~

இராணுவத் தளபதி செய்த விஸ்கி திருட்டின் நிறம் மறைவதற்கு முன்னர் மின்னேரிய காட்டில் யானை திருட்டு..! மோசடி நபரை விரட்டுவோம்..!

- எழுதுவது கீர்த்தி ரத்நாயக்க

( லங்கா ஈ நியூஸ் - 2021 , ஜூன் , 30. பிற்பகல் 06.05 ) வேலியே பயிரை மேய்தால் அது பயனற்ற வழக்காக மாறிவிடும். துறவி ஒருவரின் இலக்கு சன்னியாசம் அடைவதாக இருக்க வேண்டும். ஆனால் அதனை புறந்தள்ளி வைத்து விட்டு காம உலகத்தில் உலா வரும் துறவிகள் பலர் உள்ளனர். " ஐயோ பௌத்த தேரரே என்ன செய்தாலும் பரவாயில்லை விகாரையில் குழந்தைகள் உருவாக்க வேண்டாம் " போன்ற கதைகளை ஏதேனும் ஒரு நாளில் கேட்கக் கிடைத்தால் அது அவலமாகும்.

இராணுவ வீரர்களின் முழு முதல் கடமை நாட்டை பாதுகாப்பது ஆகும். நாட்டை பாதுகாக்கும் கடமையை புறந்தள்ளி வைத்து விட்டு  பைத்தியம் விளையாடும் இராணுவ வீரர்கள் ஒருவர் இருவர் இருக்கத்தான் செய்வர். ஆனால் நாட்டின் இராணுவத் தளபதி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு மோசமான ஒழுக்கமற்ற நடவடிக்கையில் இருந்தால் அது மிகவும் அவலச் செயலாகும். நாட்டின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சட்டத்துடன் விளையாடி திருடன் மற்றும் ஒரு குண்டர் போல் செயற்பட்டு வருகிறார். இராணுவத் தளபதியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐயோ ! இது அவலத்திலும் அவலமான நிலையாகும்.

யானை திருட்டுக்கு கட்டளை இட்டது சவேந்திர சில்வாவே ...

லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் இதற்கு முன்னர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்களை முன் வைத்தோம். அதில் இருந்த பல விடயங்கள் நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அத்தனை குற்றச்சாட்டுக்கள் உள்ள சவேந்திர சில்வா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிவில் அமைப்புக்கள் பல உள்ளன. அதில் ' வியத் மக ' அமைப்பும் உள்ளடங்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றில் ஆற்றிய முதல் உரையில் சவேந்திர சில்வாவின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவும் சவேந்திர சில்வா குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் சட்டத்தை நாய்க்கு வீசி விஸ்கி திருட்டில் ஈடுபட்டது லக் சதோச நிறைவேற்று அதிகாரி அநுர பண்டிதகே மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் மோசடிகாரன் அநுர பண்டிதகேவும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஆவார். ஐயோ ..! ஜெனரல் சவேந்திர சில்வா தன் மீதான திருட்டுக் குற்றச்சாட்டின் சூடு தனிவதற்கு முன்னர் மின்னேரிய வனத்தில் யானை குட்டிகளை திருடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.  

சவேந்திர சில்வா ஊழல் மற்றும் மோசடியை வாழ்க்கையில் பழக்கப்பட்டுத்திக் கொண்ட குண்டர் ..  

சவேந்திர சில்வா என்பவர் ஊழல் மற்றும் மோசடியை வாழ்க்கையின் வழக்கமாகக் கொண்ட ஒருவர். மின்னேரியா மற்றும் கலாவெவ வனத்தில் இடம்பெறும் யானை குட்டி திருட்டு குறித்து சவேந்திர சொல்வது முட்டாள் கதையாகும். யானை குட்டி திருட்டுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்த திருட்டில் ஈடுபட்டது மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க எனவும் சவேந்திர சில்வா கூறுகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் ஞானா அக்காவை சந்திக்க ஆலயத்திற்கு செல்லும் போது  மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்கவை அழைத்துச் செல்வதாகவும் அவர் கோட்டாபய ராஜபக்ஷவின் நண்பர் எனவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன் மூலம் யானை குட்டி திருட்டின் பின்புலத்தில் கோட்டாபய இருப்பதாக சவேந்திர சில்வா மறைமுகமாக சொல்லாமல் சொல்கிறார். சவேந்திர சில்வாவின் கதை முட்டாள் தனமான பொய்யாகும். கலாவெவ மற்றும் மின்னேரிய வனப்பகுதி யானை குட்டி திருட்டின் பிரதான சூத்திரதாரிகள் சசேந்திர ராஜபக்ஷ மற்றும் தெல பண்டார ஆகியோர் ஆவார். கோட்டாபய ராஜபக்ஷ பிரதான சூத்திரதாரி அல்ல. சசேந்திர மற்றும் பண்டாரவுடன் இணைந்து யானை திருட்டுக்கு இராணுவத்தை அனுப்பியது சவேந்திர சில்வா ஆவார்.

யானை குட்டி திருடுவது இடி விழும் குற்றமாவது ஏன் ?

