் தனது வேனுக்கு எரி பொருளைப் பெறுவதற்காக வந்த நபர், தனது வேன் செயல் இழந்து போனதால் வேனுக்கு உள்ளேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் அம்புலன்ஸ் மூலம் அத்துருகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய கல்பொத்த வீதியில் வசிக்கும் 85 வயது நிரம்பிய முதியவரே இவ்வாறு பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த முதியவர் வரிசையில் நின்ற போது அவருக்கான சந்தர்ப்பம் வந்தவுடன் வேன் நகரவில்லை. இதனை அடுத்து பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் பார்த்த போது முதியவர் வாகன செலுத்துனர் ஆசனத்தில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
லிபியா நாட்டின் கேர்னல் கடாபி மற்றும் எகிப்தின் ஹோஸ்னி முபாரக் உட்பட எழுபது அரபு சர்வாதிகாரிகளை தூக்கி எறிந்த 'அரபு வசந்தம்' மக்கள் எழுச்சி ஏற்படக் காரணம் இதே போன்ற ஒரு மரணம் ஆகும். டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டில், மொஹமட் பௌசிஷி என்ற துனிசிய இளைஞன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். ஊழல் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அவர் உரிமம் இல்லாமல் வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டி லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் இது அவரது காய்கறி வண்டியை பறிமுதல் செய்ய வழி வகுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புஷிஷி தனக்கு நீதி வேண்டி போராடி இறுதியில் ஆட்சியாளருக்கு எதிராக தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு தீக்குளித்தார். இதன் விளைவாக ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு பல நாடுகளில் சர்வாதிகாரிகளை பதவியில் இருந்து தூக்கி எறிந்தது.
இலங்கை நாட்டில் இதுவரையில் எரி பொருள் மற்றும் கேஸ் வரிசையில் இருந்து சுமார் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். குறைந்தபட்சம் ஒரு நாளையாவது கண்டன நாளாக அறிவித்து மக்களை ஒன்று திரட்டி ஊரை மூடி கருப்புக் கொடி ஏற்றுவதற்கு எதிர்க் கட்சிகள் எதுவும் முன் வந்து செயற்படவில்லை. அவர்கள் தனித்தனியாக அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என கூச்சலிட்டு சொற்களை மாத்திரம் வீசி வருகின்றனர்.
ஆனால் மறுபுறம் மக்கள் செத்து மடிகிறார்கள். மற்றவர்கள் சபித்துக் கொண்டு வாழ்ந்து மடிகிறார்கள். மற்றொரு பகுதி சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக இதனை பதிவேற்றி இன்பம் கண்டு வருகிறது.
படத்தில் எரி பொருள் வரிசை அல்லாது ஒரு மிக நீண்ட எரி வாயு வரிசையைக் காட்டுகிறது.
---------------------------
by (2022-03-29 15:23:05)
Leave a Reply