- லங்கா பிரீப்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 ஜூன் , 10, மு.ப. 8.45 ) மாத்தறை நகரில் வீதி மறித்து நின்று ஆர்ப்பாட்டம் செய்த குற்றச் சாட்டின் பேரில் மாத்தறையைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவருக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் மூன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் 56,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன் எடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் நீட்சியாகவும் இந்த போராட்டங்கள் அமைந்தன.
சொத்து சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மாத்தறை, மெத்தவத்தையில் வசிக்கும் ஈ.டி. நிரஞ்சன் லக்ஷன் ( 30 வயது ) என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே 640 லட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைையில் முக்கிய பதவி வகிக்கும் பிரசன்ன ரணதுங்க குற்றவாளியாக உறுதியாகி ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், மல்வான பங்களா வழக்கை தொடர முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்ததை அடுத்து, இந்த மாளிகையை நிர்மாணிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பசில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டார்.
மத்திய வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நாட்டை ஆட்சி செய்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு பசில் பல கோடி ரூபாவை வழங்கியதை ஒப்புக் கொண்ட திரான் அலஸ், பொலிஸ் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் அரசியல் அனுசரணையுடன் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமைக்காக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், போராட்டம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடன் தொடர்புடைய நபர் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் காலி முகத்திடல் போராட்ட காரர்கள்் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் யாரேனும இவர் சார்பாக ஆஜர் ஆனார்களா என்பது தெரிய வரவில்லை. இது போன்ற வழக்கை இவ்வளவு விரைவாக முடிப்பது மிகவும் கடினம்.
1971 எழுச்சியின் தோல்விக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட பலருக்கு இடை நிறுத்தப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது.
விதிகளை மறித்தல், பிரதமர் மாளிகை முற்றுகை, சுவர்களில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதுதல், ஜனாதிபதி செயலக முற்றுகை, பொலிஸ் தடைகளை தகர்த்தல்.
நீதிமன்ற விதிகளை மீறி ஊர்வலம் செல்வது போன்ற குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படலாம் என சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரணில் - கோட்டா பாரிய அடக்குமுறை இந்த நாட்டு மக்களின் உரிமைகளுக்கு பாரிய அடியாக அமையும் எனவும் எதிர்வு கூறப்படும் நிலையில் நெருக்கடியை எதிர்நோக்கி எதிர்ப்புகள் தீவிரமடையும் எனவும் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
வெற்றியின் விளிம்பில் ரணில் விக்கிரமசிங்கவின் துரோகச் செயற்பாடுகளாலும், ரணிலின் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களாலும், இடது சாரி அரசியல் கட்சிகள் பின்பற்றும் மத வெறிக் கொள்கைகளாலும் போராட்டம் வலுவிழந்து தோற்கடிக்கப்படுமாயின் பாரிய அடக்குமுறையின் முதல் அறிகுறி இதுவாகும் எனவும் போராட்டத்தை முடக்க முடியும் என்று மனித உரிமைக் குழுக்கள் அஞ்சுகின்றன.
---------------------------
by (2022-06-10 06:32:30)
Leave a Reply