(லங்கா ஈ நியூஸ் 2020 ஜனவரி 10 பிற்பகல் 08.00) தொலைபேசி குரல் பதிவுகள் காரணமாக சிக்கலில் விழுந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின்போது கோடீஸ்வர ஊழல்வாதிகளை காப்பாற்றவென உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் நீதி அமைச்சருக்கு கதைத்த தொலைபேசி அழைப்புகளை ஏன் வெளியிடாமல் உள்ளார் என சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லங்கா ஈ நியூஸ் இணையத்துக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் ராஜபக்சக்களின் யுகத்தின் போது கோடீஸ்வர ஊழல் வாதிகளான நிமல் பெரேரா, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திலீத் ஜெயவீர ஆகியோருக்கு நல்லாச்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்வைக்கப்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதன் நோக்கமாக ரஞ்சன் ராமநாயக்க முன்னிலை ஆகியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க மேற்கூறிய மூவரையும் காப்பாற்றுவதற்காக அப்போதைய FCID பொலிஸ் பிரிவின் பிரதான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவிற்கு பல தடவைகள் தொலைபேசியில் கதைத்து உள்ளார். எப்சிஐடி என்று சொல்லப்படும் விசேட நிதி மோசடி பிரிவிற்கு மாத்திரமன்றி அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் ரஞ்சன் ராமநாயக்க இதுதொடர்பில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் தற்போது இருக்கின்ற போதும் போலீசார் அதனை பகிரங்கப்படுத்த வில்லை. போலீசார் திடீரென ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்து பின்னர் நீதிமன்றில் பிணை வழங்கி வெளியில் வந்த ரஞ்சன் ராமநாயக்க 'பலரின் நல்ல பல குரல் பதிவுகள் என்னிடம் உள்ளன. அதை நான் எதிர்காலத்தில் வெளியிடுவேன்' என்று ஊடகங்களிடம் கூறினார். இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிந்தது போலீசாரிடம் உள்ள குரல் பதிவுகளின் மற்றுமொரு பிரதி ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருப்பது என்பதாகும்.
ரஞ்சன் ராமநாயக்க ரவி வித்தியாலம் கார விஜயதாச ராஜபக்ச போன்றோருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் மூலம் ராஜபக்ஷக்களுக்கு ராஜா அபிவிருத்தி ஏற்படும் என்பதால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதனை வெளியிடாமல் உள்ளனரா அல்லது ராஜபக்சக்கள் உடன் உள்ள டீல் தொடர்பு காரணமாக ரஞ்சன் ராமநாயக்க அதனை வெளியிடாமல் உள்ளாரா என சட்டத்தை மதிக்கும் போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எனினும் இந்த குரல் பதிவுகளை போலீசாரிடம் சிக்க வைத்துக்கொள்ள ரஞ்சன் ராமநாயக்க சதித்திட்டம் தீட்டியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சில தலைவர்கள் சந்தேகிப்பதாக லங்காஈநியூஸ் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
எனினும் நீதிமன்றம் போலீஸ் துறை போன்றவை சரியாக இயங்குவதில்லை மோசடி இடம் பெறுகிறது என வாய்க்கதர பேசிய ரஞ்சன் ராமநாயக்க வழக்குகள் தொடர்பில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் நீதிபதிகளுக்கும் தொலைபேசி மூலமாக கதைத்து அழுத்தங்களைப் பிரயோகித்து இருப்பது தற்போதைக்கு வெளியாகியுள்ள குரல் பதிவுகளிலிருந்து உறுதியாகிறது. எனினும் இதற்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அனுசரணை கிடைத்ததா என்பது இந்த குரல் பதிவுகளில் இருந்து கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. ரஞ்சன் முன்னாள் போலீஸ் அல்லது சட்டத் துறை அமைச்சரும் கிடையாது.
தொடர்புடைய செய்தி
---------------------------
by (2020-01-11 00:35:45)
Leave a Reply