-எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 16, முற்பகல் 6.40) மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தனது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதிலும், புது வருட பிறப்பின் போதும் வீடு செல்லாமல் மக்கள் காலி முகத்திடல் மைதானத்தில் முகாமிட்டுள்ள நிலையில், புத்தாண்டில் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் இருக்கும் ஞானா அக்காவின் தலைவர் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை (நந்தசேனவை) மக்கள் இப்போது ஜனாதிபதியாகக் கருதவில்லை. நந்தசேனவை ஜனாதிபதியாக கருதும் ஞானா அக்காவின் ஆசிர்வாதத்தில் ( அனுராதபுரத்தில் உள்ள ஞானவதி ( ஞானா அக்கா ) மன நலம் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சுகாதார உதவியாளர் ) காலி முகத்திடலில் குவிந்திருக்கும் மக்களை தனக்கு விசுவாசமான படைகளையும் பொலிஸாரையும் அனுப்பி கலைத்து அப்பகுதியை ' சுத்தப்படுத்த ' திட்டமிட்டுள்ளார். லங்கா ஈ நியூஸ் உள்ளக தகவல் சேவைக்கு வந்துள்ள செய்தியின் படி திட்டம் பின்வருமாறு,
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் ' கோட்டா கோ கம ' எனப்படும் பாரிய போராட்டம் தொடர்பில் நெருக்கமான உளவுத் தகவல்களைப் பெறுவதற்காக 15 ஆம் திகதி ( நேற்று ) இரவு மட்டும் அறுபது SIS அரச புலனாய்வுப் பணியாளர்கள், 80 சிவில் உடையில் STF விசேட அதிரடிப் படை நபர்கள் மற்றும் 200 புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியாளர்கள் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுயேச்சையாக தலைமை தாங்குவது யார் ? யார் யார் உதவி செய்கிறார்கள் ? முதலிய தகவல்களைப் பெறுவதற்கு இவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களின் தகவல்களின் படி, நேற்று வரை மட்டும் சுமார் 200,000 க்கும் அதிகமானோர் ' கோட்டா கோ கிராமத்திற்கு ' அவ்வப்போது வருகை தந்து சென்றுள்ளனர்.
கிடைத்த தகவல்களையும் நிலைமையையும் மதிப்பீடு செய்ததன் பின்னர், இன்று 16 ஆம் திகதி அப் பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாது. இதேவேளை காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக முன் எடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் அவசரகால மற்றும் அத்தியாவசிய சேவை சட்டங்களை விதித்து ஒடுக்கப்படும் என தெரிய வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை 17 ஆம் திகதி ' கோட்டா கோ கிராமத்தை 'சுத்தப்படுத்த' ஒரு பாரிய இராணுவம் மற்றும் பொலிஸ் படை குவிக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. பெரும்பாலும் இது இரவில் அல்லது அதிகாலையில் நடக்க வாய்ப்பு உள்ளது.
நாட்டில் தற்போது போதிய அளவு பெற்றோல் டீசல் உள்ள போதிலும், காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பொது மக்களின் பங்கேற்பைக் குறைக்கும் வகையில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 4 ஜி டேட்டா விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி எதிர்க் கட்சிகளினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தமக்கு 113 பேர் ஆதரவாக இருப்பதைக் காட்டி தாங்கள் இன்னும் பலம் வாய்ந்த அரசாங்கமாக இருப்பதை காட்ட முயற்சி செய்வர்.
இந்த அடக்கு முறைக்கு இணையாக, போராட்டத்தை முடக்கும் வகையில் தனி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் போதைப் பொருள் இருப்பதாகக் கூறி சிலரை கைது செய்து விளம்பரப்படுத்துவது. போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்துக்காக ஆதரவு தெரிவித்து ஆத்திரமூட்டும் வகையில் போராடும் ஒரு துறவியையோ அல்லது ஒரு மதத் தலைவரையோ படு கொலை செய்து அதன் பழியை அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்கள் மீது சுமத்தி கொடுமை படுத்துவது. இரண்டாவது திட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டம் என்றும் அந்த முன்மொழிவை ஜனாதிபதி நந்தசேன இன்னும் அங்கீகரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும், மக்களின் போராட்டம் வெடித்தது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அல்ல. கோட்டாபய அரசாங்கம் தொடந்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தவறி விட்டது. இந்த கோட்டா, மஹிந்த குடும்பம் இன்று அந்த போராட்டங்களை மக்களின் அடிப்படை தேவைகளை வழங்காமல் அடக்குமுறையால் முடிவுக்கு கொண்டு வரப் போகிறது. மக்களுக்கு ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது. இதுவரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாக அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலமும், நாடு முழுவதும் இதுபோன்ற போராட்ட தளங்களை உருவாக்குவதன் மூலமும் மட்டுமே அடக்குமுறையை தடுத்து நிறுத்த முடியும்.
உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு அடக்குமுறைதான் தீர்வாகத் தெரிகிறது. அதனை செயற்படுத்த ஞானா அக்கா என்ற பெண் ராஜாவாகப் போகிறாய் என்று கொடுத்த கயிற்றை சுற்றி மயங்கியுள்ள ஜனாதிபதி கோட்டா, ராணுவ தளபதி சவேந்திர, தேசபந்து போன்ற பொலிஸ் குண்டர்களும் முன் நிற்கின்றனர்.
நந்தா, சவ்வோ, வேசபந்து வாருங்கள் மக்களோடு மோதுவோம் ..!\
---------------------------
by (2022-04-16 12:26:11)
Leave a Reply