- எழுதுவது விசேட எழுத்தாளர்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஏப்ரல் , 19 , பிற்பகல் 09 : 10 ) முரட்டு கொலைகார ஆட்சியாளர்கள் என பல முறை தங்களை நிரூபித்த ராஜபக்ச குடும்பம் இன்று மீண்டும் தங்களின் கொடிய ஆட்சியின் சொரூபத்தை வௌிக் காட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ரம்புக்கன போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்று, அவர்கள் முதலாவது உயிரை பறித்துள்ளனர். அத்துடன் தங்களது இரண்டாவது சுற்று படுகொலைகளை ஆரம்பித்துள்ளனர். முதல் கட்டமாக கட்டுநாயக்க அமைதிப் போராட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ரொஷேன் சானக்க மற்றும் ரத்துபஸ்வல பகுதியில் குடிநீர் கேட்டு இடம்பெற்ற போராட்டத்தில் நடந்த கொலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அத்தனை சம்பவங்களையும் மறந்த 69 இலட்சம் மாடுகளும் இந்தக் கொலையாளிகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுத்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.
காஞ்சன விஜேசேகரவின் வேலை ..
தேசிய செல்வத்தை திருடி நாட்டையே அழிவுக்குள் தள்ளிய துரோக குண்டர் கும்பலான ராஜபக்சவின் வாக்குறுதியுடன் நேற்று புதிய எரிசக்தி அமைச்சராக பிரபல கொலைகாரனின் மகன் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று இரவு முதல் நாடு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் ரம்புக்கனை புகையிரத பாதையை மறித்து ரம்புக்கனை மக்களின் போராட்டத்துடன் ஆரம்பமானது. இது நாடு முழுவதும் வெடித்தது மற்றும் ரம்புக்கன போராட்டம் இன்று மாலை வரை தொடர்ந்தது, ஆனால் வன்முறை எதுவும் இல்லை. (தொடர்புடைய புகைப்படங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன)
பிரசன்ன ரணதுங்கவின் வேலை ..
போராட்ட இடத்திற்கு மாலை வேளையில் வந்த ரம்புக்கனை பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பொறுப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவின் பேரில் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த உத்தரவை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணீர்ப் புகை, மற்றும் ரப்பர் புல்லட்டில் இருந்து சுடுதல், போராட்டங்களைச் முழங் காலுக்கு கீழ் சுடுதல், துப்பாக்கியை ஆகாயத்தை நோக்கி சுடுதல்.. இது ஒரு செயற்பாடுகளை பொலிஸார் ஆரம்ப கட்டத்தில் முன்னெடுத்து இருக்க வேண்டும். ஆனால் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குழப்பி பின் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆர்ப்பாட்டக் களத்தில் இதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகையிரத பாதையை கடந்து எண்ணெய் பௌசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும் அதனை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இது அப்பட்டமான பொய். அப்படி ஒன்று நடக்கவில்லை என்பதற்கு போதுமான வீடியோ ஆதாரம் உள்ளது. ஒரு காணொளியில் ஒரு போலீஸ் அதிகாரி, வேசை மகன் இரு வருகிறேன் என்று கூறி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகிறது.
தாக்குதலில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயம், 24 பேர் மருத்துவமனையில் அனுமதி ...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு முதியவர் உட்பட 11 பேர் மீது துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் ஒருவர் சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் 10 பேர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதுடன் அவர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவர். முழங்காலுக்கு கீழே மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது.
ரம்புக்கனை பொலிஸ் பிரதேசத்தில் தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் STF விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் படம், போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசும் முன் அமைதியான போராட்ட சூழல், காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி , திருமண விடுதி அருகே சுடப்பட்ட ' வெள்ளையன் ' என்பவரின் படம், போலீஸ் துப்பாக்கித் தோட்டாக்கள் கீழ் உள்ள படங்களில் உள்ளன.
ராஜபக்சே கொலையாளிகளே, இது உங்களின் கடைசி கொலை பலியாக இருக்க வேண்டும். இல்லையெனில், நிர்வாணக் குழந்தை தொடக்கம் உங்கள் முழு பரம்பரையும் நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதைத் தடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
- எழுதியது விசேட நிருபர்
---------------------------
by (2022-04-20 10:56:42)
Leave a Reply