- லங்கா ஈ நியூஸ் விசேட எழுத்தாளர்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே , 11 காலை 07.35 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் வெடித்த கொடூரமான வன் முறைகளைத் திட்டமிட்டு, சதி செய்து வழி நடத்திய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச என்று அழைக்கப்படும் ' மெதமுலனே முட்டாள் கொலைகாரன் ' மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேலும் சதித் திட்டத்தை திட்டமிட்ட கும்பல் தற்போது இந்த கட்டுரை எழுதப்படும் இன்றைய 11 ஆம் திகதி இந்த நேரத்தில் திருகோணமலை கடற் படைத் தளப் பகுதித் தளபதியின் வலயமான டொகியாட்டில் அமைந்து உள்ள ' பில்லோ ஹவுஸ் ' (Pillow House) என்ற பங்களாவில் தங்கி உள்ளதாக ' லங்கா ஈ நியூஸ் கடற் படை உள்ளக தகவல் சேவையில் ' இருந்து உறுதி செய்யப்பட்ட செய்தி வந்துள்ளது.
முன்னர் Navy House நேவி ஹவுஸ் பகுதியில் தங்கி இருந்த ராஜபக்ஷ குழுவினரை தீவிர பாதுகாப்பு நோக்கில் ' பில்லோ ஹவுஸ் ' Pillow House பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ' நேவி ஹவுஸ் ' அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழை வாயிலுக்கும் அருகில் உள்ளது. ஆனால் பில்லோ ஹவுஸ் கடற் படை தளத்தில் இருந்து வெகு தூரத்தில் காடு போன்ற பகுதியில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன. எனவே பில்லோ ஹவுஸ் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதால், ' மெதமுலன முட்டாள் கொலைகாரன் ' மஹிந்த உள்ளிட்ட கும்பல் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடற் படை முகாமில் தங்கி இருந்த ராஜபக்ச குழுவினர் இரண்டு தனி ஹெலிகொப்டர்கள் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதாக நேற்று 10 ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையம் வௌியிட்ட செய்தியானது திருகோணமலை கடற் படை முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்களை திசை திருப்பும் நோக்கில் சதிகாரர்களால் பரப்பி விடப்பட்ட வதந்தி என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
அதே வேளை மஹிந்த ராஜபக்ஷவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைத் தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் தனி ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு வெளியேறி சென்றதாகவும் ஆனால் மற்றும் ஒரு செய்தியில் சமுத்திரா என்ற இந்திய கப்பலில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. மேலும் சிலர் இன்னும் பல பொய்களை பரப்பி வருகின்றனர். இதே வேளை, தனது தந்தையான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்திசாலித்தனமான வாசகர்கள் எது உண்மை பொய் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அற்புதமாக இருந்த நமது இலங்கை திரு நாட்டை வங்குரோத்து நிலைக்கு வீழ்ச்சி அடையச் செய்து தீ வைத்து எரித்த ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மற்றும் அதற்கு மேலதிகமாக தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்களுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை மக்கள் இந்த தருணத்தில் கோரிக்கை முன் வைக்க வேண்டும். அத்துடன் அழகி நாட்டில் வன் முறையை தூண்டி அழிவு நிலைக்கு கொண்டு சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை தாம் கடவுளாக நம்பி வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பக் கும்பல் இறுதி நேரத்தில் செய்த மிகவும் கொடூரமான சதித் திட்ட வேலையால் தங்களது வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் எரிக்கப்பட்டதாகவும் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ கும்பலே பொறுப்பு என்பதையும் மொட்டுக் கட்சி அரசியல் வாதிகள் உணர வேண்டும். இந்த விடயத்தை உணர்ந்து தற்போது அல்லது எதிர் காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள உண்மையான நெருக்கடிக்கு உரிய தீர்வு காண்பதற்கு மக்களுக்கு தாங்கள் அர்ப்பணிப்பை காட்ட வேண்டும்.
இதே வேளை, ராஜபக்சக்களின் அனுசரணையில் சேவை நீடிப்பு பெற்று, பொது நிதியை முறைக் கேடாகப் பயன்படுத்திய கடற் படைத் தளபதியை வீட்டுக் காவலில் அடைத்து அதன் இரண்டாம் நிலை கடற் படை தளபதிகள் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், கடற் படையினர் பதவி ஏற்றுள்ளமை நாட்டின் அரசியல் யாப்பை பாதுகாப்பதாக உறுதி அளித்தே தவிர ராஜபக்ஷக்களை பாதுகாப்பதாக உறுதி அளித்து அல்ல. பொது மக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்படும் கடற் படையினர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்சவுக்கு விசேட பாதுகாப்பும் வழங்கும் நிலையமாக மாற்றி அமைத்துள்ளமை சட்ட விரோத செயலாகும்.
---------------------------
by (2022-05-11 16:00:54)
Leave a Reply