- எழுதுவது சந்திரபிரதீப்
(லங்கா ஈ நியூஸ் - 2021, மார்ச் 01, பிற்பகல் 11.50) உபாலி அபேரத்ன என்ற பிஸ்ஸு பூசா, தயா சந்திரசிறி ஜயதிலக ஆகிய ஓய்வு பெற்ற ஊழல் மிகுந்த நீதிபதிகளும் சந்திரா பெனாண்டோ என்ற ஓய்வு பெற்ற ஊழல் நிறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சத்தம்பியர்கள் மூவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமாயக்கவுடன் சேர்ந்து சிறை சோறு உண்ணும் நிலை உருவாகி உள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான இவர்கள் மூவரும் இணைந்து அண்மையில் வௌியிட்ட விசாரணை அறிக்கை பரிந்துரைகளில் உயர் நீதிமன்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சட்டத்தரணிகள் நால்வர் இணைந்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு உள்ள வரப்பிரசாதங்கள் மூலம் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிப்பு பெற்றுக் கொண்டார். ஆனாலும் தன்னைச் சுற்றி உள்ள கூட்டாளிகள் கூட்டத்தை வழக்குகளில் இருந்து மீட்கும் முகமாக 'அரசியல் பழிவாங்கல்' என்ற பெயரில் தனக்கு தேவையான மூன்று சத்தம்பியர்கள் அங்கிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட மறு நாளே லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் 'அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றதாக ஆராயா பச்சை ஊழல்வாதிகள் மூவர் அடங்கிய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு..! " என்ற தலைப்பில் செய்தி வௌியிட்டு அம்பலப்படுத்தியது. (செய்தி வாசிக்க - https://www.lankaenews.com/news/249/ta) அண்மையில் இறுதி விசாரணை அறிக்கையை இந்த ஆணைக்குழு ஜனாதிபதிடம் கையளித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு விசாரணையின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய மற்றுமொரு ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரியந்த ஜயரட்ன, ஹேமா குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் ரத்னபிரிய குருசிங்க என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும் உள்ளடங்குவர். இதில் பிரியந்த ஜயவர்த்தன என்பவர் பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணியாக செயற்பட்டதுடன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் திடீரென மேல் உயர்த்தப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முழு ராஜபக்ஷ ஆதரவாளர் ஆவார். அடுத்த உறுப்பினரான ஹேமா குமுதினி விக்ரமசிங்க சரத் நந்த சில்வா பிரதம நீதியரசராக கடமையாற்றிய போது அவரது விகாரை வேலைத் திட்டத்தில் நாடியாக இருந்த ஒருவர். அப்போது அவர் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ட சட்டத்தரணியாக இருந்தார். சரத் நந்த சில்வா அவரை மேலே உயர்த்தி மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதன் பின்னர் சூழ்ச்சிகளை செய்து தன்னை விட சிரேஸ்ட நபர்கள் இருந்த போதும் அவர்களை பின் தள்ளி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமுதினி நியமனம் பெற்றார். சீல் ஆடை வழக்கில் லலித் வீரதுங்க உள்ளிட்ட நபர்களை விடுதலை செய்து விடுவித்தது குமுதினி விக்ரமசிங்க ஆகும். அதன் ஊடாக அவரது தரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ரத்னபிரிய குருசிங்க என்பவர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்ட 11 நீதிபதிகளுள் ஒருவர் ஆவார். அதில் 9 பேர் சிரேஸ்ட நிலை அடிப்படையில் நியமிக்கப்பட்டதுடன் அவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக செயல்பட்டவர்கள். ஒருவர் பாராளுமன்றில் இருந்து உதவி செயலாளர் நாயகம் ஆவார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ஒருவர் ரத்னபிரிய குருசிங்க மாத்திரமே. அவர் ராஜபக்ஷ ஆதரவு சத்தம்பயராக இருந்த காரணத்தால் நியமனம் பெற்றுள்ளார். ஆனாலும் இந்த ஆணைக்குழு உறுப்பினர் நிலையில் இருந்து ரத்னபிரிய குருசிங்க தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதியாக கடமை புரியும் ஆர்.எம்.சோபித்த ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வேலைகளை குழப்பிக் கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த முதலாவது விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பது போல எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பிரஜா உரிமையை இரத்து செய்ய கோரும் அதிகாரம் அந்த ஆணைக்குழுவிற்கு இல்லை. அதனால் இரண்டாவது ஆணைக்குழுவை அவர் நியமித்துள்ளார். இவ்வாறான பரிந்துரைகளை தற்போது கடமையில் இருக்கும் நீதிபதிகள் அடங்கிய ஆணைக்குழுவிற்கே முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆணைக்குழு நாடகம் முடிவுக்கு வருவதாக இல்லை. ஜனாதிபதியின் அடியாள் உபாலி அபேரத்ன என்ற பிஸ்ஸு பூசாவின் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் சட்ட வல்லுநர் என்ற அடிப்படையில் கருத்து வௌியிட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஶ்ரீநாத் பெரேரா, சட்டத் துறையில் இவ்வாறான முட்டாள் அறிக்கைகள் எழுதப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்த விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், குற்றம் சுமத்திய சட்டத்தரணிகள், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் என அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள பிஸ்ஸு பூசாவின் ஆணைக்குழு அறிக்கை புத்தியுள்ள அனைவராலும் நிராகரிக்க வேண்டிய ஒன்றாகும். இது குறித்து கருத்து வௌியிட்டுள்ள சட்டத்தணிகள் இவ்வாறான பைத்திய ஆணைக்குழுக்களுக்கு இடமளித்தால் ஒருநாள் குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த நீதிபதியை குற்றவாளியாக அறிவிக்கும் அளவு பைத்திய ஆணைக்குழு செயற்பட வாய்ப்பு உள்ளதென தெரிவித்தார்.
இதன் பின்னணியில் பிஸ்ஸு பூசாவின் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து சட்டத்தரணிகள் நால்வர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆணைக்குழு நியமிக்க வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் படி அதிகாரம் இல்லாத ஆணைக்குழு கொலை குற்றவாளியான துமிந்த சில்வா என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ள விடயத்தை அடிப்படையாக வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட வழக்கு விசாரணை செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படவில்லை. பட்டப் பகலில் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரை கொலை செய்த குற்றத்தின் பேரில் மூன்று நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்டு துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் பிஸ்ஸு பூசா என்ற உபாலி அபேரத்ன உள்ளிட்ட மூன்று பைத்தியங்கள் துமிந்தவை விடுதலை செய்யுமாறு பரிந்துரை செய்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் பிரஜைகள் உரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இது தொடர்பில் ஆராயுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த மனுவை நாட்டில் பெயர் பெற்ற நான்கு சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணி அச்சலா செனவிரட்ன, சட்டத்தரணி சேனக்க பெரேரா, சட்டத்தரணி தம்பையா ஜயரட்னராஜா மற்றும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ (திருட்டு கும்பத்தில் உள்ளவர் அல்ல) ஆகிய நால்வரே மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, உபாலி அபேரத்ன, சந்திரசிறி ஜயதிலக மற்றும் சந்திரா பெனாண்டோ ஆகியோர் அடங்கிய ஆணைக்குழு பரிந்துரையில் நீதிமன்றிற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கிய தண்டனையை இவர்களுக்கு வழங்காமல் இருக்க முடியாது. உயர் நீதிமன்றம் தனது நீதிமன்ற கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் முழு வடிவம் கீழுள்ள படத்தில்.
---------------------------
by (2021-03-02 16:46:55)
Leave a Reply