ஜெயலர் பொட்டாவின் மற்றுமொரு வெளியீடு..
(லங்கா ஈ நியூஸ் 2020 பெப்ரவரி 17 பிற்பகல் 11.30) அண்மையில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட 'ஜனாதிபதி நந்தசேனவின் கண்ணுக்குப் படாத குடு துமிந்த மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோர் வழிநடத்தும் 'கெட்போய் காட்டெல்' பாதாள உலகம்..!' என்ற தலைப்பின் கீழான ஜெயிலர் பொட்டாவின் செய்தியை அடுத்து சிறைச்சாலையில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும் குழு மற்றும் அதற்கு உந்துதல் அளிக்கும் இலங்கையின் ஊடக மாபியாக்கள் கலக்கத்தில் உள்ளன.
இலங்கையில் போதைப் பொருள் மாபியா இயங்கும் அச்சாணியை கையில் எடுக்க வேண்டுமாயின் முதலில் போதைப் பொருள் மாபியாவின் தலைமையகமாக இயங்கும் கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். கொழும்பு சிறைச்சாலை என்பது இலங்கையின் மிகப் பெரிய போதைப் பொருள் விற்பனை நிலையம் ஆகும். போதை வில்லை, கொக்கைன் மற்றும் ஐஸ் (கிரிஸ்டல் மெத்) போன்ற போதைப் பொருட்களுக்கு மேலதிகமாக நாளொன்றுக்கு 500 தொடக்கம் 800 கிராம் அளவு ஹெரோயின் கொழும்பு சிறைச்சாலைக்குள் மாத்திரம் விற்பனை செய்யப்படுகிறது. போதைப் பொருள் மாபியா குழுக்கள் இந்த வியாபாரத்தின் மூலம் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகின்றன. போதைப் பொருட்கள் கொள்வனவு செய்ய இந்த அளவு பணம் சிறைக் கைதிகளுக்கு எங்கிருந்து வருகிறது என கேள்விகள் எழுப்பக் கூடும். சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை கொள்வனவு செய்ய கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த போதைப் பொருள்கள் ஈசி கேஸ் மற்றும் பண வைப்பு போன்ற முறைகள் மூலம் இடம்பெறுகிறது. சிறை கைதிகளின் உறவினர்கள் இந்த பணங்களை செலுத்துகின்றனர்.
ஏதோ ஒரு முறையில் கொழும்பு சிறைச்சாலைக்குள் நாளொன்றுக்கு கோடிக் கணக்கில் போதைப் பொருள் வியாபாரம் நடந்து முடிகிறது. ஊழல் நிறைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் போதைப் பொருள் பாதாள உலகக் குழுவினரை விடவும் இந்த மாபியாவில் பலாபலன் பெரும் மேலும் சிலர் உள்ளனர். அவர்கள் போதைப் பொருள் மாபியா தொடர்பில் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வரும் தேசிய பத்திரிகை என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் சிலவற்றில் எழுத்துப் பிள்ளைகள் ஆவர். இவர்கள் செய்யும் வேலைதான் சிறைச்சாலைக்குள் இருந்து தமக்கு தகவல் வழங்கும் போதைப் பொருள் மாபியா குழுவினருக்கு எதிரான பாதாள உலக குழுவினர் தொடர்பில் செய்திகளை எழுதி வெளியிடுவதாகும். ஊழல் நிறைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த எழுத்து பிள்ளைகளுக்கு போதைப் பொருள் மாபியா குழுவினரால் பணம் செலுத்தப்படுகிறது.
இலங்கையில் தற்போது துமிந்த சில்வா குழுவிற்கு மேலதிகமாக அங்கொட லொக்கா, மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரானும் அவருடன் இணைந்துள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைக்கு உள்ளே மற்றும் அதற்கு வெளியே செயல்பட்டு வருகின்றன. இலங்கையின் ஊடகங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாதாள உலகம் என பிரித்துப் பார்க்க முயற்சித்த போதும் இந்தக் குழுக்களில் அனைவரும் கலந்தே உள்ளனர். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். அதே போன்று இந்த பாதாள உலகக் குழுவின் உள்ளேயும் ஒருவருக்கொருவர் இணைந்து கொண்டாலும் அடித்துக் கொண்டாலும் இந்த அனைத்து குழுவினருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் 'தாவூத் இப்ராஹிம்' குழுவே போதைப் பொருள் விநியோகிக்கிறது. துமிந்த சில்வா குழுவுடன் நேரடி தொடர்பு வைத்துள்ள தற்போது சிறைச்சாலையில் உள்ள வெலே சுதா என்பவர் பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் குழுவில் இருக்கும் இலங்கையின் பிரபலமான நபர் ஆவார். இலங்கையில் விற்பனை செய்யும் பல வகையான போதை பொருட்களுள் வெலே சுதாவின் 'மாலுவா' என்ற சின்னம் பொறிக்கப்பட்ட போதைப் பொருளே இன்னும் பிரபலமாக விற்கப்படும் ஒன்றாக காணப்படுகிறது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் துமிந்த சில்வாவின் 'கெட்போய் காட்டெல்' பிரிவு அரசியல் பலத்தை கொண்டு தற்போது போதைப் பொருள் சந்தையில் தங்களது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக போராடி வருகின்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியை மேற்கூறிய எழுத்துப் பிள்ளைகள் மூலம் முன்னெடுத்துச் செல்கின்றனர். தற்காலத்தில் சிறைச்சாலைக்குள் கூடுதல் கவனம் கொஸ்கொட தாரக்க மீது செலுத்தப்படுகிறது. கொஸ்கொட தாரக்க என்பவர் துமிந்த சில்வாவின் 'கெட்போய் காட்டெல்' பிரிவை சேர்ந்தவர். கொஸ்கொட தாரக்க துமிந்தவின் சிறைச்சாலை சண்டியர். சிறைச்சாலை கைதிகளுக்கு இடம்பெறும் சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக கொஸ்கொட தாரக்க என்பவரை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் துமிந்த சில்வாவின் அரசியல் மற்றும் பண பலத்தினால் அந்த நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் மவுபிம பத்திரிக்கையில் செய்தியாளர் பிரசாத் அபேவிக்ரம எழுதிய செய்தியில் கொஸ்கொட தாரக்கவை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றும் திட்டம் தெமட்டகொட சமிந்தவின் ஆலோசனையின் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (குறித்த செய்தியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் https://mawbima.lk/news-more/50742)
அண்மைக் காலமாக குறித்த பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளில் கொழும்பு சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் விற்பனை செய்யும் துமிந்த சில்வாவின் ஆசீர்வாதம் பெற்ற தெமட்டகொட சமிந்த மற்றும் அவரது சகோதரரான தெமட்டகொட ருவான் ஆகியோரின் பிரிவுகள் அடங்கிய 'கெட்போய் காட்டெல்' தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன.
