(லங்கா ஈ நியூஸ் - 2024.ஜூலை.26, பி.ப.6.30) வடக்கு கிழக்கில் உள்ள பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தென்னிலங்கையில் உள்ள பிரதான போட்டியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று அறிவித்துள்ளார்.
சுமந்திரன் அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட பல பொதுக்கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமானதாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
---------------------------
by (2024-07-26 13:23:26)
Leave a Reply