- லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சபை முன் வைக்கும் யோசனை
( லங்கா - ஈ - நியூஸ் 2022 , ஏப்ரல் , 15 பிற்பகல் 02 : 25 ) மோசடிக்கார ராஜபக்ஷக்களின் ஆட்சியின் கீழ் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சமூக நெருக்கடி நிலைமைகள் சீர் செய்வதற்கும் மற்றும் அதற்கான பல்வேறு தீர்வுகள் குறித்தும் பலரும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். ஆனால் நெருக்கடி நிலை தீர்க்கப்படாத அவலமும் மக்கள் வறுமையில் துன்பங்களை அனுபவிக்கும் துரஸ்டமும் அப்படியே இருக்கிறது. லங்கா ஈ நியூஸ் இந்த நெருக்கடி நிலைமையை வேறு கோணத்தில் பார்த்து நெருக்கடிக்கு உடனடி தீர்வுகள் சிலவற்றை முன் வைக்க விளைகிறது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் மேற்கொண்ட நீண்ட நெடிய வானம் அளவு திருட்டுகள் ஊடாக, நாட்டின் சொத்துக்களை கொள்ளை அடித்தமை, அறிவே அற்ற நிர்வாக முறை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகளால் இன்று இறுதியாக எமது தாய் நாட்டை அழிவின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டனர். கடந்த 2022 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி கடன் பெற்ற தரப்பினருடன் கலந்து ஆலோசிக்காமல் நாடு பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாது என ஒருதலைப்பட்சமாக அறிவித்து நாடு அழிவு நிலைக்கு சென்று உள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தற்போது நாட்டில் வாழும் மக்கள் அழிவடைந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைக்கு நாட்டு மக்கள் பொறுப்பு அல்ல. நாட்டு மக்கள் வெறும் பாதிக்கப்பட்ட தரப்பு மாத்திரமே.
நாட்டில் தற்போதைய இந்த அழிவு நிலைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட வரும் சட்டம் இயற்றும் பாராளுமன்றில் நிர்வாக அதிகாரம் கொண்ட வரும் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். பார்க்கும் அளவில் இந்த பிரச்சினை நெருக்கடிகளை தீர்க்க அவர்களிடம் எவ்வித தீர்வுத் திட்டங்களும் இல்லை.
அப்படியானால், இலங்கை நாட்டின் அடிப்படைச் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பின் ஆறாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரச கொள்கையை நிர்வகிக்கும் கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மற்றும் சட்டம் இயற்றும் பாராளுமன்றமான சட்ட மன்றத்தின் நிர்வாகப் பிரதானி பிரதமரும் புறக்கணித்து செயற்பட்டுள்ளனர். அரசியல் அமைப்பின் பிரிவு 27 ( 2 ) இன் கீழ் கூறப்பட்ட அனைத்து சட்ட ஏற்பாடுகளும் இங்கு மீறப்பட்டுள்ளன.
சுருங்கச் சொன்னால், நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மை அதிகாரமான வாக்கு உரிமையை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்ட மன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கியது நாட்டை திறம்பட முன்னோக்கி ஆட்சி புரிந்து செல்லவே தவிற நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அல்ல. அதன் அடிப்படையில், நிறைவேற்று அதிகாரமும், சட்ட மன்றமும் நாட்டின் அரசியல் அமைப்பை மீறி செயற்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுகிறது. அதனால் மற்றும் ஒரு முறை நாட்டையும் நாட்டு மக்களையும் ஆட்சி செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை.
இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க முடியாத நாட்டு மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி இடை விடாத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை பார்த்து ' கோட்டா கோ ஹோம் ' (வீட்டுக்குப் போ கோட்டா ) என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வேண்டாம் என்று சத்தமிட்டு கூறுகின்றனர். நாட்டு மக்கள் இதன் மூலம் நாங்கள் மேலே குறிப்பிட்டது போன்று நிறைவேற்று அதிகாரமும் சட்ட மன்றமும் நாட்டின் அரசியல் அமைப்பை அப்பட்டமாக மீறி விட்டதை உறுதி செய்கின்றனர். எனவே, அழிவின் உச்சியில் இருக்கும் நமது நாட்டை மேலும் படு குழியில் தள்ள அவர்களுக்கு ஓரு போதும் இடம் அளிக்கக் கூடாது.
நாட்டை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டு எடுக்க இப்போது என்ன செய்வது என்று பலரும் பலவாறான யோசனைகளை கருத்துக்களை முன் வைத்து வருகின்ற போதிலும் நாம் மாறுபட்ட திட்டமொன்றை யோசனையாக முன் வைக்கிறோம்.
