~

சஹரானின் V8 வாகனத்தை பயன்படுத்தும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியை வழங்குமா ? அரச புலனாய்வு பிரிவு சஹரான்களின் தோள்கள் மேல் குண்டுகளை மாட்டி விட்ட விதம்..!

-ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 வருடங்கள் கடந்தததை முன்னிட்டு ரசல் ஹேவாவசம் எழுதுகிறார்

( லங்கா ஈ நியூஸ் - 2022 , ஏப்ரல் 23 , பிற்பகல் 10 : 40 ) ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படு கொலைகளின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நேற்று ( 21 ஆம் திகதி ) அனுசரிக்கப்படுகிறது. இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 300 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் சுமார் 500 பேர் நிரந்தர ஊனமுற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

இந்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை இரண்டு மாதங்களில் கண்டு பிடிப்பதாகக் கூறி தேர்தலுக்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி அளித்த போதிலும், இதுவரையில் புதிதாக எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படும் மொஹமட் சஹாரான் பயன்படுத்திய V8 சொகுசு வாகனத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி உள்ளதாக பாராளுமன்றில் தகவல் வௌியிடப்பட்டது. இதற்கு இடையில், தற்கொலை குண்டுத் தாக்குதல் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய குற்ற விசாரணை பிரிவு ( சி.ஐ.டி ) அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டமை, பணி இடை நீக்கம் செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கமல் குணரட்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான கிசு கிசு ...

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர் சி . டி விக்ரமரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம்  12 ஆம் திகதி அவசர அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர். காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் # Gota go home பொது மக்கள் போராட்டம் காரணமாக நாடு குழப்பத்தில் இருக்கும் வேளையில் இந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவசர பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்த போதிலும் அங்கு கலந்து கொண்டிருந்த முக்கியஸ்தர்கள் புதிதாக எந்த விடயங்களையும் சொல்ல வில்லை. அதற்கு காரணம், ஞாயறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஒரு பங்கு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதாகும். இருந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் எந்த வித தயக்கமும் கூச்சமும் இன்றி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கிசு கிசு ஜாதக நாடகத்தை அரங்கேற்றினர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொது மக்களால் நடத்தப்பட்டு வரும் வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் அநேகமானவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் அவ்வாறு செய்தனர். ( இப்போது அவர்கள் நினைத்தது போல நடந்து கொண்டிருக்கிறது. )

இலகுவான கேள்விகளைக் கேட்கக் கூடிய ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில ஊடகவியலாளர்களை அனுப்பி, அவர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என்று மீண்டும் ஒரு முறை அப்பட்டமாக கூறுவதற்கு முயற்சித்துள்ளனர். பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை மிரட்டவும் ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்தவும் அவர்கள் முயற்சித்தனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அளித்த வாக்கு மூலங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தும் என எச்சரித்துள்ளனர். இந்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள் மொஹமட் சஹரானும் தற்போது பொலிஸ் காவலில் உள்ள நௌபர் மௌலவியும் தான் என்றும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் கைது செய்யப்பட்டுள்ள நவ்பர் மௌலவி பிரதான சூத்திரதாரி அல்ல என முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கூறி இருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  அப்படியானால், முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொய் சொன்னாரா ? அல்லது அவ்வாறு இல்லையேல் முன்னாள் சட்ட மா அதிபர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படுமா ? என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறவில்லை. “ உங்களால் சில நபர்களை சில நேரங்களில் முட்டாள்களாக மாற்ற முடியும். ஆனால் உங்களால் எந் நேரமும் எல்லோரையும் முட்டாள்களாக மாற்றி ஏமாற்ற முடியாது. ”

வாய் பொய் சொன்னாலும் நாக்கு பொய் சொல்லாது ...