அருண் பத்திரிகையின் எழுத்துப் பிள்ளைகள் மற்றும் மவுபிம பத்திரிகையின் எழுத்துப் பிள்ளை பிரசாத் அபேவிக்ரம ஆகியோருக்கு தும்பர சிறைச்சாலையில் இருந்து கொழும்பு சிறைச்சாலை உள்ள துமிந்த செல்வா பிரிவு சார்பில் போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் தெமட்டகொட சமிந்த என்பவர் தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குகிறார்.
தெமட்டகொட சமிந்தவிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களைக் கொண்டு அவருக்கு சார்பான வகையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கதைகளை சோடித்து செய்திகளை எழுதும் இந்த இரண்டு செய்தியாளர்களுக்கும் அதிக சந்தோஷங்கள் கிடைக்கின்றன. கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுவினர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பில் சில பொலிஸாரும் ஊடகவியலாளர்களும் தாமரை மொட்டு கட்சியின் சிலரும் இணைந்து கதைகளை சோடித்தனர். தற்போது அந்த சோடிக்கப்பட்ட கதையை 'கெட்போய் காட்டெல்' பிரிவுக்கு எதிரான நபர்கள் மீது ஏவிவிட்டு அவர்களை இல்லாது செய்யும் செயலில் குறித்த செய்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அனைத்து கதை சோடிப்புக்கள் சூழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கு பின்னணியில் கொழும்பு சிறைச்சாலை மற்றும் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஏகாதிபத்தியவாதிகளாக துமிந்த சில்வாவின் 'கெட்போய் காட்டெல்' என்ற போதைப் பொருள் குழுவினரை மாற்றுவதாகும்.
அண்மையில் சிறைச்சாலையில் இருந்தபோது 'கெட்போய் காட்டெல்' குழுவினருடன் தனது நட்பை ஏற்படுத்திக் கொண்ட வியாபாரி ஒருவர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து அவரது பணத்தை முதலீடு செய்து சிறைச்சாலையில் கைதிகளுக்காக தொழில் பயிற்சி பாடநெறி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளார். இது மிகவும் விசேட வேலைத் திட்டமாகும். எனினும் வியாபாரி ஒருவர் இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவது சமூக சேவைக்காக அல்ல என்பதை இந்த சிறைச்சாலை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரும் அண்மைக்காலமாக கெட்போய் காட்டெல் குழுவினருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தற்போது 'கெட்போய் காட்டெல்' பிரிவுக்கு சொந்தமான போதைப் பொருள்கள் சில வைக்கப்பட்டிருக்கும் 'பாதுகாப்பு அரணாக' இந்த தேரருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள கொழும்பை அண்டி உள்ள பௌத்த விகாரைகள் சிலவற்றில் ஆகும். இந்த விகாரைகளில் தற்காலத்தில் சொகுசு தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் கோட்டாபயவுக்கு ஏற்றது போல வேலை செய்ய முடியாவிட்டால் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என கூறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஊடக மாபியாக்கள் மூலம் போதைப் பொருள் வர்த்தகம் குறித்து எழுதும் செய்தியாளர்கள் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரத்தை சமநிலை செய்யும் நோக்கில் செய்திகளை எழுதுவதாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சமநிலை செய்வது தொடர்ந்து நிலையாக வைத்திருப்பதன் நோக்கத்தில் ஆகும். ஆனால் செய்ய வேண்டியது அனைத்து போதைப் பொருள் மாபியாக்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தி அவர்களை அழிக்க வேண்டிய முயற்சிகள் ஆகும். ஆனாலும் ஊழல் அதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து மாத்திரமல்ல ஊழல் ஊடகவியலாளர்களிடம் இருந்தும் இதனை செய்ய வாய்ப்பில்லை.
முன்னே செய்தி
---------------------------
by (2020-02-17 19:32:39)
Leave a Reply