இது நாட்டில் இதுவரை யாரும் சந்தித்து இருக்காத நெருக்கடி ஆகும். அதனால் நெருக்கடிக்கான தீர்வு என்னவாக இருக்கும் என்றால் இதற்கு முன்னர் யாரும் முன் வைத்திராத தீர்மாக இருக்க வேண்டும். அதாவது, பயங்கரமான டெட் லாக்கைக் ( Dead Lock) கை வசம் உள்ள சாவிகளைக் கொண்டு திறக்க முடியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார். அத்துடன் எல்லாவற்றுக்கும் மேல் மக்களின் இறையாண்மையை நிறைவேற்ற வேண்டிய அமைச்சரவையை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கலைத்து நாட்டில் உள்ள நெருக்கடியை தீவிரம் அடையச் செய்துள்ளார். சட்டம் இயற்றும் பாராளுமன்றிலும் இதற்கான தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் காலத்தை கடத்திச் செல்வதால் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கிறது.
அப்படி என்றால் அடுத்த நிலையில் நாட்டு மக்களின் இறையாண்மையை செயற்படுத்த வேண்டியது நீதித் துறை தான். ஜனாதிபதி பதவி காலம் நிறைவு பெற இன்னும் மூன்று வருடங்கள் உள்ளதா ? ஜனாதிபதியை பதவி நீக்கம் அல்லது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதா ? நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா ? தேர்தல் ஒன்றுக்கு செல்ல முடியுமா ? அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா ? போன்ற கேள்விகள் இப்போது பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தையோ அல்லது நாட்டின் அடிப்படைச் சட்டத்தையோ மீறி நிறைவேற்று அதிகாரமும், சட்ட மன்றமும் நாட்டை அழிவுக்கு கொண்டு சென்று விட்டது. இனி மக்களின் இறையாண்மையை செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட நீதித் துறை நாடு அழிவின் அடி மட்டத்திற்கு செல்லும் வரை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அதற்கு நீதித் துறை அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள வழி முறைகளுக்கு புறம்பாக நடவடிக்கை எடுத்து நாட்டை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் இருக்கும் வழிகள் ஊடாக நாட்டை மீட்பதற்கு தீர்வு இல்லை.
நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கமும் செயல்படாத நிலையில் அல்லது அரசியல் அமைப்பை மீறி செயற்படும் பட்சத்தில், தலைமை நீதிபதியே தற்காலிகமாக நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
நிறைவேற்று அதிகாரமும் நிர்வாக பொறுப்பு கொண்ட சட்ட மன்றமும் நாட்டை ஆட்சி செய்வதற்கான அடிப்படைத் தகுதியை இழந்து விட்ட நிலையில், மக்களின் இறையாண்மையை செயற்படுத்தக் கூடிய உரிமை கொண்ட மூன்றாவது தூணாகக் கருதப்படும் பிரதம நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கலந்துரையாடி சரியான வகையில் பொறுப்பு ஏற்று நாட்டு மக்களின் இறையாண்மையை மீண்டும் நிலை நாட்டி மீட்டு எடுக்க வேண்டும்.
எனவே இப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட அனைத்து நீதி அரசர்களும் ஒன்று கூடி நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்தத் தீர்மானத்தை இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டால், நாட்டை அழிவுக்கு உள்ளாக்கி அதே அழிவு பாதையில் நாட்டை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான பாதுகாப்பு படையினரும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது விடயத்தில் தலையிட்டு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என லங்கா ஈ நியூஸ் ஆகிய நாங்கள் யோசனை முன் மொழிகிறோம். இது விடயம் தொடர்பில் வழி காட்டுதலைக் கண்டு அறிய தேவையான துறைசார் நிபுணர்களின் உதவியையும் உச்ச நீதிமன்றம் நாடலாம். உயர் நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டிய இந்த வழக்கை விரைவில் முடித்து வைக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்.
இருளில் இருந்து வேறு யாரும் நம்மை வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று விட்டுச் செல்ல மாட்டார்கள். நாம் மிகவும் கஸ்டப்பட்டு அந்தப் பாதையை தேடிக் கண்டு பிடித்து ஒளியை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
( லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் சந்தருவான் சேனாதீர உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து ஏப்ரல் 15 ஆம் திகதி 2022 அன்று வௌியிட்ட பிரசுரம் இது. )
---------------------------
by (2022-04-15 13:36:47)
Leave a Reply