- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா ஈ நியூஸ் - 2022 , மே, 20 ஆம் திகதி , பிற்பகல் 04 : 30 ) கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட நிட்டம்புவ பகுதியில் மரணம் அடைந்த பொலன்னறுவை மாவட்ட ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலவின் மரணம் பாகிஸ்தான் சியால் கோட்டில் இடம்பெற்ற இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலையை விட கொடூரமானது என பாராளுமன்றில் உள்ள சில வௌ்ளை நிற கரை பட்டி ஆடை அணிந்த மோசடிக் காரர்கள் பொய்யாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரல மற்றும் அவரது மெய் பாதுகாவலர் அகங்கம வித்தாரனலாகே ஜயந்த குணவர்த்தன ஆகியோர் உயரிழந்தது நிட்டம்புவ பகுதி விகாரைக்கு சில் எடுக்கச் சென்று அல்ல.
மே மாதம் 9 ஆம் திகதி காலை காலி முகத்திடலில் நிராயுதபாணிகளாக நின்று அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது ராஜபக்சே அரக்கர்களின் ஆதரவாளர்கள், குண்டர்கள் நடத்திய கண்மூடித்தன மூர்க்கத்தன பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர். முதலில் பொல்லால் ஒரு பெண்ணை தாக்கினர். பிறகு, ஆத்திரம் அடைந்த நாட்டு மக்கள் உடனடியாக ராஜபக்சே குண்டர்கள் கொழும்பில் இருந்து வௌியில் பயணிக்கும் வீதிகளில் ஒன்று கூடி அவர்களை மறித்து பதில் அடி கொடுத்தனர். ராஜபக்சே பயங்கரவாத குழு முதலில் ஒரு பெண்ணை தடியால் கொடூரமாக தாக்கியது. ' கொம்பனி வீதியின் நுரக்கா ' அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான கதா பாத்திரம். காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு அந்த பெண் அடிக்கடி வருகை தந்து ஆதரவு வழங்குவார். பாதிக்கப்பட்ட பெண் தனது கொம்பனி வீதி தோட்டத்தில் உள்ள இளைஞருக்கு தொலைபேசி ஊடாக தகவல் தெரிவித்த உடன், கொந்தளித்த பாட்டாளி வர்க்க இளைஞர்கள் பதில் அடி கொடுக்க விரைந்துள்ளனர். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த அருகில் உள்ள அலுவலகங்களில் இருந்த இளம் தொழிலாளர்களும், கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தில் பணி புரியும் இளம் தொழிலாளர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களும் ராஜபக்சே குண்டர்களுக்கு பதில் அடி கொடுக்கும் வகையில் வெளியே வந்து காலி முகத்திடலில் நிராயுதபாணியாக இருந்த இளைஞர்களை மீட்டனர். அதன் பின் ராஜபக்ஷ குண்டர் கூட்டம் வருகை தந்த பஸ்களை தேடித் தேடி தாக்கினர். அவற்றை கங்காராம பேர் வாவிக்குள் தள்ளினர். மேலும் அப்பகுதியில் குண்டர்களை தேடி தாக்கி அவர்களையும் பேர் வாவிக்குள் தள்ளி விட்டனர். ஆனால் ராஜபக்ஷ குண்டர்கள் எவரையும் பொது மக்கள் கொலை செய்யவில்லை. நன்றாக தாக்கினர். மரத்தில் கட்டி வைத்தனர். முழங்கால் இடச் செய்தனர். ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விரட்டினர். இந்த கலவர நிலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியது.
அஹிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்து சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற ராஜபக்ஷ குண்டர் குழுவினர் வாகனங்களை நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் வழி மறித்து சோதனை நடத்தினர். அது போலவே பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகொரல அவர்களின் வாகனத்தை நிட்டம்புவ நகரத்தில் வைத்து பொது மக்கள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அமர கீர்த்தி அத்து கோரல என்பவர் பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர். அவருடைய முகம் கூட பொது மக்களுக்குத் தெரியாது. உண்மையில் அவர் மரணம் அடைந்த பின்னரே அவரது முகத்தை பலரும் பார்த்துள்ளனர். அப்படி இருக்கையில் பொது மக்களால் வாகனம்
இடை மறிக்கப்பட்ட போது அமர கீர்த்தியும் அவரது மெய்ப் பாதுகாவலரும் பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கல் எளிய ஹாபிட்டி கம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய ஹர்ச நதிஸான் ஜயவீர என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இருவர் இன்றும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஆகியோர் நிட்டம்புவ நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் சென்று ஒழிந்து கொண்டனர். ஆனாலும் பொது மக்கள் அவர்களை கண்டு பிடித்து சுற்றி வளைத்தனர். இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டமை மேலும் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை போன்ற விடயங்களால் கடும் கோபம் அடைந்த பிரதேச மக்கள் வசமாக சிக்கிக் கொண்ட இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். பிரேத பரிசோதனையின் பின் பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகோரல கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகியதன் காரணமாகவே உயிரிழந்து உள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அவரது மெய்ப் பாதுகாவலரும் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. எனினும் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன. அந்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் அவருடைய துப்பாக்கியின் மூலமாக ஏற்பட்டவை. அத்துடன் அவரது துப்பாக்கியும் காணாமல் போயுள்ளது.
