-மெதமுலன லங்கா ஈ நியூஸ் நிருபர் எழுதுகிறார்
( லங்கா - ஈ - நியூஸ் - ஜூன் 15 , 2022 , பி.ப. 8.10 ) மொட்டு கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இப்போது வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேதனையுடன் கூடிய நிலையில் வாழ்ந்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச என்ற அரசியல்வாதியும் தனி மனிதருமான அவருக்கு சமூக தொடர்பு மிகவும் அவசியமானது என்பது மஹிந்தவை பல வருடங்களாக அறிந்த பலருக்கும் நன்கு தெரியும். ஆனால் மகிந்த இப்போது மிகவும் தனிமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள வேறு ஒரு வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருக்கும் மகிந்த ராஜபக்ச சில சமயங்களில் கண்ணீரை மறைப்பதற்கு வீண் முயற்சிகளை மேற்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.
மகிந்த ராாஜபக்சவை அடிக்கடி பார்க்க வந்த எந்த அரசியல்வாதியும் இப்போது அங்கு வருவதில்லை. யோஷித ராாாஜபக்சவை பிரதமரின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல் மஹிந்தவை தனிமைப்படுத்த குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். நண்பர்களுடன் பேசவும், பழைய நினைவுகளை நினைத்து வாய் விட்டு சிரித்து பேசவும் விரும்பும் மகிந்த இன்று மிகவும் சோகமான வாழ்க்கையை நடத்தி வருகிறார். தினமும் மருந்து மாத்திரை, வைட்டமின்களை விழுங்கும் நடைப் பிணமாக இப்போது இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
மே 9 ஆம் திகதி யோஷித ராாாஜபக்ச, நாமல் ராஜபக்ஷ ஆகிய மகன்கள் செய்ற்படுத்திய முட்டாள்தனமான நடவடிக்கையின் பின்னர் தற்போது இரண்டு மூன்று பேர் தான் அவ்வப்போது மஹிந்தவை பார்க்க வருகிறார்கள். மலிது ரணசிங்க Oxford College of Business இன் உரிமையாளர் மற்றும் சிலர் மஹிந்தவை சந்திக்க வருகின்றனர்.
கடந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மஹிந்த ராாாஜபக்ஷவை மக்கள் சந்திக்க வருவதுடன் நெருங்கிய நண்பர்கள் அவற்றில் சில சிறப்பு வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் வந்தது வெறும் லாபத்திற்காக அல்லது முதலடு தொடர்பில் பேசுவதற்கு மட்டுமல்ல. மகிந்த மீதான உண்மையான அன்பின் காரணமாகவும் வந்தனர்.
அவர்களில் ' சலாஹுத்தீன் ' [ முஸ்லிம் ஹாஜியார் ] ஒரு முக்கிய சிறப்பு மிக்கவர். மஹிந்தவை பார்க்க உள்ளாடை முதல் வெளி ஆடை வரை அனைத்தையும் கொண்டு வருபவர் முஸ்லிம் ஹாஜியார் என்றால் நம்ப மாட்டார். ஆனால் மஹிந்தவை பார்க்க ஹாஜியார் வந்த நாள் இப்போது நினைவில் இல்லை.
நுகேகொடையில் உள்ள ' குட் ஹார்ட் மில்க் ' வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரும் மஹிந்தவின் நெருங்கிய நண்பரே. மகிந்தவின் அனைத்து ஆயுர்வேத மருந்துகளையும் தயாரித்தவர் 'ராஜபுர சந்தி எண்ணெய்' இவரது தயாாரிப்பு.
இந்த நண்பர்கள் யாரும் இப்போது மகிந்த ராஜபக்சவைப் பார்க்க அந்தப் பகுதியில் கால் வைப்பதில்லை.
பேருவளையைச் சேர்ந்த ' மர்ஜான் ஹாஜியார் ' இன்னொரு நபர். கடந்த தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ச தனது தினசரி காலை உடற் பயிற்சியை செய்யும் போது 50 மில்லியன் ரூபாவை கொண்டு வந்து கொடுத்த வேளை ' நாசிம் ' தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றம் செல்ல வேண்டும் என மஹிந்த தீர்மானித்து பசில் ராஜபக்சவை உடனே அழைத்து உறுதி அளித்தார். அன்று முதல் மகிந்தவிற்காக உயிர் கொடுக்கும் நிலையில் இருந்த நசீம் இப்போது மஹிந்தவின் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.
