( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 11, அதிகாலை 04.40 ) ராஜபக்ஷவின் கைக் கூலிகளால் லங்கா ஈ நியூஸ் அலுவலகம் 2011 , ஜனவரி 30 ஆம் திகதி தீ வைத்து எரிக்கப்பட்டது. அது தொடர்பில் இன்று வரை எவ்வித விசாரணைகளையும் இடம்பெறவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன உலைச்சலுக்கு 11 வருடங்கள் கடந்துள்ள போதும் முடிவு இல்லை. அதே ராஜபக்ஷக்களின் கைக் கூலிகள் சிலரது வீடுகள் 2022 மே மாதம் 9 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் எமக்கு மகிழ்ச்சி கவலை எதுவும் இல்லை. எந்த காரணத்தின் அடிப்படையிலும் தீ வைப்புச் சம்பவங்களை நாம் அனுமதிக்க மாட்டோம். இரண்டுமே ஒன்றுதான். அதனால் தீ வைப்புக்களை நிறுத்தவும் ..! நிரந்தரமாக ..!
---------------------------
by (2022-05-11 15:14:12)
Leave a Reply