எனவே மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகொரல ஒரு அப்பாவி இளைஞனை கொலை செய்து இரண்டு நபர்களை மரண படுக்கைக்கு அனுப்பிய பின்னரே பொது மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்படும் போது அவரும் ஒரு கொலை குற்றவாளியே.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது பாராளுமன்றம் கூடி அங்கு உரையாற்றும் வெள்ளை நிற உடை அணிந்த மோசடிக்காரர்கள் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அத்துகொரலவிற்கு மாத்திரமே அனுதாபம் தெரிவிக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கீர்த்தி அத்துகொரலவால் சுட்டுக் கொல்லப்பட்ட சாதாரண பொது நபரான
ஹர்ஷா நதிசான் ஜெயவீர குறித்து பாராளுமன்றத்தில் எவ்வித அனுதாபங்களும் தெரிவிக்கப்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வாழ்வா சாவா என மரணப் படுக்கையில் இருக்கும் இரண்டு இளைஞர்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் எவ்வித பேச்சும் இல்லை. குறைந்தது பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கீர்த்தி அத்து கொரலவுடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட அவரது மெய்ப் பாதுகாவலர் ஜெயந்த் குணவர்த்தன தொடர்பில் கூட பாராளுமன்றத்தில் எதுவித அனுதாபங்களும் தெரிவிக்கப்படவில்லை.
இதன் ஊடாக பாராளுமன்றத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களை தனியான மேட்டுக் குடி நபர்கள் என நினைத்துக் கொள்வதாகவே தெரிகிறது. ஆனால் உண்மையாக இன்று அரசியல் அதிகாரத்தை பதவி மோகத்தை பயன்படுத்தி பல சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களைத் தாங்களே மேட்டுக் குடி நபர்களாக மாற்றிக் கொண்ட அரசியல்வாதிகளே அதிகம் உள்ளனர். சட்ட ரீதியாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் சலுகைகளை பெரும் இவர்கள் தாங்கள் பெரும் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். சட்டம் இவர்களுக்கு கீழ் உள்ளது. குறைந்தது இந்த அரசியல்வாதிகள் பதவிக்கு வந்த பின்னர் கடைக்கு சென்று சொக்லெட் ஒன்று வாங்கியது கிடையாது. மக்கள் என்ன கேட்கிறார்கள் என்பது குறித்து இவர்களுக்கு எவ்வித பொறுப்பும் உணர்வும் கிடையாது.
அவ்வாறு பொறுப்பு உணர்வு இருக்கும் நபர்கள் என்றால் கடந்த மே மாதம் 6ஆம் திகதி நாடு முழுவதும் ஹர்த்தால் போராட்டம்
நடத்தப்பட்டு அறுபத்தி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்கிய போராட்டம் நடத்தி அதைப் போல சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக காலி முகத்திடலில் அகிம்சை வழியாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பொது மக்கள் மீது மே மாதம் ஒன்பதாம் திகதி காட்டு மிராண்டித் தனமாக மூர்க்கத்தனமாக
அமானுஷ்யமாக தாக்குதல் நடத்துவதை தவிர்த்து இருப்பதுடன் அது தொடர்பில் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
மே மாதம் 9 ஆம் திகதி தாக்குதல்களின் விளைவாக இன்று நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு இவ்வாறான அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை இந்த வெள்ளை நிற ஆடை அணிந்த மோசடி அரசியல்வாதிகள் உணரவில்லை. அப்படி உணர்ந்து இருந்தால் தனது உயர் குடி அரசியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகொரளவிற்கு மாத்திரம் அனுதாபம் கூறாது ஏனையவர்கள் தொடர்பிலும் அனுதாபம் தெரிவித்து இருப்பர்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள இந்த ' மேட்டுக் குடி அரசியல்' கலாசாரத்தை நொறுக்கி துண்டு துண்டாக்க வேண்டும்.
---------------------------
by (2022-05-21 05:16:50)
Leave a Reply