திருடப்படும் யானை குட்டிகளின் சந்தை விலை பெறுமதி கொஞ்சம் அல்ல. யானை குட்டி ஒன்றை 2 கோடிக்கும் அதிக பெறுமதிக்கு விற்பனை செய்ய முடியும். 2005 - 2014 ஆட்சி காலத்தில் ( ராஜபக்ஷ காட்டு ஆட்சி யுகம் ) யானை குட்டி திருட்டு சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை கிடைத்தது. திருடப்படும் யானைக் குட்டிகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது  MSD - அமைச்சு பாதுகாப்பு பரிவு அல்லது PSD ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பாதுகாப்பு கிடைக்கும். திருடப்படும் யானைக் குட்டிகளுக்கு போலி அனுமதிப் பத்திரம் தயாரித்தனர். இந்த போலி அனுமதிப் பத்திரங்கள் குறித்து வன ஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்கும் போது யானை பதிவு குறிப்பு புத்தகம் (யானை குறிப்பு) காணாமல் போனது. இலங்கையில் டேம் யானைகளில் 99% இருப்பது போலி அனுமதிப் பத்திரங்களே. அப்போதைய துறைக்கு பொறுப்பான அமைச்சர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் யானை விற்பனையின் அளவுகளை கணித்துக் கொள்ள முடியும்.  

யானை இயற்கையின் அற்புதமான படைப்பாகும். அவர்கள் தங்கள் பங்குதாரர் மற்றும் குழந்தைகளுடன் வரம்பற்ற பிணைப்பைக் கொண்டுள்ளனர். அது மனித குடும்பத்தில் காணப்படும் பிணைப்பை விட அதிகமாகும். ஒரு யானை ஒரு யானை கன்றுக் குட்டியைப் பெற்று எடுக்கும் போது, மந்தையில் உள்ள அனைத்து யானைகளும் அதற்கு பால் கறக்கின்றன. அதனால் குட்டி யானைகள் காணமல் போவது பெற்றோர் யானைகளுக்கு தாங்கி கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது. அதனால் தான் யானை குட்டி ஒன்றை திருடுவது இடி விழும் குற்றமாகக் கருதப்படுகிறது.

வன விலங்கு வியாபாரமும் கூட GSP+ இழப்பு ஏற்பட காரணமாகக் கூடும் ..

யானை குட்டிகளை திருடுவது குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்றச் செயலாகும். இது மனித குலத்தை இழிவுபடுத்தும் ஒரு அநாகரீக செயலாகும். அத்துடன் சுற்றாமல் மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான சர்வதேச பிரகடனத்தை மீறும் நடவடிக்கையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை காணப்படுவதால் சுற்றாடல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு பிரகடனத்தை பாதுகாத்து செயற்பட வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்து தற்போது சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கை வன விலங்குகள் பாதுகாப்பு பிரகடனத்தை புறக்கணித்து 'மாபியா அரசாக' செயற்பட்டால் அதனை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. மிக விரைவில் சுற்றாடல் மற்றும் வன விலங்கு அழிப்பு தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படக் கூடும். மனித உரிமைகள் மீறல் மாத்திரம் அன்றி சுற்றாடல் மற்றும் வன விலங்கு அழிப்பு விடயமும் இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை இல்லாது போவதற்கு காரணமாக அமைந்து விடும்.

விஸ்கி திருட்டை மூடி மறைத்தது போன்று யானை குட்டி திருட்டை மூடி மறைக்க முடியாது ..

அண்மையில் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் வன விலங்கு மற்றும் சுற்றாடல் அழிப்பு குற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை போன்ற ஏழ்மையான நாடுகளுக்கு உலக வங்கி, IMF, ADB, EU, JICA போன்ற நிறுவனங்களில் உதவிகள் இன்றி நிலைத்து நிற்க முடியாது. இலங்கையின் ஏற்றுமதிகளில் 25% ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்கிறது. 9% இங்கிலாந்து சந்தைக்கு செல்கிறது. இந்த நாடுகளுடன் பிரச்சினை இன்றி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டுமானால் வன விலங்கு பாதுகாப்பு சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச பிரகடனத்தை இலங்கை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும்.  விஸ்கி திருட்டை மூடி மறைத்தது போன்று யானை குட்டி திருட்டை இலகுவில் மூடி மறைக்க முடியாது. யானை குட்டி திருட்டு என்பது சர்வதேச பிரகடனத்தை மீறிச் செயற்படும் ஒன்றாகும். அதனால் வன ஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் இணைந்து முன்னெடுத்த யானை குட்டி திருட்டு குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வேலியே பயிரை மேயும் வேலையை செய்தால் பயிரை குணப்படுத்த முதலில் செய்ய வேண்டியது பயிரை மேயும் வேலியை கழற்றி அகற்றுவதாகும்.  அதன் பின்னர் ஏனைய பிரச்சினைகள் குறித்து பார்த்துக் கொள்ளலாம். ..!

- எழுதியது கீர்த்தி ரத்நாயக்க

முன்னாள் விமானப் படை புலனாய்வு அதிகாரி

யானை குட்டி திருட்டுக்கு முன்னர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக நாம் முன் வைத்த குற்றச்சாட்டு பட்டியலை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்.
https://www.lankaenews.com/news/437/ta

---------------------------
by     (2021-07-02 23:17:22)

We are unable to continue LeN without your kind donation.

Leave a Reply

  0 discussion on this news

News Categories

    News

    Political review

    more

Links