(லங்கா - ஈ - நியூஸ் - மார்ச் 31 , 2022 , பி.ப. 9 : 45) லங்கா - ஈ - நியூஸ் ஆகிய நாம் கடந்த 28 ஆம் திகதி எழுதிய செய்தியில் " எதிர்க் கட்சி அமைதியாக இருக்கும் போது எண்ணெய் வரிசையில் ஐந்தாவது நபர் இறந்து விட்டார் " என்று கூறியதுடன் அதில் மேலும் எழுதுகையில் : " எதிர்க் கட்சிகள் ஏதேனும் ஒரு நாளையாவது போராட்ட நாளாக அறிவித்து, நாடு முழுவதும் மக்களைத் திரட்டி, கருப்புக் கொடி ஏற்றி, தனித் தனியாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூக் குரலிட்டு, செயற்பட்டு வருகின்றன. எதிர்க் கட்சிகள் இல்லை என்றாலும், ' கோட்டா வீட்டுக்குப் போ ' என, ஏப்ரல் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு, நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி போராட்டம் செய்ய மக்கள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளனர்.
உங்களுக்கும் எனக்கும் அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஆட்சியை அரசியல் அமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. அதுவரை இப்படியே போனால் நாடு எஞ்சி இருக்காது.
வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை 3 மணிக்கு, நாடு முழுவதும் வீதிகளில் மக்கள் இறங்க வேண்டும்.
இந்த வேலையை நீங்களும் நானும் ஏற்பாடு செய்துள்ளோம். நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்து இருக்க முடியும். அதனை அப்படியே ஓரமாக வைத்துக் கொள்வோம். ஆனால் இம்முறை வாழ்க்கையைப் பற்றிய ஒரு கேள்வி நமக்கு இருக்கிறது. நமக்காகவும், நம் நாட்டிற்காகவும், நம் எதிர்காலத்திற்காகவும் வீதியில் இறங்குவோம். அதற்காக, பல நகரங்களில் பல வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் நகரத்துடன் தொடர்புடைய குழுவில் சேரவும். கீழே உள்ள இணைப்புகளைப் பின்பற்றவும். நீங்கள் நகரத்தில் சந்திக்கும் இடத்தைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.
⋆ எல்லோரும் ஒரு சுவரொட்டியை கையில் கொண்டு வாருங்கள். நீங்களே அதனை எழுதி எடுத்து வாருங்கள்.
* முடிந்தால், கருப்புக் கொடியைக் கொண்டு வாருங்கள்.
* அந்த போஸ்டர்கள் எதிலும் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் குறிப்பிட வேண்டாம். இது ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாட்டு செயல் அல்ல. உங்களுக்குத் தெரிந்த அனைவரையும் அழைத்து வாருங்கள்.
* குழந்தைகளையும் அழைத்து வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகளுக்காகவும் தவறுகளுக்கு எதிராகவும் போராட கற்றுக் கொடுங்கள். அதற்கு முதுகெலும்பு இருக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
* போராட்டம் ஒரு தவறு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* போராட்டத்தை சீர் குலைப்பவர்கள் இந்த குழுக்களில் இணைக் கூடும். அதனைப் பற்றி கவலை வேண்டாம். எப்படி இருந்தாலும், ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மக்கள் தெருக்களில் இறங்குவார்கள்.
* மக்கள் வீதிக்கு வருவதற்கு அரசாங்கங்கள் அஞ்சுகின்றன. இது நமக்கு நகைச்சுவையாக இருக்கும் வரை அவர்கள் கவலைப்படுவது இல்லை.
* நினைவில் கொள்ளுங்கள், ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை 3 மணிக்கு.
கண்டி மாவட்டம்
https://chat.whatsapp.com/KwhWnRFdWbmE1Xpo4a5qwu
கொழும்பு மாவட்டம்
https://chat.whatsapp.com/BK1MqvhVAc25MQDbFIYoMY
குருநாகல் மாவட்டம்
https://chat.whatsapp.com/Dx4Aec1x2Pm1MIGxLp3tEd
அனுராதபுரம் மாவட்டம்
https://chat.whatsapp.com/EpdGETwPVqAKPMjtTPnuZe
காலி மாவட்டம்
https://chat.whatsapp.com/DTMjkbiLdobHVWxhRR6OzC
கம்பஹா மாவட்டம்
https://chat.whatsapp.com/I1fhSiblMfPGwrgS5dHOL7
தம்புள்ளை
https://chat.whatsapp.com/FWGjJ9P2weK0qWbuDF5Zrm
நுவரெலியா மாவட்டம்
https://chat.whatsapp.com/GF11S9rntTLIRBdsrYtucj
களுத்துறை மாவட்டம்
https://chat.whatsapp.com/Fz3U1TGQXbGKo7uMtS7rAG
மாத்தறை மாவட்டம்
https://chat.whatsapp.com/JfqmACsk2Dz7vcMNPurcOg
இரத்தினபுரி மாவட்டம்
https://chat.whatsapp.com/CQDkmu8EqUx9rybOAC8u0t
அவிசாவளை
https://chat.whatsapp.com/GDrgCMjjYDlExInkZLoaW6
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
https://chat.whatsapp.com/Cqq3TreSLaXAunpdrPzGw0
குளியாபிட்டிய
https://chat.whatsapp.com/IDPwYFdu97gDCBHXQcpNi3
கிரிபத்கொட
https://chat.whatsapp.com/JA3oOEcKQziFwN0rkhXjgG
பொலன்னறுவை மாவட்டம்
https://chat.whatsapp.com/ITAg7mExPFLIVusMUW1yOG
மாத்தளை மாவட்டம்
https://chat.whatsapp.com/GnNEWsPWIi4Gp0Lok0f57b
மொனராகலை மாவட்டம்
https://chat.whatsapp.com/C1AIywSExV4LlvGgggSSkz
யாழ்ப்பாணம் மாவட்டம்
https://chat.whatsapp.com/BM08UqOaykG0CR67BiuMty
அம்பாறை மாவட்டம்
https://chat.whatsapp.com/LGNKXHUMC0J7Jt8AJL8Lr1
கேகாலை மாவட்டம்
https://chat.whatsapp.com/IUMwWjxbzK5KAyRdKsLNC5
எதிர்க் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த சுயேச்சையான மக்கள் போராட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி நிறம் அடையாளங்களை காண்பிக்காமல் தமது ஆதரவு மக்களை வீதிக்கு இறக்குவதன் மூலம் எதிர் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்க முடியும்.
---------------------------
by (2022-03-31 11:02:27)
Leave a Reply