மஹிந்த வழங்கிய எத்தனோல்் உரிமத்தில்் பில்லியன் கணக்கில் உழைக்கும் மாத்தளையைச் சேர்ந்த வசந்த பெரேரா, ' சரவணபவன் ' ஹோட்டலில் இருந்து இந்திய உணவு வகைகளை எடுத்து வந்து மஹிந்தவை சந்திப்பார்் இப்போது யோஷிதவை நேரடியாகச் சந்தித்து வாராந்திர ஈவுத் தொகையை அவரது கல்கிசை வீட்டில் செலுத்துகிறார். ராஜபக்சவைை சந்திப்பதே கிடையாது.
மகிந்த ராஜபக்சவை மேலும் விரக்தியடையச் செய்யும் ஒரு சம்பவம் இப்போது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் மஹிந்த தமது பிள்ளைகளின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதை பாக்கியமாக கருதிய பலர் தற்போது முன்னைய அழைப்பிதழ்களை ரத்து செய்து வருகின்றனர். மகிந்தவுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தொலைபேசி அழைப்புகள் வருவதோடு, அந்தச் செய்தியைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் பெருகுகிறது.
அண்மையில் ‘ நிபுன ரணவக்க ’ வுடன் வந்த மஹிந்தவின் உறவினர், “ 5 மாதங்களுக்கு முன்னரே மகளின் திருமண நிகழ்விற்கு மஹிந்த சகோதரருக்குு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் இன்று இசைக் கலைஞர்கள் கூட மயினா கபுடா என பாடல்களைப் பாடி வருகின்றனர். மஹிந்த சகோதரர் வந்திருக்கும் போது அவ்வாறு பாடினால் அவருக்கு வெட்கமாக இருக்கும். அதனால் அவர் திருமண நிகழ்விற்கு வர வேண்டிய அவசியம் இல்லை " என்று கூறியுள்ளார்.
மல்வானைச் சேர்ந்த முஸ்லிம் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரும் தெஹிவளையைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்விற்கான அழைப்பிதழ்களை இரத்து செய்துள்ளனர்.
மகிந்தவின் கவலையைக் கண்ட நாமல் அண்மையில் ஷங்ரிலா ஹோட்டலில் தனது குடும்பம், மனைவிகள், பிள்ளைகள் ஐவர் கலந்து கொண்டு மஹிந்தவை மகிழ்விக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஹோட்டலின் பின் பக்கத்தில் உள்ள சீன உணவகத்திற்கு ஊழியர்கள் பயன்படுத்தும் லிஃப்ட் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட மகிந்த, ' பழுதுபார்க்க ' என்று கூறி உணவகத்தின் ஒரு பக்கத்தை மூடி விட்டனர். பின்னர் இதனை அறிந்த மகிந்த " எங்களுக்கு வீீீீதியில் இறங்கி செல்ல வழியில்லாமல் மிகவும் வருத்தமாக இருக்கிறது " என்று கூறி உள்ளார்.
இன்னும் ராஜபக்சக்களிடம் தான் அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது என்று நினைத்தாலும், உண்மையில் மகிந்த இப்போது ஊதிப் பெருக்கப்படும் பலூன் போல் இருக்கிறார்.
குறிப்பாக, தான் செய்த பாவங்களின் மலையை நினைத்து எந்த மனிதனும் எப்படி நிம்மதியாக தூங்க முடியும் ?
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட பத்தாம் ஆண்டு நிறைவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மகிந்த, ஷிரந்தி, யோஷித ஆகியோர் வசீமைக் கொன்ற கப்டன் திஸ்ஸவிடம் தொலைபேசி அழைப்பு எடுத்து, “ நாம் செய்த தீீய விஷயங்கள் எம்மை நோக்கி வாட்டுகிறது. செய்யும் முன் நீீங்களாவது யோசித்து இருக்கலாம் " என்று புலம்பி உள்ளார்.
---------------------------
by (2022-06-16 10:10:41)
Leave a Reply