இருப்பினும், அவர்களின் வாய் பொய் சொன்ன இடங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் நாக்கு பொய் சொல்லாத இடங்களும் இருந்தன. நௌபர் மௌலவியும், மொஹமட் சஹரானும் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவர்களது அடிப்படைவாத தீவிரவாதச் சித்தாந்த வேலைகளை ஆரம்பித்தார்கள் என்று பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசாங்க தரப்பில் அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது விசித்திரமானது அல்ல. 2009 ஆம் ஆண்டில் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சஹரான் குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சில் இரகசியக் கணக்கின் ஊடாக அவர்களை புலனாய்வுப் பிரிவினருக்கு உதவியாக வேலைக்கு அமர்த்த சம்பளம் கொடுக்க ஆரம்பித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான தசாப்தத்தில் அந்த அடிப்படைவாத தீவிரவாதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு வளர்ச்சி ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படுகொலை வரை சென்றது என்பதை இப்போது முழு நாடும் அறியும்.

ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக நீதி வழங்குவதற்குப் பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் ஒரு கேலிக் கூத்தான நாடகம் அரங்கேற்றப்பட்டு வந்தது. இந்த தாக்குதல் பின்புலம் தொடர்பில் லங்கா ஈ நியூஸ் தொடர்ச்சியாக தகவல்களை பரப்பி வந்த நிலையில் அது உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று இறுதியில் வத்திக்கான் திருச் சபையின் பரிசுத்த பாப்பரசர் வரை சென்றது.

அரச புலனாய்வு பிரிவு அனுமதியுடன் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த குண்டுகளை தயாரித்து அவர்களின் தோள்களில் தொங்க விட்ட விதம் ...!

கடந்த சில ஆண்டுகளாக ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு எங்கு இருந்து வந்தது என்பதை நாம் பல கோணங்களில் ஆராய்ந்தோம். அதனை மூடி மறைப்பதற்கு ராஜபக்ஷ சார்பு ஊடகங்கள் எவ்வாறு பொது மக்களை தவறாக வழி நடத்தியது என்பதையும் நாங்கள் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளோம். அதைப் பற்றிய மற்றும் ஒரு உண்மைக் குறிப்பு இது.

வெடி மருந்து நிபுணர்களின் கூற்றுப் படி, மொஹமட் சஹாரான் உள்ளிட்ட தீவிரவாதிகளால் வெடிக்கச் செய்யப்பட்ட குண்டுகள் அதி சக்தி வாய்ந்தவை என்பதுடன் அந்த குண்டுகள், சி4 , டிஎன்டி கூறுகளை உள்ளடக்கியதுடன் இலங்கையில் உள்ள கொடிய வெடி மருந்துகளை வெடிக்கப் பயன்படுத்தப்படும் சமீபத்திய உயர் ஆற்றல் கொண்ட புதிய கூறுகளால் குண்டுகள் செய்யப்பட்டவை என்பதுவும் தெரிய வந்துள்ளது. தற்கொலை குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட அந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகள் எதுவும் மொஹமட் சஹரான் குழுவினரால் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நாம் உறுதிபட கூறுகிறோம். 2018 ஆம் ஆண்டில், மொஹமட் சஹரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் ஒரு குண்டு தயாரித்து அதனை வெடிக்க வைக்க ஒத்திகை பார்த்த போது ஏற்பட்ட வெடிப்பில் பல விரல்களை இழந்தார். மேலும், ரில்வானின் உடல்களில் பல காயங்கள் அதனால் ஏற்பட்டது. அதன் பின்னர் மொஹமட் சஹாரான் மற்றும் மொஹமட் ரில்வான்கள் இது போன்ற வெடிப்புகள் அல்லது வெடி குண்டு தயாரிப்பு பரிசோதனையில் ஈடுபடுவதற்கு கடுமையான அச்சத்தில் இருந்தனர். எவ்வாறாக இருப்பினும், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி தற் கொலைத் தாக்குதலுக்கு முன்னதாக, புலனாய்வுப் பிரிவினரின் அனுசரணையுடன் சஹரானால் சாய்ந்தமருது பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சிறிய குண்டு ஒன்றை வைத்து கொழும்பில் இருந்து காலி ஊடாக காத்தான்குடிக்கு அரச புலனாய்வு பிரிவினர் அனுப்பி வைத்துள்ளனர்.  ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தவறாக வழி நடத்துவதற்கும் தாக்குதலுக்குப் பிறகு சஹரான் குழு மீது மட்டும் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு பெரிய தாக்குதலின் பின்புலத்திற்காக இது வெடிக்க வைக்கப்பட்டது. அன்றைய தினம் அரச புலனாய்வு பிரிவு பிரதானி நிலந்த ஜயவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்திருந்தார்.  ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மறு நாள் அதாவது ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மோட்டார் சைக்கிள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை கோட்டாபய ராஜபக்ஷவும் தானும் அறிந்து வைத்திருந்ததாகக் கூறினார். இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் நிலந்த ஜயவர்தன மற்றும் அவர் தலைமையிலான குழுவினரால் முன் கூட்டியே ராஜபக்ஷக்களுக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் கொழும்பு பத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றுக்கு மொஹமட் சஹரான் உள்ளிட்ட தற் கொலைப் படையினர் சென்று குண்டுகளை எடுத்துச் செல்வதற்கு ஒரே வகையான பைகளை கொள்வனவு செய்தமை மற்றும் ஒரு  ஆச்சரியமான ஏற்பாடாகும். மொஹமட் சஹரான் உள்ளிட்ட குழுவினர் எவ்வாறு அந்த பைகளை கொள்வனவு செய்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அருகில் இருந்த நெருக்கமான நபர்கள் வீடியோ காட்சிப்படுத்தி ராஜபக்சக்களின் ஆதரவு ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தினர்.

