- எழுதுவது சந்திரபிரதீப்
( லங்கா - ஈ - நியூஸ் - 2022 , ஜூன் ,13, மு.ப. 5.45 ) நாட்டு மக்களுக்கு முக்கிய மருந்து வாங்க ஒரு டொலர் கூட இல்லாத நிலையிலும் பல தசாப்தங்களாக நாட்டின் தேசிய செல்வத்தை கொள்ளை அடித்த துரோகி ராஜபக்ச குடும்பம் தற்போது மற்றும் ஒரு புதிய தீவை மாலைத் தீவு நாட்டில் வாங்கத் திட்டம் செயற்படுத்தி உள்ளது. மாலத் தீவில் இருந்து எமக்கு கிடைக்கும் தகவல் படி ராஜபஷ குடும்பம் அங்கு வாங்கப் போகும் மூன்றாவது தீவு இதுவாகும். இதற்கான முதற் கட்ட கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக கடந்த 5 ஆம் திகதி மாலைதீவு நோக்கி சென்ற ராஜபக்ச குடும்பத்தின் டீலர் உதித லொக்கு பண்டார கடந்த 12 ஆம் திகதி இலங்கை நாட்டுக்குத் திரும்பினார். ( ஆதாரமாக அவர் பயணித்த விமான டிக்கெட்டுகள் இங்கே காட்டப்பட்டுள்ளன. )
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற விவகார செயலாளர் உதித லொகு பண்டார அண்மையில் மஹிந்தவின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் மோசடி செய்ததாக ஊடகங்கள் ( லங்கா ஈ நியூஸ் அல்ல ) மக்கள் மத்தியில் செய்திகளை பரப்பி இருந்தன. உதித லொக்கு பண்டார ராஜபக்ஷக்களுடன் செய்த ஒப்பந்தங்களை மறைக்கவே இவ்வாறு செய்தி வெளியானது. ஆனால் உதித லொக்கு பண்டாரவுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் இடையிலான தற்போதைய பூசல் உண்மை என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. அது ஒரு வெறும் கண் துடைப்பு. அவர்களின் உறவு மறைமுகமாக சிறப்பாகவே உள்ளது.
மாலத் தீவு சுமார் 1192 தீவுகளைக் கொண்ட நாடு மற்றும் அவற்றின் தீவுகள் சுற்றுலா துறைக்காக நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வெளி நாட்டவர் அத்தகைய தீவை கொள்முதல் செய்ய வேண்டுமானால், உள் நாட்டு வணிகர் ஒருவருடன் கூட்டு முயற்சியாக இணைந்திருக்க வேண்டும். மாலத்தீவில் ராஜபக்ச குடும்பத்தின் பங்குதாரராக அந்த நாட்டின் நம்பர் ஒன் பில்லியனராக திகழும் சம்பா குழுமத்தின் உரிமையாளரான ' உச்சு ' என்ற மொஹமட் மூசா உள்ளார். ' எருதுகளுக்குத் தீனி போடும் அளவுக்குப் பணம் இருக்கிறது ' என மாலைத் தீவு நாட்டு மக்களால் அறியப்படும் நபர் மொகமட் மூசா ஆவார். இந்த ' உச்சு ' என்பவரும் ராஜபக்சக்களுக்கு ஏற்ற தொனியில் தாளம் போடக் கூடிய நபர். 3.5 மில்லியன் டொலர் பண மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக மாலைத் தீவில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், இலங்கையின் ஜனாதிபதி ஆணைக்குழு போன்றே அதுவும் நீர்த்துப் போனது.
ராஜபக்ச குடும்பம் ஏற்கனவே ' மொஹமட் மூசா ' அல்லது ' உச்சு ' என்பவர் மூலம் இரண்டு தீவுகளை மாலைத் தீவு நாட்டில் கொள்வனவு செய்துள்ளனர். இங்குள்ள புகைப்படம் அத்தகைய தீவில் ஒரு முழு அளவிலான விடுமுறை விடுதியைக் காட்டுகிறது. உச்சு என்பவருக்கு இத்தகைய 8 - 10 தீவுகள் சொந்தமாக உள்ளது. மாலத்தீவில் அதிக எண்ணிக்கையிலான கடல் விமானங்களை வைத்திருப்பவரும் உச்சு ஆவார். ( மாலைத் தீவில் தீவுகளுக்கு இடையே கடல் விமானத்தில் அதிகம் பயணம் செய்யப்படுகிறது ) அவரது முக்கிய தீவுகளில் ஒன்று " ஹுலுமாலே " தீவு மற்றும் அதன் சொகுசு ரிசார்ட் அல்லது ஹோட்டல் ஆகும். எமது கதையின் தலைவர் அல்லது ராஜபக்ச குடும்ப கொடுக்கல் வாங்கல் வியாபாரி உதித லொக்கு பண்டாரவும் கடந்த 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மேலே கூறிய ஹுலுமாலே தீவின் அதி சொகுசு விடுமுறை விடுதியில் தங்கி இருந்தார். ( அவர் அங்கு தொலைகாட்சி பார்க்கும் படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது ).
உதித லொக்கு பண்டார ராஜபக்சவின் சார்பாக ஹுலுமாலே தீவின் விடுமுறை விடுதியில் இந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளும் போது, ஷிரந்தி ராஜபக்ஷ ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதுக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவரை வழி நடத்தி உள்ளதாக தெரிய வருகிறது. பிராந்தி அதைப் பொய் என்று சொன்னால், உண்மையைக் கண்டு பிடிக்க உதித மற்றும் ஷிரந்தியின் தொலைபேசி அழைப்புக்களைப் சோதனை செய்யலாம்.
கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 12 ஆம் திகதி இலங்கை வந்த ராஜபக்ச டீலர் உதித லொக்கு பண்டாரவை அடித்து தூக்கி தொங்க விட்டு விசாரணை செய்தால் மாத்திரமே உண்மை தெரிய வரும். அதுவும் இல்லாமல் தரமற்றதாக இருக்கும் பொல்லாத சட்டத்தில் இருந்து உண்மையை அறிவது சாதாரண வார்த்தையில் சொன்னால் வெறும் 'சும்மா' கதை தான்.
மே 9 இரவுகள் எதிர்காலத்தில் அதிகமாக இருக்கலாம் ..! அது இன்னும் ஆபத்தாக முடியலாம் ..!
---------------------------
by (2022-06-14 08:18:28)
Leave a Reply