கொள்வனவு செய்த பைகளில் வைக்கவென அதிக சக்தி கொண்ட வெடி குண்டுகளை யார் கொடுத்தது ?

அந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகள் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட படி குற்றத்தின் ஆரம்ப அறிக்கைகள் சரியாக படமாக்கப்பட்டு நாடகமும் அரங்கேற்றப்பட்டு இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள்  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சாதகமாக பயன்படுத்தப்பட்டன. அதனை பின் தொடர்ந்து கிரி உல்ல பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பல முஸ்லிம் பெண்களும் ஆண்களும் வெள்ளைத் துணிகளை கொள்வனவு செய்வதாகவும், அந்த வௌ்ளைத் துணிகளை பயன்படுத்தி சீல் ஆடைகள் தைத்து ஒரு போயா தினத்தில் பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்த  திட்டம் தீட்டப்பட்டதாகவும் சில சேறு பூசும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மற்றும் ஒரு ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியான இன்சாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள செப்புக் கம்பித் தொழிற்சாலையில் வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக நாட்டு மக்கள் நம்பும் வகையில் தவறான பிரச்சாரங்களை பரப்பினர். அந்த தொழிற்சாலையில் அப்படி வெடி குண்டு தயாரிக்கப்பட்டதாக சமூகம் வேகமாக நம்பும் வகையில் கட்டுக் கதைகள் பரப்பப்பட்டன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் இது விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு விசாரணையும் இடம்பெறவில்லை என்பது மிகவும் சந்தேகத்திற்கு உரியது ஒன்றாகும்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டி இடுவதற்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற கோட்டாபய ராஜபக்ஷ குழுவினர் ஈஸ்டர் ஞாயிறு தின தற் கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களை இவ்வாறு தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது குறித்து தனியான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நியூட்டனின் மூன்றாவது விதி ...

பல்வேறு மாறு வேடங்கள் இட்டு மறைந்து இருக்க தொடர்ந்து அசாத்திய முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் பொருத்தமான தகுதியான  ஏற்ற சூழல் இப்போது உலக அளவில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தனவின் தலைமையில் மொஹமட் சஹரான் உள்ளிட்ட தீவிரவாதிகளை பயன்படுத்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய  இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட நபர் இன்னமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் குற்ற உணர்வுடன் பல்வேறு சலுகைகள் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தற் கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் 21 ஆம் திகதி அன்று நடந்த குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான முறைகள் வெடித்துச் சிதறி வருகின்றன. மேலும், நியூட்டனின் மூன்றாவது விதி படி ஈஸ்டர் ஞாயிறு, அதன் சூத்திரதாரிகளை சமமாக செயல்பாட்டிலும் எதிர் விளைவுகளிலும் கண்டறிந்துள்ளது.  இது இயக்கத்திற்கு மட்டுமல்ல, குற்றத்திற்கும் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

- எழுதியது ரசல் ஹேவாவசம்

---------------------------
by     (2022-04-23 13:13:28)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links